வருண் காந்தி பேசிய பேச்சு வருத்தம் தருகிறது. அவர் முதலில் பகவத் கீதைய சரியாக படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்திரா குடும்பத்தின் பாரம்பரியத்தை சிதைப்பது போல உள்ளது வருணின் பேச்சு என்று வருணின் பெரியம்மா சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
தனது தாயார் போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு விசிட் அடித்துள்ளார் பிரியங்கா. அங்கு தொகுதி மக்களை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பக்கத்தில் இருக்கும் தம்பி ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிக்கும் பிரியங்கா செல்கிறார்.
ரேபரேலி வந்த பிரியங்காவிடம், வருண் காந்தி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த பிரியங்கா, வருண் காந்தி பேசியது நிச்சயம் இந்திரா குடும்பத்தின் கொள்கைகளுக்கும், பாரம்பரியத்திற்கும் உகந்ததல்ல, அவற்றுக்கு முரணானது. வருண் இப்படிப் பேசியிருப்பதைப் பார்த்து நான் வருத்தமடைந்தேன்.
வருண் பகவத் கீதைய முழுமையாக படித்து, அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என நான் அட்வைஸ் செய்கிறேன் என்றார் பிரியங்கா.
பல்லி
கீதையை படித்ததால் தான் தங்கள் அன்னை இப்படி ஈழ தமிழரின் உயிருடன் விளையாடுகிறாரா என வருண் கேட்டால் தங்களிடம் பதில் இருக்கா?? ஆக கீதயை படித்தாலும் சரி குறானை படித்தாலும் சரி ஏன் பைபிளை கற்று கொண்டாலும் சரி முதல் மனிதனாக இருக்க வேண்டும் அப்போதுதான் படித்ததை செயல்படுத்த முடியும். அந்த வகையில் இந்திரா குடும்பம் எதை படித்தும் பிரயோசனம் இல்லை. காலத்துக்கு காலம் நபர் மாறுபடுகிறாரே தவிர அவர்கள் தாந்தோன்றிதனம் விட்ட பாடாயில்லை. இது நேரு முதல் வருண் வரை பொருந்தும்.
BC
பல்லி எல்லோரும் படித்து பயன் பெற வேண்டியது வேண்டியது தலையின் உரை.
மனித துயரங்களெல்லாம் அடங்காத அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன.
ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன.
ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.
இது எப்படி?
பல்லி
பி சி பல்லிக்கு புரியவில்லை
திரும்பவும் விளக்கவும் நன்றி.
BC
பல்லி, தலைவர் மனித துயரங்களெல்லாம் அடங்காத அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன என்று தத்துவம் எல்லாம் சொல்லி கொண்டு மக்கள் உயிருடன் விளையாடுகிறாரே அதனால் வந்த விரக்தியில் தான் அப்படி சொன்னேன்.