’’இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே நமக்கு உரிமையான கச்சத்தீவு பகுதியை புனிதப் பகுதியாக அறிவிக்க இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இப்பிரச்சினையை இலங்கையில் உள்ள எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவும் எழுப்பியுள்ளது.
பாரம்பரிய ரீதியாகவும், வரலாற்று அடிப்படையிலும், ஆவணங்கள் அடிப்படையிலும் இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை புனித பகுதியாக இலங்கை அரசு அறிவிக்கக் கூறுவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இந்தியாவை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பு குறித்து பேசுவது பன்னாட்டு சட்டங்களுக்கு முரணானது’’ என்று மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
பார்த்திபன்
வைகோ அண்ணை; இந்திராகாந்தி கச்சதீவை சிறிமா காலத்தில் இலங்கைக்கு எழுதிக் கொடுத்ததை நீங்க அவ்வளவு சீக்கிரம் மறந்து போனீங்களோ?? உங்களுடன் இருந்த பல சீனியர் தலைவர்கள் இன்று படிப்படியாக உங்களைவிட்டு வெளியேற அதாலை உங்களுக்கும் “செலக்டிவ் அமீனீசியா” வந்து விட்டதோ?? எதற்கும் உங்க டாக்டரைப் பாருங்கள். நான் குறிப்பிடுவது டாக்டர் இராமதாஸை அல்ல. உங்க குடும்ப வைத்தியரை.
Kullan
கச்சைதீவு இந்தியாவுக்கா இலங்கைக்கா சொந்தம் என்பதை விட அது தமிழருக்கே சொந்தமானது என்பது தான் உண்மை. இலங்கையின் நாக இனத்தோன்றல்களான தமிழர்களுக்கு உரியது . கச்சைதீவும் நாகதீபத்துக்குள் அடங்குகிறது. அங்கே இன்று ஒரு கிறிஸ்தவத்தேவாலயம் இருக்கிறது. அதைப் புத்த விகாரையாக்காது விட்டாலே பெரும் புண்ணியம்