இலங்கையில் இன்னமும் செய்தால் அரச வேலை மட்டுமே செய்வோம் என பலர் அரச வேலைக்காக மட்டுமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையே நீடிக்கின்றது. மேலும் அதிகமானோர் இலங்கையில் வேலை செய்வதற்கான முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் கூட வெளிநாடுகளை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை போன்ற நாடுகளில் பல பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய வாழ்க்கையை திருமணத்துடன் முடக்கி கொள்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்பட்டு கொண்டிருக்கிறார் முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் சிரட்டை கைத்தொழில் தொடர்பான அலங்கார பொருட்களை உற்பத்தி செய்துவரும் நிதர்சனா என்ற பெண்மனி.
கந்தசாமி கிரிதரன் என்ற முகநூல் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த ஒரு பதிவில் குறித்த சிரட்டை அலங்கார பொருட்கள் உற்பத்தி பற்றிய விடயங்களை காணக்கிடைத்ததன் அடிப்படையில் தேசம் இணையதளத்திலிருந்து குறித்த தொழில்முயற்சியாளரை தொடர்பு கொண்டிருந்த போது அவர் ,
தானும் தன்னுடைய கணவருமாக இணைந்து குறித்த தொழில்முயற்சியை மேற்கொள்வதாகவும் – குறித்த தொழிலை செய்வது மனதுக்கு நிறைவானது எனவும் குறித்த முயற்சியாளர் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த உற்பத்திகளை நேரடியாக சென்று பெற்றுக்கொள்ள முடிவதுடன் உங்களுக்கு ஏற்றாற் போல அலங்காரங்களிலான உற்பத்திகளையும் பெற்றுக்கொள்ள முடியும். வடமாகாண பகுதிகளுக்கு ஓர்டர் செய்து பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.
பிறந்தநாளுக்கும் ஏனைய கொண்டாட்டங்களுக்கும் நாம் ஏதோவொரு பொருட்களையும் – வெளிநாட்டு உற்பத்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரிசில்களை தெரிவு செய்யாது நமது உள்நாட்டு உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.
உற்பத்திகளை பெ்றுக்கொள்வதற்கு தொடர்புகளுக்கு –
நிதர்சிகா 0768915974