வன்னி மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் பாரபட்சமற்ற தாக்குதல்கள் பற்றி விருதுகள் பெற்ற யுத்தச் செய்தியாளர் மேரி கொல்வின் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றக் கட்டிடத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கியது மட்டுமல்ல பிரித்தானியாவின் தேசிய நாளிதலான சண்டே ரைம்ஸ் பத்திரிகையிலும் விரிவாகவே எழுதி உள்ளார். இலங்கை இராணுவத்தின் பிடியில் தமிழர்கள் எதிர்நோக்கக் கூடிய இன்னல்கள் பற்றி அவர் யாரிடமும் கேட்டு அறிய வேண்டிய தேவை இருக்கவில்லை. 2001ல் வன்னிப் பகுதிக்குள் சென்று திரும்பியவர் இராணுவத்தின் பிடியில் ஏற்பட்ட சொந்த அனுபவமே தமிழர்களின் நிலையை விளக்க போதுமானதாக இருந்தது.’The Forgotten Conflict in Sri lanka’ என்ற தலைப்பில் மார்ச் 17 நடைபெற்ற விசேட கருத்தரங்கில் மேரி கொல்வின் வன்னி மக்களின் அவல நிலைபற்றி எடுத்துக் கூறினார். அமெரிக்க ஊடகவியலாளரான மேரி கொல்வின் பிரித்தானிய தேசிய நாளிதலான ரைம்ஸ் பத்திரிகையில் பணிபுரிகிறார்.
200 000 பேர் வரையானவர்களை புலிகளே தடுத்து வைத்துள்ளனர் என்ற இலங்கை அரசின் பிரச்சாரத்தை நிராகரித்த அவர் வன்னி மக்களுக்கு இலங்கை இராணுவத்தின் மீதுள்ள பீதி பயம் அவர்களைப் புலிகளுடனேயே செல்ல நிர்ப்பந்தித்தாகவும் கூறினார். புலிகள் தங்களைப் காப்பவர்கள் என்ற எண்ணமே வன்னி மக்களிடம் இருப்பதாகவும் அவர்களிடம் பெரும்பாலும் புலிகளுக்கான ஆதரவு இருப்பதாகவும் மேரி கொல்வின் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்கள், மனிதாபிமான அமைப்புகள் அனைத்துக்கும் இலங்கை அரசு தடைவிதித்துள்ள நிலையில் ஊடகங்கள் வன்னி யுத்தம் பற்றி செய்திகளை வெளியிட இயலாத நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டிய மேரி கொல்வின் ஊடகங்கள் – தாங்கள் அங்கு நின்று செய்திகளை வெளியிடவே விரும்பவதாகவும் ஆனால் அதற்கு தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் பாராமுகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் பிரித்தானியாவிற்கு காலனித்துவ பொறுப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இக்கருத்தரங்கை All Party Parlimentary Group for Tamils அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கிற்கு இவ்வமைப்பின் முக்கியஸ்தரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியஸ்தருமான சென் கந்தையா தலைமை தாங்கினார். வன்னி மக்களின் நிலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகள் எதுவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் ஆயினும் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சென் கந்தையா தெரிவித்தார். காஸாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலை 22 நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த சர்வதேச சமூகம் அதனிலும் மோசமான யுத்தம் நடைபெறும் வன்னியில் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். இலங்கை அரசாங்கம் பிரச்சார ரீதியில் நங்களிலும் பார்க்க முன்னுக்கு நிற்பதையும் சென் கந்தையா சுட்டிக்காட்டினார்.
சென் கந்தையாவின் தலைமை உரையை அடுத்து வன்னி யுத்த களத்தில் பதிவு செய்யப்பட்ட 10 நிமிட விடியோப் பதிவு காட்சிப்படுத்தப்பட்டது. அப்பதிவில் வன்னி மக்கள் ஒவ்வொரு நிமிடமும் எதிர்கொள்ளும் சொல்லொனாத் துயரமும் விபரிக்க முடியாத வேதனையும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு அப்பால் அதனை விபரிக்க வேண்டிய அவசியம் தன்ககு; இல்லையென அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மேரி கொல்வின் குறிப்பிட்டு இருந்தார்.
இவற்றைத் தொடர்ந்து வன்னியில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் தங்கள் துயரை வெளிப்படுத்தினர். நடேசன் மயில்வாகனம் என்பவர் சாதாரண காய்ச்சல் வந்து அதற்கு சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் தனது வயோதிபத் தந்தை காலமானதை வேதனையுடன் சுட்டிக்காட்டினார். தந்தையைக் காண வவுனியாவின் எல்லைவரை சென்ற நடேசன் மயில்வாகனம் தந்தையை உயிருடன் பார்க்க முடியவில்லை.
