இலங்கையில் மோதல் பகுதியில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாடுகளில் கடும் கவலை தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை நிலைவரம் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, யுத்தநிறுத்த அழைப்புக்கு 24 மணி நேரத்திற்குள் இலங்கை அரசாங்கம் பதிலளிக்காவிடின் பொது நலவாயத்திலிருந்து இலங்கையை இடைநிறுத்துவதற்கான அழைப்பை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் விடுக்க வேண்டும் என்று தொழிற்கட்சி எம்.பி.ஜோயன் ரியான் தெரிவித்திருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகையான “சண்டேரைம்ஸ்’ நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.