‘வணங்கா மண்’ கப்பல் – உலகமே கைவிட்ட எம் உறவுகளின் உயிர் காப்பதற்கான தாயகம் நோக்கி பயணமாகும்

vanangkaa-mann.jpgஈழத் தமிழ் உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துகளுடன் ‘வணங்கா மண்’ என்னும் கப்பல் தாயகம் நோக்கிய பயணத்தை தொடங்கவுள்ளதாக பிரித்தானியா வாழ் புலம்பெயர்ந்த உறவுகளால் உருவாக்கப்பட்டுள்ள ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது  என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. 

உலகமே கைவிட்ட எம் உறவுகளின் உயிர் காப்பதற்கான தாயகம் நோக்கிய பயணம் என இந்நடவடிக்கையை சிறப்பித்துக்கூறும் ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளதாவது. சிங்களப் பேரினவாத அரசால் மேற்கொள்ளப்படுகின்ற தமிழின சுத்திகரிப்பு நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. இதற்கு ஜக்கிய நாடுகள் சபை முதல் உலக நாடுகள் அனைத்துமே எமது மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கின்றது.

இந்நிலையில் எமது உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால் ‘வணங்கா மண்’ நடவடிக்கை பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஒருபுறம் குண்டு மழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டினியால் சாவு கொள்ள விடுவோமா?  வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது இனம் அழிய விடுவோமா?

அரசுகள் கைவிட்டால் என்ன?  மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து எமது துயரை சொல்வோம். அவர்கள் ஆதரவை பெற்றுக்கொள்வோம்.  எம் உறவுகளை காத்திடுவோம். தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணைவோம்.  என்று வேண்டி நிற்கிறது ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு  என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • Rijai
    Rijai

    யாருக்கு வணங்கா மண்? எப்படி என்றாலும் புலித் தலைக்கு வணங்கித்தான் ஆகணும் இல்லாட்டி உங்க தலை இருக்காது

    Reply
  • suppu
    suppu

    ஆண்ட தமிழினமே! உலகமே எம் இனத்தை கைவிடக் காரணம் என்னவென்று ஒருகணம் சிந்தித்துப்பார்!! விடை தெரியின் கப்பல் தேவைப்படாதல்லவா!!!

    Reply
  • murugan
    murugan

    “உலகமே கைவிட்ட எம் உறவுகளின்”

    உலகமே கைவிட்டதென சொல்லுகிறீர்களே எப்பபோதாவது உலகத்தோடு ஒட்டி நடந்தீர்களா? உலகம் சொன்ன எதையாவது காதில் விழுத்தினீர்களா? இப்ப குய்யோ முறையோ என அழுதிடுங்கால் நீங்கள் தலைவரைக் காத்திடல் கைவருமோ?

    அகாசியும் சொல்கேய்மும் உங்களை சுற்றி சுற்றி அலைந்ததை வேறு விதமாக புரிந்து கொண்டு என்ன ஆட்டம் ஆடினீர்கள். வடகிழக்கில் இஸ்டப்படி தேடி தேடி எப்படியெல்லாம் நரவேட்டை நடத்தினீர்கள். இப்ப தலைவரைக் காக்க கப்பல் அனுப்ப வேண்டியிருக்கு. இலங்கை அரசு ஒத்துக் கொண்டாலே உங்கள் கப்பல் இலங்கை எல்லைக்குள் அடிவைக்க முடியும். யாரைக் கொண்டு இலங்கை அரசை வெருடடப் போகிறீர்கள்.

    Reply
  • padamman
    padamman

    பிழைப்புக்கு எத்தனையோ வழியிருக்குது

    Reply
  • Kullan
    Kullan

    வணங்கா மண்தான் சிங்கள இராணுவத்திடம் மண்டியிட்டுக்கிடக் கிறது? புலிகள் பிழைக்கத்தெரிந்தவர்கள். பொருள் பண்டம் பணமாய் கொடுத்தவர்கள் வாயில் மண்தான். சிங்கள இராணுவம் இந்த மண்கப்பலை உத்தரவு கொடுத்து விட்டு சலூட் அடித்து விட்டுப்பார்த்துக் கொண்டு இருக்கிறது. மண் கப்பலை நம்பிக் கொடுப்பவன் வாயில் மண்தான். கொட்டிக் கொடுத்துதையெல்லாம் புலிகளும் ரி ஆர் ஓ வும் அரசாங்கத்திடம் கெடுத்தது பத்தாதோ. கெடுகிறன் பிடி பந்தயம் என்றால் என்ன செய்கிறது