இன்னும் சிலர் தங்கள் உறவுகள் உயிரிழந்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆனால் தனது சகோதரி, தனது தாய், தனது அண்ணி என குடும்பத்தில் மூவரை ஒரே நேரத்தில் பறிகொடுத்த பெண்ணொருவர் கண்ணீர் மல்க தனது இழப்பை பகிர்ந்து கொண்டது அங்கிருந்த ஒவ்வொருவரது உள்ளத்தையும் தொட்டது. உயிரிழந்த உறவுகளை கண்ணாடிச் சட்டத்தினுள் தாங்கியவாறு நின்ற அப்பெண் எதுவும் பேசவில்லை. அதுவே பல விடயங்களைப் பேசியது. வார்த்தைகளிலும் பார்க்க அந்த மௌனம் அந்தக் கண்ணீர் உண்மையானதாக இருந்தது. உணர்வுகளைத் தொட்டது.
இக்கருத்தரங்கில் All Party Parlimentary Group for Tamils அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக தொழிற்கட்சி லிபிரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே பெரும்பாலும் கலந்து கொண்டிருந்தனர். தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் லியம்பொக்ஸ் வெளியிட்ட அறிக்கை இலங்கை அரசுக்கு சார்பானதாக அமைந்ததாக அங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. பிரதமர் கோர்டன் பிரவுணும் அவரது அமைச்சரவையும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் கரிசனையுடன் நடந்துகொள்வதாகப் பாராட்டிய சென் கந்தையா பிரித்தானியாவே முதலில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தியதாகவும் பிரித்தானியாவின் அழுத்தத்தினாலேயே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து அறிக்கையை வெளியிட்டதாகவும் அங்கு குறிப்பிட்டார்.
ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்முனையாக இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தங்கள் அரசாங்கத்தைக் கொண்டு மகிந்த ராஜபக்ச அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தாங்கள் மாணவர்களாகவும் தமிழ் மக்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பிரித்தானிய அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அம்மாணவர், இலங்கை அரசு இனப்படுகொலை புரிவதாகவும் நைஜீரியா பிஜி பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கியது போல் இலங்கையையும் பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரினார்.
அதற்குப் பதிலளித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியா அதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தவும் இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்கவும் பிரித்தானிய அரசு கடுமையாக உழைப்பதாகக் கூறிய அவர் யுஎன் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதை ரஸ்யா தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இரண்டு மணிநேரம் வரை நீடித்த இந்தக் கருத்தரங்கில் வழமையான புலிப் பல்லவிகளுக்கும் சரணங்களுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இருக்கவில்லை. மேற்குறிப்பிட்ட ஒரு சிலர் ஒரு சில விடயங்கள் தவிர மற்றும்படி வழமையான கோயில் மேளங்களே முழங்கின. அதனால் அங்கு பேசப்படக் கூடிய ஆரோக்கியமான அம்சங்களும் கோயில் மேளத்தின் சத்தத்தில் கரைந்து போனது.
2._._._._._.
‘தமிழீழமே எமது மக்களுக்கு ஒரே தீர்வு.’ ‘புலிகளுடைய தடையை நீக்க வேண்டும்.’ புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை.’ ‘புலிகள் மனித உரிமைகளை மீறுவதில்லை.’ ‘சர்வதேசம் இலங்கை அரசு சொல்வதையே நம்புகிறது.’ போன்ற விடயங்கள் இவ்வாறான புலி ஆதரவு அமைப்புகளால் நடாத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதே நபர்களால் கூறப்படுகிறது. கருத்தரங்கு என்னவோ மறக்கப்பட்ட வன்னி மக்களுக்காக என்று சொல்லப்பட்டாலும் வன்னி மக்களை அந்த மரணப் பொறியில் இருந்து எவ்வாறு விடுவிக்கலாம் என்பதிலும் பார்க்க இந்த அவலத்தைக் கொண்டு தங்கள் தமிழீழக் கனவுக்கு உறுதி சேர்ப்பதாகவே கருத்துக்கள் அமைந்தது.
வழமையான புலி ஆதரவுக் கூட்டங்களில் கருத்துச் சொல்ல எழும் அம்மையார் ஒருவர் இந்தக் கருத்தரங்கையும் விட்டுவைக்கவில்லை. புலிகள் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது என்று ஆரம்பித்த அவர் தான் சிறுமியாக இருக்கும் போதே இங்கு வந்துவிட்டதாகவும் ஆனால் தனக்கு குழந்தைகள் இருந்திருந்தால் அவர்கள் வீணாக இறப்பதிலும் பார்க்க புலிகளில் சேர்ந்து இறந்திருந்தால் அதனை எண்ணிப் பெருமைப்பட்டு இருப்பேன் எனக் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்கள் பலத்த கரகோசம் எழுப்பினர். விசிலடிக்காத குறை. இதிலுள்ள உண்மை என்னவென்றால் அந்த அம்மையார் குழந்தைக்கு தாயானவர் அல்ல. திருமணமாகாதவர். அரசியல்வாதிகள் போல் கைதட்டல்களுக்காகவும் விசிலடிச்சான் குஞ்சுகளைத் திருப்திப்படுத்தவும் மிக முக்கியமான விடயங்களை கவர்ச்சியாக்கி பேசும் இப்போக்கு தமிழரசுக் கட்சி கூட்டணி என்று இன்று லண்டனிலும் தொடர்கிறது.
