இலங் கையில் யுத்த சூழல் உக்கிரமடைந்துள்ளதால் அத்தியாவசிய தேவையைத் தவிர, வேறெந்த காரணங்களுக்காகவும் இலங்கை செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியம், தனது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் தற்போது வதியும் ஐக்கிய அரபு இராச்சிய பிரஜைகள், உடனடியாகத் தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டு, தமது தொடர்பு இலக்கங்கள், முகவரிகள் போன்ற விவரங்களை அறியத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.