ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் தொடர்பாக விவாதிப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்கே மோதல்கள் காரணமாக பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் வாதிப்பதற்ற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
எனினும் சீனா ‘இது இலங்கையின் உள்விவகரம்’ எனவும் ‘இதனால் சர்வதேச சமூகத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை’ எனவும் தெரிவித்து பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் கலந்துரையாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
Kusumpan
‘இதனால் சர்வதேச சமூகத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை’
அப்படியானால் சர்வதேச சமூகத்துக்கு அச்சுறுத்தல் இருந்தால்தான் விவாதிப்பீர்களோ? பானாம் எயர் கவிட்டபின்புதானே உலகநாடுகளின் பார்வை பாலஸ்தினத்தை நோக்கித்திரும்பியது. இக்கூற்றை புலிகள் கவனிப்பார்களா?
accu
//பானாம் எயர் கவிட்டபின்புதானே உலகநாடுகளின் பார்வை பாலஸ்தினத்தை நோக்கித்திரும்பியது. இக்கூற்றை புலிகள் கவனிப்பார்களா?// குசும்பன் புலிகள் தம் வீட்டு முற்றத்தில் வந்து நின்று முகத்தில் குத்தும் இராணுவத்தைச் சமாளிக்க முடியாமல் அம்மா காப்பாற்று, ஐயா காப்பாற்று எனக் கத்தும் போது நீங்கள் வேறு. அவர்களின் நிலங்கள், பலங்கள் எல்லாம் சுருங்கி இந்த நிலையில் எழுப்புங்கோ கவிழுங்கோ என்பது உங்களுக்கே நல்லாப் படுகுதா?