வர்ஷாவின் படுகொலை குறித்த விசாரணைகள் எக்காரணங் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது.

Regie_Varsa திருகோணமலைப் பிரதேசத்தில் வர்ஷா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட மாட்டாதென ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தனா தெரிவித்துள்ளார் வர்ஷா படுகொலைச் சம்பவத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக கண்டு பிடித்த உயர் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய சதித்திட்டம் இடம்பெறுவதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் எந்த காரணத்திற்காகவும் இடைநிறுத்தப்பட மாட்டாது என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் இடமாற்றம் குறித்து எவ்வித கருத்தையும் அவர் வெளியிடவில்லை. ஒரு காவல்துறை அதிகாரியின் இடமாற்றத்தினால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    பல்லி மீது சர்வதேச கோட்டில் வழக்குபோட முற்பட்ட முற்போக்கு வாதிகள் இந்த சிறுமியின் பிரச்சனையில் பிற்போக்கு வாதிகளாக இருப்பது ஏன்?? தினேஸ் உன்மையாக செயல்படுங்கள். மக்கள் எப்போதும் உங்களை நன்றி உடையவர்களாக இருப்பார்கள். நீங்கள் அந்த விடயத்தில் இருந்து விலக்கபட்டால் இந்த விடயத்தில் உள்ள உன்மையை சர்வதேசத்திடம் ஏதோ ஒரு வழியில் தெரியபடுத்துங்கள். உங்களை தொடர்பு கொள்ள பல்லி தயார்.

    Reply
  • raj
    raj

    உண்மையில் கண்டிக்க படவேண்டியது அத்தோடு வெட்டகப்பட வேண்டியதுமனா ஒரு நாகரிகம் அற்ற செயல். இவர்கள் திருந்த மாட்டார்கள். ஏன் என்றால் ஒரு இனத்தை சேர்ந்த போராளிகளை அதாவது முன்னர் ரெலோவினரை சுட்டு கொழுத்திய வழியில் வந்தவர்கள் இவர்களுக்கு எப்படித் தெரியும் மனித உயிரின் பெறுமதி. இவர்களை உண்மையில் கடவுள் தான் தண்டிக்கவேண்டும். இலங்கை சட்டம் தண்டிக்கும் எனபது பொய். அரசாங்கம் இதற்கு அதாவது இக்கொலைகளுக்கும் அரசுக்கும் நெருங்கிய தொடர்புகள் நிறைய உண்டு இதற்கு எம்மவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தி சரியான முறையில் நடந்து கொள்ளவேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    குறிப்பிட்ட அந்த காவற்துறை அதிகாரி கண்டுபிடித்த உண்மைகளுக்காக அவர் இடம் மாற்றம் செய்யப்படுகின்றாரென்றால் நிச்சயம் அரசு யாரையோ காப்பாற்ற முனைகின்றதென்றே ஊகிக்க வேண்டிவருகின்றது. இப்படியான செயற்பாடுகளினால் அரசாங்கம் கிழக்கு மக்களின் வெறுப்பைத் தான் சந்திக்க வேண்டிவரும். உண்மையில் அரசாங்கமும் கிழக்கு மாகாண அரசும் நேர்மையாக நடந்து உண்மைகளை வெளிக் கொணர உதவ வேண்டும்.

    Reply