கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம் – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது !

தமிழ்நாடு கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் – செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீ மதி ( 17 ) . இவர் , கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் , பள்ளி விடுதியில் மர்மமான முறையில் ஜூலை 13 – ம் தேதி உயிரிழந்தார்.

 

மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் , நேற்று கலவரமாக மாறியது . இதனிடையே , மதியின் பெற்றோர் ராமலிங்கம் , செல்வி ஆகியோர் நேற்று காலை நெஞ்சுவலியால் , வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . பின்னர் , பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் , கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் செல்வி கூறியது : எனது மகள் ஸ்ரீமதி உயிரிழந்து 5 நாட்களாகிறது . கடந்த 4 நாள்களாக அமைதியான முறையில் நீதிகேட்டும் எந்தவித பதிலும் இல்லை . மாணவர்கள் சங்கம் சார்பில் நீதிகேட்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை , பள்ளி நிர்வாகம் அடியாட்கள் மூலம் தாக்கியதுடன் , பள்ளிக் கட்டிடம் மற்றும் வாகனங்களை எரித்து , கல்வீசி கலவரத்தை ஏற்படுத்தி , தற்போது மாணவர்கள் மீது பழிசுமத்துகின்றனர் .

 

பள்ளி நிர்வாகம் மீது சின்னசேலம் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட நிலை , இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என மாணவர்கள் போராட்டத்தில் பள்ளி நிர்வாகம் மீது சின்னசேலம் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட நிலை , இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் . கொலையைத் தற்கொலையாக மாற்றியுள்ளனர் . திட்டமிட்டு கொலை செய்தவர்களைத் தூக்கிலிட வேண்டும் . எனது மகள் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார் .

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் நேற்று பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதத்தில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.அந்த கடிதத்தில், கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் ரொம்ப பிரஷர் பண்ணறாங்க. என்னால முடியல என குறிப்பிட்டுள்ளதாக தகவல். மேலும் தான் நன்றாக படிப்பதாகவும், ஆனால் கணிதம் மற்றும் வேதியியல் துறை ஆசிரியைகள் படிக்கவில்லை என துன்புறுத்தியதாகவும் தகவல். டாடி, மம்மி மற்றும் தம்பியிடம் சாரி சொல்லி கடிதத்தை முடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதே நேரம் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த பள்ளி தரப்பு நிர்வாகிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி தரப்பில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அந்த பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆசிரியைகள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஐந்து பேரையும் ஆகஸ்ட் 1 தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்பொழுது ஐந்து பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *