முல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிக்குண்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி இராணுவத்தின் மூன்று படையணிகள் தீவிர முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.
55, 58 மற்றும் 8ஆவது விஷேட படையணியினரே இந்த தீவிர முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு மற்றும் சாலை தெற்குப் பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இருதரப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவிக்கினறது