அமெரிக்கா- இரான் இடையிலான முப்பது ஆண்டுகால பகைமை மற்றும் நம்பிக்கையின்மையை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ள கருத்தை இரானிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் வரவேற்றுள்ளார்.
”ஆனால் வாஷிங்டனின் நிலைப்பாட்டு மாற்றம் வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல் நீடிக்கவேண்டும், தம்முடைய கடந்தகால தவறுகளை அது அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்கா அப்படிச் செய்யும் பட்சத்தில் இரான் தனது முகத்தைத் திருப்பிக்கொள்ளாது” என்று அலி அக்பர் ஜவான்ஃபகிர் கூறியுள்ளார்.
இரானிய புத்தாண்டை முன்னிட்டு அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்துச் செய்தியில், இரானுடன் நேர்மையாகவும் பரஸ்பரம் மரியாதையுடனும் உறவுகளை முன்னெடுக்க தான் விரும்புவதாகக் கூறியிருந்தார்.