    Reply
  • Kusumpan
    Kusumpan

    இதுதான் நாம் உங்களிடம் கேட்கும் கடசி உதவி. உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் எம் மக்களுக்கு நீங்கள் உதவாது யார் உதவுவார்கள். கிள்ளிக் கொடுக்காதீர்கள் அள்ளிக்கொடுங்கள். நாளை மலரும் தமிழ்ஈழத்திற்கு நீங்கள் கப்பல் கப்பலாக வரும்போது வட்டியும் முதலுமாக எம்மக்கள் திருப்பித்தருவார்கள். இன்று இந்தப்பாவப்பட்ட சனத்துக்கு அள்ளிக் கொடுங்கள். நாளை உங்கள் வருகைக்காக எம் தலைவனும் மக்களும் காத்திருப்பார்கள்

    Reply
  • palli
    palli

    அதென்னா வணங்கா மண். யாராவது பல்லிக்கு புரிய வையுங்கப்பா. இந்த திட்டத்தை பல்லி வரவேற்றாலும். இந்த பெயரில் பல்லிக்கு சிறிது வலிக்குது. இது பழய படி தமிழருக்கு அடி வாங்கி தாற சமாச்சாரமோ என பயமாகவும் இருக்குது. வணங்கா மண் என பெயரை வைத்து கொண்டு லண்டன் அரசிடம். போக விடை கொடு என கேட்டு வணங்கி விட்டு. பின்பு இலங்கை அரசிடம் வர விடைகொடு என மம்மிவிட்டு. இருந்தாலும் வணங்கா முடிதான். இந்த லொல்லுதானே தமிழரை கேவலபடுத்துகிறது. இருப்பினும் முயற்ச்சிக்கும் வெற்றி பெறவும் பல்லியின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். வேலுப்பிள்ளை பெயரில் ஈழம் பிறக்கும். ஈழத்தமிழ்மக்கள் இவ்வளவு பைத்தியகாரர் ஆகிட்டாங்களே!
    இப்படியொரு இனம் இந்தியாவின் தென்பகுதியுள்ளது என எழுத வைச்சுட்டாங்களே.

    Reply
  • suppu
    suppu

    // கிள்ளிக் கொடுக்காதீர்கள் அள்ளிக்கொடுங்கள்.//குசும்பன் இங்கே இருக்கிற புலிக்கும் புலியை அண்டிப’பிழைக்கும் வர்க்கம் நல்லா காசுசேர்க்குது.

    Reply
  • மாயா
    மாயா

    வன்னி மக்களுக்கு உணவும் மருந்தும் உலக தமிழரிடம் அனுப்ப காசு கேட்டார்கள்.
    இது கடைசி அறுவடை. முன்ன போல சனம் பெரிசா குடுக்கிறதா இல்லை.

    “அங்க செஞ்சிலுவை சங்கத்துக்கே போகேலாம இருக்கு, நீங்க எப்படி எதால இதையெல்லாம் கொண்டு போகப் போறீங்க?” புலம் பெயர் ஆக்கள் ஊர்வலத்தோட சரி காசு குடுக்கிறதா இல்ல.

    இப்ப கேள்வி மேல கேள்வி.
    ஆயுதம் வாங்க காசு சேத்தீங்க. அங்க கட்டடிடம் கட்டி ஆமிக்கு குடுத்திருக்கிறீங்க.
    வங்கி துறந்தீங்க. வங்கியும் இல்ல. போட்ட காசும் இல்ல.

    கோயபல்கள் யோசித்தார்கள் என்ன செய்யலாம்.
    வணங்கா மண் திட்டம் ஒன்றை தயார் செய்து நம்ம மக்கள் மந்தைகள்தானே என்று ஏமாத்த திட்டம் வகுத்தார்கள்.

    அதுதான் வணங்கா மண் விளம்பரம். யாருக்கும் தெரியாம கிட்டு போன கப்பலையே காட்டிக் கொடுத்தவை.அதுக்கு நடந்தது உலகறிந்த விடயம். இப்ப அறிக்கை விட்டு போக போகினமாம்.இதுக்கு என்ன நடக்கும்?
    இது வணங்கா மண்ணில்ல , வாயில மண்.

    Reply
  • Kusumpan
    Kusumpan

    சுப்பர்! காசு சேர்த்து நாட்டுக்குத்தானே அனுப்புகிறார்கள். எங்கள் மக்கள்தானே பயன்படுகிறார்கள். நாளை தமிழீழம் அமைந்தால் நீங்கள் வரமாட்டீங்களோ?

    Reply