இலங்கை அணி வீரர்களில் திலான் சமரவீர நவலோக்க தனியார் மருத்துவ மனையிலிருந்து சிகிச்சைப்பெற்று வெளியேறி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ்ஸின் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அணியின் பயுற்றுவிப்பாளர் உட்பட 6 வீரர்கள் காயமடைந்தனர்.
திலான் சமரவீர தொடர்ந்தும் நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது காலில் காணப்பட்ட துப்பாக்கி ரவை சிறிய சத்திர சிகைச்சை மூலம் அகற்றப்பட்டு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள திலான் சமரவீர ஏப்ரல் மாதமளவில் பயிற்சிகளை ஆரம்பிப்பார் என அவரது முகாமையாளர் ஒஸெஇன் சாளி தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.