மன்னார் பொலிஸ் நிலையத்தில் இயங்கும் பொலிஸ் பொதுமக்கள் தொடர்பு பிரிவும் மன்னார் சர்வோதயம் ஆகியன இணைந்து இன்று வியாழக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் நடமாடும் சேவையினை மேற்கொள்ளவுள்ளன..
இந்நடமாடும் சேவையின் போது தேசிய அடையாள அட்டைகளை பெற்று கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இன்று காலை 9 மணிமுதல் மாலை 05 மணிவரை இடம் பெறவுள்ளது இந்த நடமாடும் சேவையில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனில் ஜெயமஹா பொலிஸ் அத்தியட்சர்கள் வசந்த விக்ரமசிங்க,உதவி பொலிஸ் அத்தியட்சகர் T.D.L.R ஹசன் பொலிஸ் பொதுமக்கள் தொடர்பதிகாரி கருணா திலக்க மற்றும் திணைக்கள்கங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.