யாழ்ப்பாணத் துக்கான ரயில் சேவை ஆரம்பிப் பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன. வடக்கிற்கான ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான தேசிய செயலகமொன்றை அன்றைய தினம் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.
யாழ். தேவி சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட் டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்பட உள்ளதோடு இதனூடாக யாழ்ப்பாணம் வரையான 37 ரயில் நிலையங்கள் மீளமைக்கப்படவுள்ளன.
இந்தப் பூர்வாங்க பணிகள் இன்று (19) இடம் பெற இருந்தபோதும் தவிர்க்க முடியாத காரணங்களினால் 23 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.