இது அந்த அம்மையாரில் மட்டும் தவறு அல்ல. அதற்கு கூட இருந்து கைதட்டிய சீமான்களும் சீமாட்டிகளும் அவருக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களும் அல்ல. பெரும்பாலும் பிரைவேட் ஸ்கூலில் படிக்கும் டொக்டராகவும் இன்ஜினியராகவும் இல்லாவிட்டால் குறைந்தது எக்கவுண்டனாக ஆவது வரக் கனவு காணும் தங்கள் பிள்ளைகளை தங்கள் தமிழீழக் கனவுக்கு அனுப்புவார்களா? ஆனால் வன்னியில் உள்ளவர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளை விரும்பி புலிகளின் படைகளில் சேர்ப்பிக்கிறார்கள். அதற்கு இவர்கள் கைதட்டி பாராட்டுகிறார்கள்.
நாங்கள் எங்கள் வருமானத்தைப் பார்க்காமல் வேலைகளை விட்டுவிட்டு பெல்ஜியத்துக்கு சென்று குரல் எழுப்பினோம் ஆனால் எந்தப்பயனும் இல்லை என்று குறைப்பட்டார் அங்கு கருத்து வெளியிட்ட ஒரு வர்த்தகப் பிரமுகர். ஒரு சில நாள் போராட்டத்திற்கே கணக்குப் பார்க்கும் இவர் கடந்த முப்பது வருடமாக போராடி கடந்த மூன்று மாதகாலமாக தங்கள் பதுங்கு குழிகளே புதைகுழிகளாகலாம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களின் கணக்கு வழக்கைப் பார்க்கத் தயாரா?
இந்த உரையாடலில் சென் கந்தையா கொள்கை விளக்கம் அளிக்கிறார். வன்னி மக்களை வெளியேற்றுவது பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை ஒரு உறுதியான நிலைப்பாடு எடுத்து உள்ளதாம். அந்த மக்களை அவர்கள் வாழும் பூர்வீகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவதை புலம்பெயர்ந்த மக்கள் அனுமதிக்க முடியாதாம். வடக்கு கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். மிகுதமானோரில் அரைப்பங்கினர் தெற்கிற்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். ஆக மொத்தம் வெளிநாடுகளுக்குப் போக வசதியுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றாகிவிட்டது. வசதி சற்று குறைந்தவர்கள் கொழும்புக்குச் சென்றாகிவிட்டது. எதற்கும் நாதியற்றவர்கள் முல்லைத்தீவில். இவர்களுக்கு இல்லாத பூர்வீக பூமியின் அக்கறை முல்லைத் தீவில் மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு இருக்கிறதாக சென் கந்தையா விளக்கம் அளிக்கிறார். கேக்கிறவன் கேனையன் என்றா இப்படித்தான் கொள்கை விளக்கங்கள் இருக்கும்.
வன்னிக்கு வாழ்க்கையில் ஒரு தடவையோ சில தடவையோ சென்ற ஒரு ஊடகவியலாளரைக் கூட்டிவந்து தமிழ் மக்களுக்கு வன்னி அவலத்தை விளக்க வேண்டிய அவசியம் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு ஏன் வந்தது என்பது தெரியவில்லை. (சில சமயம் போராட்ட காலத்துக்கு முன்பே புலம்பெயர்ந்த டொக்கடர் என்ஜினியர்களுக்கு ஆனந்தி அக்கா சொன்னால் விளங்காது ஒரு வெள்ளைத் தோல் ஜேர்னலிஸ்ட் மூலம் தான் கதைசொல்ல வேண்டும் என்றும் கருதி இருக்கலாம்.) பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரித்தானிய ஊடகவியலாளர்களையும் அழைத்து வந்து இந்த கருத்தரங்கை அவர்களுக்காக நடத்தி இருந்தால் வன்னி நிலவரத்தை சர்வதேச மயப்படுத்த உதவியிருக்கும். இவ்வாறான கோயில் மேளங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து நடத்தப்படும் கருத்தரங்குகள் கூட்டங்கள் …… வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே உதவும்.
அத்துடன் கூட்டத்தின் முடிவில் 5 பவுண்களுக்கு ‘Free Tamil Eelam’ விற்கலாம். நேற்றும் விற்றார்கள். புலம்பெயர் மக்கள் 5 பவுண்களுடன் தமிழீழத்தை பெற்றுக்கொண்டார்கள்.
lio
Hello Sen Kandiah – you said you won’t allow the tamils to displaced from their home land – so you stay in-Vavuniya ,the tamils home land – why you left the country you stay in the home land. isn’t it? Sen kandiah where is your kids and what they doing tell us. publically
murugan
வெளிநாடுகளிலுள்ள சைக்கோக்களுக்கே தமிழ் ஈழம் தேவை. நாட்டில் இருப்பவர்களுக்கு நாளாந்த அமைதி வாழ்வே தேவை- அது சிங்களவரோடாயினும் சரி. முஸ்லிம்களோடாயினும் சரி. போதும் போதும் மக்களை ஏறி உழக்கியது. அக்காமாரே தமிழ் மக்கள் மேல் சற்று கடைக் கண்(ணி)காட்டுங்கள்.
Kusumpan
எமது மக்கள் நிலை மேரி கொல்வினுக்கு விளங்கியுள்ளது.
palli
வன்னி மக்களுக்கு இப்போது தேவை ஈழமோ அல்லது தேசியமோ அல்ல. அவர்களை உயிர் காக்க கூடிய ஒரு தீர்வோ அல்லது பேச்சு வார்த்தை மட்டுமே. இது நாளையோ அல்லது அல்லது அப்புறமோ என்ன்பதல்ல உடன் அவசர முதல் உதவி போல் யார் உதவ வந்தாலும் ஏற்க வன்னி மக்கள் வருவார்கள். ஆனால்………..அவர்கள் ராணுவ கட்டுபாட்டில் வர விரும்பவில்லையென பல்லி நினைப்பது தவறா??
thurai
வன்னி மக்கள் மட்டுமல்ல, இலங்கைத் தமிழினமே பாதிப்படைந்துள்ளது. சிங்கள, தமிழ் பயங்கரவாதிகளிற்கிடையே அகப்பட்டுள்ளனர். இதில் புலிகள் மட்டுமதான் தமிழரில் பயங்கரவாதிகளல்ல. தமிழரின் நலஙகளில் அக்கறையற்ர சுயநலம் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் அனவரும்
பயஙரவாதிகளே.
புலம்பெயர் நாடுகளில் உல்லாச வாழ்வு, உறவினர்களோடு வாழ்ந்துகொண்டு, வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் பேட்டிகழும், அறிக்கைகழும் விடுபவர்கள் தங்களை மறத்தமிழர் தலகுனியாத்தமிழர் எனசொல்வதைப் பார்த்து உலகமே சிரிக்கின்றது.
இலங்கைத் தமிழர் உருமையும் விடுதலையும், அந்த மண்ணில் வாழும் தமிழரிற்கே. அவர்களின் வாழ்வும் வளமுமே தமிழரின் விடுதலைக்கு ஆணிவேராக அமையும் புலியின் கையில் அணுகுண்டு கிடைத்தாலும் தமிழரிற்கு விடுதலை பெற்றுத்தரமுடியாது.
துரை
santhanam
நிட்சயமாக வன்னி மக்கள் இராணுவகட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தே தீருவர் யாழ்.சம்பூர் வாகரை வரை என்ன நடந்தது பல்லி.
murugan
அவர்கள் ராணுவ கட்டுபாட்டில் வர விரும்பவில்லையென பல்லி நினைப்பது தவறா??
ஆமா! வன்னியிலே புலிகளுடன் பாலாறும் தேனாறும் பாய வாழ்ந்த மக்கள் தானே. பயப்படுகிறார்கள்!
தெரியாத பிசாசை விட தெரிந்த பேய் பரவாயில்லை என சொல்லுவார்கள். இங்கு நிலமை மாறி யோசிக்க வேண்டியுள்ளது. தெரிந்த புலியை விட தெரியாத ஆமி எவ்வளவோ மேல். புலி வா என்றால் அது ஒரு வழிப் பாதை. ஆமி வா என்றால் அது பல வழிப் பாதை. அதிஸ்டத்திற்கான சந்தர்ப்பங்கள் உள்ள பாதை.
gobi
free தமிழீழத்தை ஏன் ஜந்து பவுணுக்கு விற்கிறார்கள்?
santhanam
தம்புத்தேகம சோதனைச் சாவடியில் பொலிசார் நடத்திய சோதனையின் போது இராணுவ வீரரொருவரிடமிருந்து சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கைப்பற்றப்பட்டன. முல்லைத்தீவு, விஸ்வமடுவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர், தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த போதே தம்புத்தேகம சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனைக்குட்படுத்தப்பட்டார். இவரிடமிருந்து தங்க மாலைகள், வளையல்கள், காதணிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்டுள்ள இவர் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பந்தப்பட்ட சோதனைச் சாவடிக்குப் பொறுப்பான பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.டபிள்யூஇடபிள்யூ. குமாரசிறி தெரிவித்தார்
எப்படி பல்லி தமிழன்ரை சொத்து போரட்டம்
murugan
வெளிநாடுகளுக்கு வன்னியில்நடைபெறும் படுகொலைகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை போதியளவு கொடுத்து மனித மனங்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்ப வேண்டும். சிங்களவருக்கு மட்டும் தான் மனச்சாட்சியை தடடி எழுப்ப முடியாது. இன்று கர்ப்பிணிப் பெண்ணின் மீது செல் விழுந்த படம் பார்க்கச் சகிக்கவில்லை.அதை கிலாரி கிளின்டனுக்கும் நவநீதம்பிள்ளைக்கும் பிரின்ட் எடுத்து பெண்கள் அமைப்புக்கள் அனுப்ப வேண்டும்.– ஜிரிவியில் ஒரு பெண் நேயர்.
