பாதுகாப்புப் பிரதேசத்துக்கு 115 பொது மக்கள் நேற்று வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கியே 115 பொதுமக்களும் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி முதல் 1800 பொது மக்கள் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர், கடல் மற்றும் தரை வழிகளைப் பயன்படுத்தி யாழ்., வவுனியா, திருகோணமலையை நோக்கி ஜனவரி முதல் இதுவரை 38, 477 பொது மக்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
படையினரிடம் தஞ்சமடைந்த 115 பொதுமக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் இராணுவத்தினர் செய்து கொடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், வழக்கமான நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவர்களை நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.