நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்

omakuchi.jpgநகைச் சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார். அவருக்கு வயது எழுபத்து மூன்று.

தமிழ் திரையுலகில் ஔவையார் படத்தின் மூலம்  பதிமூன்றாவது வயதில் அறிமுகமான இவர் எழுபத்து மூன்று வயதுவரை தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை சிரிக்கவைத்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாது தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து வந்தார். சூரியன்,முதல்வன் என சில படங்களில் தலைகாட்டிய இவர்  சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார். திருவல்லிக்கேணியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • மலைமகன்
    மலைமகன்

    ஓமக்குச்சி நரசிம்மன் அவர்கள் காலமான செய்தியறிந்து கவலையடைந்தேன்.

    இவர் ஒரு நகைச்சுவை நடிகராக இருந்தபோதிலும்கூட தான் எடுத்துக் கொண்ட பாத்திரத்தை திறம்பட செய்த முடித்ததுடன் தனக்கென ஒரு தனித்துவத்தையும் பேணி வந்தார். இன்றைய காலகட்டத்தில் இன்னுமொருவரைப் பின்பற்றி தான் பிரபல்யமடையும் நிலையில் ஓமக்குச்சியின் தனித்துவப் போக்கினை நான் நேசிக்கின்றேன்.

    அன்னாரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Reply
  • BC
    BC

    நகைச்சுவை நடிகர் அமரர் ஓமக்குச்சி நரசிம்மன் குடும்பத்தற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Reply
  • palli
    palli

    ஒரு இயற்கையான நடிகன் மறைந்து விட்டார். அவரது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் பல்லி குடும்பம் சார்ந்த கண்ணீர் துளிகள். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    மறைந்தாலும் மக்களின் நினைவுகளில் வாழ்பவர் சிலரே. அதில் நல்ல கலைஞர்களும் அடக்கம். நடிகர் நரசிம்மனுக்கு எம் நண்பர்கூட்டத்தின் அஞ்சலிகள்!

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply