அக்கு ரஸ்ஸ கொடபிட்டிய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார் மாத்தறையில் பிச்சை எடுத்துவரும் 13 வயது சிறுவனிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட நபரின் புகைப்படத்தை பத்திரிகையில் தான் பார்த்ததாகவும் அவர் மாத்தறையில் பிச்சைக்காரர் தங்கும் சிறிய மதுரைக் கட்டிடத்தில் தங்கியிருந்தார் எனவும் அச்சிறுவன் கூறியுள்ளான் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நபர் தனது பெயரை சமன் என்று கூறினார். ஒரு மாதத்துக்கு முன்னர் அங்கு வந்து தங்கியிருந்தார். அவர் சிங்களத்தில் உரையாடுவார். மாத்தறையில் படையினர் பயிற்சி செய்வதையும், மாத்தறை மகாநாமப் பாலத்தையும் அவர் அடிக்கடி பார்த்துவந்தார். அவருக்குப் புஷ்பகுமார் என்ற நண்பர் ஒருவர் உதவி வந்தார். இருவரும் சிங்களத்தில் உரையாடுவார்கள்.
இருவரின் நடவடிக்கைகளையும் அவதானித்து வந்தபோது அவர்களில் சந்தேகம் ஏற்பட்டது. வெலிகம பகுதிக்குப் பிச்சை எடுக்க இருவரும் போனபோது நானும் அவர்களுடன் போனேன். ஆனால் வெலிகம பொலிஸார் அதனைப் பொருட்படுத்தாமல் எம்மைப் போகும்படி கூறிவிட்டனர்.
அவர்கள் இருவரும் வெலிகம பகுதிக்கு பிச்சை எடுக்க வந்தபோது நானும் அவர்களுடன் சேர்ந்து வந்திருந்தேன். வீட்டில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு இங்கு வந்து பிச்சை எடுத்து வாழ்கின்றேன் எனவும் அச்சிறுவன் மேலும் தெரிவித்துள்ளான். விசாரணையின் பின்னர் சிறுவன் விடுவிக்கப்பட்டான்.