புதுக்குடி யிருப்பில் நேற்று இடம்பெற்ற மோதல்களின் போது படையினரின் பீரங்கித் தாக்குதலில் புலிகளின் நிதிப் பொறுப்பாளரான தமிழேந்தி என அழைக்கப்படும் சபாரட்ணம் செல்லதுரை கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பில் நேற்றுக் காலை படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையான புலி உறுப்பினர்கள் உயிரிழந்திருப்பதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
மோதல்களில் தமிழேந்தி உயிரிழந்திருப்பதனை இராணுவத்தின் புலனாய்வுத் துறையினர் ஊர்ஜிதம் செய்திருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
பலத்த மழைக்கு மத்தியிலும் படையினர் சற்றும் தளராது தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் படையினரின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து முகம் கொடுக்க முடியாத புலிகள் காயமடைந்தவர்களையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
palli
கருனா ஆனந்த கூத்து ஆடியிருப்பாரே. அவரை இந்தநிலைக்கு உயர்த்த அடிக்கல் நாட்டியதே இந்த தமிழேந்திதானே.
santhanam
கணக்கு கேட்டு ஆப்பு இறுக்க காரணமானவர்.