நிராயுதபாணியாகக் கொல்லப்பட்ட பொலிசார் பற்றியும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புகைப்படங்களும் மற்றும் அனைத்து மனித உரிமை மீறல்கள் பற்றியும் வெளிநாடுகளிடம் ஆதாரங்கள் உள்ளனவே. அவை பற்றி கேட்டால் முகத்தை எங்கே கொண்டு வைப்பது ?
thilai
போட்ட ரென்ட் பிரியாமல் செல் விழுந்ததாக காட்டப்பட்டுள்ளது. இது கைக்கொலையென்பது தெளிவாகத் தெரிகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு குண்டைக் கட்டி தற்கொலைப் போராளிகளாக்கிய புலிகளுக்கு இதுவொரு சின்னவேலை. குழந்தைகளையும் கர்ப்பிணிகளையும் சிறுவர்களையும் வைத்துத்தான் உலகம்பூரா கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகிறது. அதில் வித்தியாசமாக ஏதும் காட்டவேணுமெண்டால் இப்படியான வேலைகள் புலிக்கு அத்துப்படி.
murugan
பல ஆண்டுகளுக்கு முன் டொலர் பாம் கென்ற பாம் என்பவற்றில் தாக்குதல் நடத்திய புலிகளில் புலேந்திரன் பல சிங்களப் பெண்களை கற்பழித்ததோடு பால் ஊட்டிக் கொண்டிருந்த தாயை வெட்டிக் கொன்றதற்கும் கற்பிணியாக இருந்த முஸ்லிம் தாய்மாரை வெட்டிக் கொன்றதற்கும் எங்கு நாம் ஆறுதலும் நீதியும் தேட முடியும்?
palli
சந்தானம் இதுக்குகூட சிலர், அவர் பவுண் சில்லறை வியாபாரி அவசரத்துக்காக இராணுவத்துக்கு சில மாதங்கள் கடமையாற்றினார் என்பார்கள். இருப்பினும் பல்லி சந்தானம் போல் பலர் விழிப்புடன் இருப்பது சிலருக்கு தெரியாமல் இருப்பது கவலையல்ல பரிதாபம். ஆக புலி பாய்வதும் உண்மை. சிங்கம் குதறுவதும் உண்மைதானே……
palli
//இராணுவகட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தே தீருவர்//
வரகூடாததென்பது பல்லியின் நோக்கமல்ல. ஆனால் வரகூடிய நிலையை அரசோ அல்லது அரசுசார்ந்தவர்களோ ஏற்படுத்த வேண்டுமென்பதே பல்லியின் ஏக்கம்.
//புலிகளுடன் பாலாறும் தேனாறும் பாய வாழ்ந்த மக்கள் தானே. பயப்படுகிறார்கள்!//
இல்லை. சரி வந்து விட்டால் என்ன வடை பாயாசமா.???
//. புலி வா என்றால் அது ஒரு வழிப் பாதை// ஆமா. கொலைதானே அழிவுதானே.
//ஆமி வா என்றால் அது பல வழிப் பாதை.// இருக்காதா என்ன. கொலை; கொள்ளை; கற்பழிப்பு; சித்திரவதை; சின்ன சின்ன சில்மிஸங்கள். இப்படி பல அதைதானே முருகன் சொல்லுறியள்.
palli
முருகா புலி தவறு செய்யவில்லை. அல்லது அது ஆதரிக்கபட வேண்டிய அமைப்பு என யாராவது சொன்னால் அவர்கள் முட்டாள்கள். ஆனால் அரசு நேர்மையானது. அதை அனைவரும் நம்புங்கள் என சொல்பவர்கள் முன்சொன்ன முட்டாளிடம் படித்து பட்டம் வாங்கியவர்கள்.
புலியை எதிர்ப்பதுக்காக அரசை ஆதரிப்பது சேட்டை தூக்கி கால்சட்டையாக மாட்டுவதுக்கு சமானம்.
thaya
“Paris meeting advances socialist program to end war in Sri Lanka”
“There is no national solution to this crisis,” Schwarz insisted, “and there is no solution within the framework of capitalism. Either the bourgeoisie—as in 1914 and 1939—will throw humanity back into barbarism and war, or the working class will unite internationally, overthrow the capitalist system and build a socialist society. There is no other alternative.”
Refuting the nationalist and retrograde outlook of the LTTE, Schwarz added, “Any idea that a country, an island or half an island could disengage itself from the world economy and find a solution within its own borders is both, absurd and reactionary. It would mean turning the clock back to the pre-capitalist age, to medieval times. It would involve a massive destruction of productive forces and human lives.”
Far from being independent from imperialism, if the Tamil bourgeoisie were to realize its dream of a capitalist state, it would create nothing more than a cheap labour platform for multinational corporations, where the working class faced brutal exploitation and poverty.
Schwarz insisted that the fate of the working class in the advanced and backward capitalist countries—of American workers, European workers, Chinese workers and Sri Lankan workers—was inseparably intertwined.”
http://www.wsws.org/articles/2009/mar2009/pari-m18.shtml
murugan
புலிகளுடன் பாலாறும் தேனாறும் பாய வாழ்ந்த மக்கள் தானே. பயப்படுகிறார்கள்!//
இல்லை. சரி வந்து விட்டால் என்ன வடை பாயாசமா.???
வடை பாயசம் இருக்கட்டும். முதலில் கஞ்சி கிடைக்கட்டும்
ஆமி வா என்றால் அது பல வழிப் பாதை.// இருக்காதா என்ன. கொலை; கொள்ளை; கற்பழிப்பு; சித்திரவதை; சின்ன சின்ன சில்மிஸங்கள். இப்படி பல அதைதானே முருகன் சொல்லுறியள்.
உங்கள் அளவுக்கு இப்படி உணர்ச்சி வசப்பட என்னால் முடியவில்லை. நாம் விரும்ப முடியாத அளவிற்கு விலை கொடுத்தே மீளப் போகின்றோம். அரசியல் கத்தி விளிம்பில் நடக்கும் அபாயத்தை ஒத்தது. தவறி விட்டோம். அனுபவித்து தான் ஆகவேண்டும். புலிகள் செய்த ஒவ்வொரு குற்றத்திற்கும் விலை செலுத்தியே ஆக வேண்டும். எந்த குறுக்கு வழியும் இனி இல்லை.இது வாசிக்க கசப்பாகத்தான் இருக்கும்.
murugan
முருகா புலி தவறு செய்யவில்லை. அல்லது அது ஆதரிக்கபட வேண்டிய அமைப்பு என யாராவது சொன்னால் அவர்கள் முட்டாள்கள். ஆனால் அரசு நேர்மையானது. அதை அனைவரும் நம்புங்கள் என சொல்பவர்கள் முன்சொன்ன முட்டாளிடம் படித்து பட்டம் வாங்கியவர்கள்.
பல்லி இரண்டு தோணியில் பயணம் செய்ய முடியுமா?
amma
//நாம் விரும்ப முடியாத அளவிற்கு விலை கொடுத்தே மீளப் போகின்றோம். அரசியல் கத்தி விளிம்பில் நடக்கும் அபாயத்தை ஒத்தது. தவறி விட்டோம். அனுபவித்து தான் ஆகவேண்டும். புலிகள் செய்த ஒவ்வொரு குற்றத்திற்கும் விலை செலுத்தியே ஆக வேண்டும். எந்த குறுக்கு வழியும் இனி இல்லை.இது வாசிக்க கசப்பாகத்தான் இருக்கும்// surrender is the only onwway ticket other evryting else waste of time and lives.
murugan
ஜிரிவி யில் ஒரு நேயர் லண்டனிலுள்ள மாக்ஸ் அன்ட் ஸ்பென்ஸர் இலங்கையில் இருந்து ஆடைகளை தைத்து எடுப்பதை நிறுத்தவேண்டும் இலங்கையில் நடைபெறும் மனித பேரவலங்களினால் இது அந்த நிறுவனத்திற்கு அவமானத்தை தேடி தரும் எனவும் தான் கடிதம் எழுதியிருப்பதாகவும் இதை இங்கு போராட்டங்களை நடத்தும் அமைப்புக்களும் மாக்ஸ் அன்ட ஸ்பென்சருக்கு எழுத வேண்டும் எனவும் கூறினார். அதற்கு நிகழ்ச்சி நடத்துநர் 1978 ம் ஆண்டிலிருந்து திறந்த பொருளாதார கொள்கையின் பிரகாரம் மாக்ஸ் அன்ட் ஸ்பென்ஸர் போன்றவை குறைந்த ஊதியத்துடன் இவற்றை செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
ஆனால் அந்த நேயரும் நிகழ்ச்சி நடத்துநரும் பிரபாகரன் வன்னியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தமது பொருளாதார கொள்கை திறந்த பொருளாதாரமே என திருவாய் மலர்ந்து வைத்திருப்பதைப் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. அத்தோடு பிரபாகரனின் ஆடம்பர வாழ்வின் ஒரு அங்கமாக மாக்ஸ் அன்ட் ஸ்பென்ஸர் ஆடைகளே இராணுவத்தால் பங்கருக்குள் கண்டெடுக்கப் பட்டன என்பதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளவில்லை. இவர்களே தமிழ் மக்களை மேய்த்து தண்ணி காட்டுபவர்கள்.
palli
முருகன் ஈழ தமிழர் தற்போது ஆசைபடுவதோ அல்லது வேண்டி நிற்பது உயிர் வாழதான் சுகவாழ்வுக்கல்ல. அதனால் அதை புலி செய்யவில்லை என்பதில் (மக்கள் வாழ்வுபற்றி கவலையில்லை) மாற்று கருத்து பல்லிக்கு என்றும் இல்லை இருக்கபோவதும் இல்லை. காரனம் புலியின் நிர்வாகம் அப்படி இது கேட்டு தெரிந்ததல்ல. பல காலம் அந்த கொடுமைகளுக்கு மத்தியில் பல்லியும் ஊர்ந்திருக்கிறது. ஆகவேதான் அதை போல் உள்ள ஒரு அரசை ஆதரிப்பதைவிட அரசு செய்யும் தவறுகளை புலம்பெயர் தமிழர் சுட்டி காட்ட வேண்டும். அங்கு இருப்பவர்கள் சுட்டிகாட்ட முடியாது. காரனம் தங்களுக்கு தெரியாதா என்ன. புலம்பெயர் நாட்டில் கூட அரசிடம் சம்பளம் வாங்கி கொண்டு செயல்படும் ஊடகங்கள் இல்லை என சொல்ல முடியுமா?? கண்டிப்பாக முடியாது. இவர்களுக்கு ஏன் அரசின் கையை நக்க வேண்டும். இங்கு இருப்பவர்களுக்கு என்ன பொருளாதார பிரச்சனை?
முருகன் தயவு செய்து சிந்திக்கவும். அரசை ஆதரிப்பது நல்லதா அல்லது அரசின் கெடுபிடிகளை சுட்டிகாட்டுவது எமது மக்களுக்கு நம்மால் முடிந்த உதவியா என்பதனை.
முருகன் இங்கு புலி சார்பாக போராட்டம் எழுச்சி என நடத்துபவர்கள் புலிகொடி பிரபா படம் இதை வைத்தே பிழைப்பு நடத்துகின்றனர். இது இத்தனை புலிகள் எமது நாட்டிலும் ஊடுருவி விட்டார்களா என சர்வதேசத்தை எச்செரிக்கையாக இருக்க உதவுமே தவிர எமது மக்களுக்கு எதுவும் உதவபோவதில்லை. அதுபோல் இன்னும் சிலர் தாம் புத்திஜீவிகள் என நினைத்து அரசுடன் படம்(போட்டோ)எடுப்பதும் விருந்து சாப்பிடுவதும் அரசின் பிரச்சாரத்தை (தவறான) மறு ஒலிபரப்பு செய்வதுமாக தமது பிழைப்பை கொண்டு செல்கின்றனர். ஆக யார்தான் மக்கள் படும் அவலத்தை சொல்லுவது?? இந்த கேள்வியை முருகன் தங்களை தாங்களே கேளுங்கள்.
பல்லி போவது இரு தோணியல்ல. அது ஒரு தனிகட்டுமரம் என்பது புரியலாம்.
murugan
தமிழர்களின் உரிமைப் போரை குற்றுயிரும் குறையுயிரும் ஆக்கியது விடுதலைப் புலிகளே. சொந்த மக்களின் சுதந்திரத்தைப் பறித்து அவர்களின் தொண்ணூறு வீதமானவர்களை துரோகிகள் என அழித்தொழிததவர்கள் புலிகளே. தமிழினம் இன்று தனது ஆன்ம பலத்தையும் இழந்து திசைதெரியாது ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் முதல் எதிரியான புலிகளை அரசு சேதப்படுத்தும் எனில் அது தமிழருக்கு நன்மையே. பல்லி நானும் நீங்களும் இதை செய்யவா முடியும்?
உயிர் தப்பிப் பிழைக்கும் மக்கள் கூட்டம் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு யோசித்து முடிவெடுக்கும். நீங்கள் குறிப்பிடும் நபர்கள் மக்களின் கண்களில் தடடுப்படாமல் போக முடியாது. வாக்களிக்கும் சந்தர்ப்பங்களில் மக்கள் தம்மை வெளிப்படுத்துவார்கள். புலிக்கு கீழ் இல்லாதிருந்த எழுத்து பேச்சு சுதந்திரம் கூடித் திரிதல் ஓரளவேனும் சாத்தியமாகும். கிடைக்கும் இடைவெளிகளுள் உண்மைகள் விழித்தெழும். நாம் செய்யக் கூடியது புலியின் அழிவை துரிதப்படுத்துவதே. மக்கள் அழிகிறார்கள் ஐயோ ஐயோ என மத போதகர்களும் காரண காரியம் விளங்காதவர்களும் தான் ஓலமிட முடியும். இந்த அழிவுகளை எப்பவோ தவிர்த்திருக்க முடியும்.
santhanam
/ஈழ தமிழர் தற்போது ஆசைபடுவதோ அல்லது வேண்டி நிற்பது உயிர் வாழதான்/ஆனால் பல்லி புலியை வைத்து தமிழ்இனத்தை சிங்களபேரினவாதம் தமிழர்களை சிதைவடைய செய்கிறார்கள் இது இந்த புலம்பெயர்ந்த தமிழ்இனங்களிற்கு விளங்கவில்லை இதற்கு இந்தியா தனது அதிகார தூரநோக்குடன் கையாண்டுள்ளது.
வன்னிக்காட்டு உடும்பு
/புலியை எதிர்ப்பதுக்காக அரசை ஆதரிப்பது சேட்டை தூக்கி கால்சட்டையாக மாட்டுவதுக்கு சமானம்./—பல்லி.
இந்தியக் கொள்கை புலியை எதிர்ப்பது,அரசை ஆதரிப்பது என்று கூறுவீர்களா?.
/மேரி கொல்வின் வன்னி மக்களின் அவல நிலைபற்றி எடுத்துக் கூறினார். அமெரிக்க ஊடகவியலாளரான மேரி கொல்வின் பிரித்தானிய தேசிய நாளிதலான ரைம்ஸ் பத்திரிகையில் பணிபுரிகிறார்./-மேரி கொல்வின் “புலி ஆதரவாள்ர் என்று கூறுகிறிர்களா?.
இப்படிதான் 1991ல் ராஜீகாந்தி கொலைக்குப் பின், புலம்பெயர் “பிரீ டமில் ஈலம் வியாபாரிகள்”, புலிகளுக்கு ஆதரவாக கொடிப் பிடித்துகொண்டு திரிந்தார்களே ஒழிய, அவர்களின் செயலை “பிணை எடுக்கும்” சர்வதேச விவாதங்களில் இறங்கவில்லை- ஏனென்றால், புலிகளை ஆழ்ந்த இருட்டுக்குள் தள்ளி, தற்கொலை மனோபாவத்தில் வத்திருக்காவிட்டால், தங்கள் “ஏஜென்ஸி விளையாட்டுகள்” என்னாவது?. அதேபோல்தான் இப்போதும், “புலிகளை முறையான முறையில் வெளி வருவதற்கு சர்வதேச அரங்கில் வழி சமைகாது”, “மாஸ் மர்டர்” செய்துகொள்ள, புலிக்கொடி தூக்கி, “அழுத்தம் கொடுப்பதற்கு” இவர்கள் யார்?, உங்கள் தொல்லை தாங்காமல் உடும்பும் அல்லவா பங்கருக்குள் பதுங்க வேண்டியுள்ளது!. இதை எதிர்த்தால், அது புலி எதிர்பா?.
வெள்ளைக்காரர்களை அவர்களின் வரலாற்று நிமித்தம் நாம் மதிக்க வேண்டும். அதற்காக வெள்ளைக்காரர்களின் “டாய்லட் பேப்பர்களையும்” நாம் மதிக்க வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டில் காலனிய அதிக்கம் செய்தபோது அவர்களை நாம் எதிர்த்திருக்க வேண்டும். அவர்கள் நாட்டில் வந்திருக்கும் போது அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று உணர வேண்டும்- நாம் இரண்டும் செய்வதில்லை. “மேரி கொல்வின்” போன்ற மனித உரிமை அமைப்பாளர்கள் கூறுவது, ஒரு சின்ன நாட்டில், “மைனாரிட்டியாக” இருக்கும் மக்களுக்கு, பெருந்தன்மையாக (நம்மிடம் அண்டி வந்தவர்கள்), ஆறுதல் அளிக்க வேண்டும், இல்லவிட்டால் சர்வதெச அரங்கில் மனிதாபினானம் கேள்விக் குறியாதாகி விடும், ஆனால் அதைப் பயன்படுத்தி அம்மக்கள், சொந்தமாக நியாயமான பாதைக்கு வரவேண்டும் என்பதாகும்- இதை புலி ஆதராவாக கருதி, கொடிபிடிக்கக் கூடாது.
அதே போல்தான் சிங்களவர்கள் என்பவர்கள், “இந்தியாவில் கிடையாது”. உலகில் தனிமைப் பட்டுக் கிடக்கும் ஒரு இனத்தை எதிர்த்து இந்தியாவிலிருக்கும், தமிழருக்கு ஆதரவாக, “ஒரு நிலை” எடுத்தால், இங்கும் “மனிதாபிமானம் கேள்விகுறியதாகும்”. ஆனால் இதை புலி எதிர்ப்பாக அர்த்தப்படுத்தக் கூடாது. இவைகள் உயரிய சிந்தனைகள் ஆகும். “பிரீ டமிலீலம்” விற்பவர்களும்,கொடிப் பிடிப்பவர்களும் சிந்திக்க.