அவசியமற்ற வகையில் புதிய நியமனங்கள் வழங்குவதை உடன் நிறுத்த வேண்டுமென அரசாங்கம் மாகாணசபைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அவசியமற்ற நியமனங்களை வழங்கி குறுகிய அரசியல் இலாபம் பெற சில அரசில்வாதிகள் முயல்வதால் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.