ரஜரட்ட பல்கலைக்கழகம் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளில் தங்கியிருந்த மாணவர்களையும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ குழுக்களுக்கு இடையில் தோன்றியுள்ள பிரச்சினையை சமரசம் செய்வதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆனால், மாணவர் பிரதிநிதிகள் மீண்டும் மோதலில் ஈடுபடுவதற்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து பல்கலைக்கழகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்னர் இப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து எட்டு மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீண்டும் கல்விகற்க அனுமதிக்குமாறு மாணவர்கள் சிலர் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துவந்தனர். அத்துடன், சில மாணவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.