கொழும்பு நகரிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் பகிர்ந்தளிக்கபடும் குடிநீரில் எவ்வித நச்சுத் தன்மையும் கலக்கப்படவில்லை எனவும் நேற்றுப் பகல் முதல் சுத்தமான நீரையே வழங்குவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிக்கிறது.
கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக சேற்றுடன் கலந்த மழை நீர் களனி கங்கையில் கலந்ததால் கொழும்பு பெரும்பாகத்திற்கு பகிர்ந்தளிக்கப்படும் நீர் சேற்று மணத்துடன் விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து குடிநீரில் நஞ்சு கலந்துள்ளதாக வதந்திகள் பரவின.
நேற்றுக் காலை 10.00 மணியளவில் நீர்வழங்கல் சபை நிலைமையை சரி செய்ததுடன் மிகவும் சுத்தமான நீரை விநியோகம் செய்தது.பாவனையாளர்கள் அனைவரும் சேற்று மணத்துடன் காலையில் வந்த நீரை தொட்டிகளில் சேமித்திருப்பின் அவற்றை வெளியேற்றிவிட்டு புதிய சுத்தமான நீரை தொட்டிகளில் நிரப்பிக் கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொள்கிறது.
london boy
மிக அவதானமாக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய விடயம் காரணம் பிரபாகரன் இப்படியான வேலைகள் செய்யச் கூடியவர் சும்மா இருந்த பொடியளை குண்டைக்கட்டி பறந்து போய் சாவுங்கோ விட்டவர் எதுவும் செய்வார்.