இந்திய மருத்துவக் குழு செயல்பாடு குறித்து ஜெ வி பி அதிருப்தி

parliament.jpgஇலங்கை யின் வடக்கே திருகோணமலை புல்மோட்டையில் இந்திய மருத்துவர்கள் குழு செயல்படுவது குறித்து ஜெவிபி தனது அதிருப்தியை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

எட்டு மருத்துவர்கள் உள்ளிட்ட 52 பேர் கொண்ட இந்த மருத்துவக்குழு இலங்கையில் தங்கியிருப்பது குறித்து மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி அவையில் விசேட உரையொன்றினை ஆற்றிய ஜே.வி.பி யின் பாராளுமன்றக்குழுத்தலைவர் அனுரகுமார திசாநாயக்க,இலங்கை அரசாங்கம் கூறுவதுபோல இந்த மருத்துவக்குழு இலங்கை அரசிற்கு இந்திய அரசு வழங்கும் நட்புரீதியான உதவியாயின், இந்தியா ஏன் தனது இராணுவ வைத்தியர்களை அனுப்பியிருக்கிறது என்றார்.

இதுவிடயத்தில் இராஜதந்திர நட்புறவு என்பதனைவிட பலாத்காரத்தினையே இந்தியா பிரயோகித்திருப்பதனை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், உண்மையிலேயே இந்திய இலங்கை அரசிற்கு மருத்துவ உதவிகளை வழங்கவேண்டியிருந்திருந்தால் அதனை நல்லபடியாக இலங்கை அரசிடம் கையளித்திருக்கலாம். அதனைப் பகிர்ந்தளிக்கவேண்டிய பொறுப்பு இலங்கை அரசினைச் சார்ந்தது, அதனைவிடுத்து, புல்மோட்டையில் நடமாடும் இராணுவ வைத்தியசாலையொன்றினை அமைந்திருப்பது எவ்வகையிலும் இராஜதந்திர நல்லுறவாக அமையாது. இது இந்திய அரசினால் இலங்கை விடயங்களில் மேற்கொள்ளப்படும் அநாவசிய தலையீடு என்றுதான் தோன்றுகிறது, என்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் ஜே.வி.பி யின் பாராளுமன்றக்குழுத்தலைவர் அனுரகுமார திசாநாயக்க.

இதற்கு சபையில் பதிலளித்துப்பேசிய இலங்கை சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, புல்மோட்டையில் இந்திய அரசின் மருத்துவ வசதிகள், மற்றும் வைத்தியசாலை என்பது அரசு அனுமதியினைப் பெற்றுக்கொண்டபின்னரேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 1987 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, எமது வான்பரப்பினுள் அத்துமீறி பருப்பு போட்டது போல் இந்தியா இங்கு இப்போது ஒன்றும் செயற்படவில்லை. இந்தியா மட்டுமல்ல பல பிறநாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்திருக்கின்றன, அண்டைநாடான இந்தியாவின் உதவிகள் வரவேற்கத்தக்கவை என்று கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *