அரசாங்க சுகாதார சேவைக்கு 1625 தாதியர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிய மனக் கடிதங்கள் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று (23ம் திகதி) கொழும்பில் வழங்கப்படவிருக்கிறது.
மருதானை, எல்பின்ஸ்டன் திரையரங்கில் காலை 10.00 மணிக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் இத்தாதிரியருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. இன்று நியமனம் பெறுபவர்களில் 110 தாதியர் வடமாகாண ஆஸ்பத்திரிகளிலும், 260 தாதியர் கிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளிலும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேநேரம் 28 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு 25 சிங்கள மொழி தாதியர் கடமைக்கென நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.