இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார். உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளையும் இங்கிலாந்து அரசு செய்து வருகிறது. ரஷியாவிற்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடையும் விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ரஷியாவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.
முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கூட, போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு நேரில் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்,
பிரித்தானிய ஆட்சியாளர்கள் உக்ரைனிய நிலவரங்களை திட்டமிட்டு வேண்டுமென்றே மோசமாக்கி உக்ரைனுக்கு கொடிய ஆயுதங்களை வழங்குவதால் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ரஷ்யா, பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், முன்னாள் பிரதமர் திரேசா மே, வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் உட்பட்ட பிரித்தானிய அரசாங்க உறுப்பினர்கள் தனது நாட்டிற்குள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.