எங்கு பார்த்தாலும் ஒரு குடையின் கீழ் அணி திரளுங்கள். இரண்டு குடையின் கீழ் அணி திரளுங்கள் என்று ஒரே அவியல். ஐபிசியில என் ரி ஜெகன் அண்ணன் தொப்புள்கொடி அறுநாக்கொடி என்று அறுவை தாங்க முடியேல்ல. மூலைக்கு மூலை சங்கம். நாட்டுக்கு நாடு கோசம். பிரபாகரனைக் காப்பற்றுவதற்காக வன்னி மக்கள் என்ற முலாம் பூசிக் கொண்டு, சன்னி பிடித்தலையும் கூட்டத்தை பார்த்து சிரிப்பதற்கு கூட மனமில்லாத துயர் மனதை வாட்டுகிறது. (இடைக்காடர் கொஞ்ச நாள் குடை பிடித்தார். இடையிலை காடர் ஒட இப்ப புது கோஸ்ரி கிளம்பியிருக்கு)
தலைப்புக்கு வருவோம். றீடஸ் டஜஸ்ற் (Readers Digest) என்ற புத்தகத்தில் சில வருடங்களுக்கு முன் வாசித்த ஒரு சிரிப்பு பகுதி. ‘ஒரு நாட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அந்த நாட்டு அரசு மக்களை பொது இடங்களில் கூடுமாறு பணிக்கிறது. அப்போதுதான் இலகுவாக பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை நகர்த்தலாம் என்பது திட்டம். மக்கள் அல்லோகலப் பட்டு பக்கத்தில் இருந்த பாடசாலைக்கு ஓட ஒரு யேசுவின் மீது அதீத அன்பு கொண்ட பக்தன் மட்டும் வீட்டில் இருந்து வெளியேற மறுத்து விடுகிறான். வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அந்தச் சமயம் ஒரு வள்ளம் வந்து ஏறிக் கொள் என்று கேட்க மறுத்து விடுகிறான் பக்தன். வெள்ளம் கூரையை மூடுகிறது. பக்தன் கூரைமேல் ஏறி நிற்கிறான். மீண்டும் ஒரு வள்ளம். மறுத்து விடுகிறான் பக்தன். உங்களுக்கு கடவுளில் நம்பிக்கை இல்லாவிட்டால் செல்லுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னைக் கடவுள் காப்பாற்றுவார். இப்போது வெள்ளம் கூரையையும் தாண்டி அவன் கழுத்துக்கு வருகிறது. அந்த வேளையில் ஒரு ஹெலி ஏணியை இறக்கி ஏறும்படி வற்புறுத்த மறுத்து விடுகிறான் பக்தன். பின் மரணம். கடவுளிடம் செல்லும் அவன் சாதாரண மக்கள் முன்னால் என் அன்பை கொச்சைப் படுத்தி என்னை ஏமாற்றி விட்டாயே ஆண்டவா. நான் மரணித்தது கூட கவலையில்லை நீ தக்க தருணத்தில் உதவி உன்னை நம்பியவர்களை காப்பாற்றியிருக்க வேண்டாமா என்று கேட்கிறான்.
அமைதியாக பொறுமையாக பதட்டமில்லாமல் இருக்கும் கடவுள் சொல்கிறார். “பக்தா இரண்டு வள்ளம் அனுப்பினேன். ஒரு தடவை ஹெலி கூட அனுப்பினேன். நீ எதிலுமே ஏற மறுத்து விட்டு தற்போது என்னைக் குறை சொல்வது என்ன நியாயம்.”’
ஏக பிரதிநிதித்துவம் என்ற பிசாசு பிடித்து தலைமைப் பதவி என்ற மாயக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எதிரே நின்றவர்கள் எல்லாரையும் எதிரி என்று சுட்டுவிட்டு குடை, படை என்று ஒப்பாரி வைக்கிறீர்களே நீங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்த சில வால்கள் உட்பட தமிழர்களுக்குச் செய்த பாதகச் செயலுக்காக தார்மீகப் போராட்டத்தை தர்பார் சண்டித்தனமாக ஆக்கி விட்டு ஒரு குடையின் கீழ் வாருங்கள் என்று கூவுவதற்க்கு பதிலாக பெற்றோல் ஊத்தி மற்றவன் கொழுத்த நீங்கள் மறத் தமிழன் பட்டம் கொடுக்கிறதை விட்டுவிட்டு உங்களுக்கு நீங்களே பெற்றோல் ஊத்திக் கொழுத்தலாமே. லண்டனிலை பெற்றோல் ஸ்ரேசன் முழுக்க நம்மட ஆக்கள் தானே. இலவசமா வாங்கலாம்.
பிரபாகரன் என்ற தழிழீழ பக்கதனுக்கு அதனை அடைவதற்கு எத்தனையோ வள்ளங்கள் வந்து நின்றன. எத்தனையோ ஹெலிகள் வந்து நின்றன. அத்தனையிலும் ஏற மறுத்து விட்டு ஒரு குடையின் கீழ் அணிதிரளுங்கள் என்று கூச்சலிடுகிறீர்களே தமிழ் பேரவை என்ற போர்வையைப் போத்திக் கொண்டு சில புலத்து ‘மா’க்களே உங்களுக்கு என்ன தமிழன் கேணயன் என்ற நினைப்பா? புலம்பெயர் சூழலிலும் பிளேன் விளையாட்டுக் காட்டுகிறீர்களா?
சித்திரா அச்சகத்தில சுந்தரத்தில தொடங்கினியல். (அன்றைக்கு கூட இருந்தனியல் உதுகளைப் பற்றி ஏதும் சொல்லலாமே.) கள்ளக் காதலியிடம் தமிழீழ உணர்வு தலைக்கேறி ஒளித்து ஒளித்து செல்கையில் கைக்குண்டு வீசி காலை உடைத்து விட்டு 70க்கும் மேற்பட்ட சக அமைப்பு போராளிகளை ஒரு அறையினுள் பூட்டி வைத்து கொன்றபோது உங்கள் ஒரு குடையின் கம்பி உடைந்து போனது தெரியாதா புலத்து ‘மா’க்களே? மட்டக்களப்பில் இருந்து வந்து, பயிற்சி முடித்துவிட்டு தமிழீழக் கனவில் படுத்திருந்த ரெலோ போராளிகளை நாயைச் சுடுவது போல சுட்டு தெருத் தெருவா ரயர் போட்டு எரித்தீர்களே. அன்று சோடா உடைத்து கொடுத்து விட்டு, இன்று சொகுசா வெளி நாடுகளிலே வாழும் புலத்து ‘மா’க்களே அப்போது இரண்டாவது கம்பி உடைகிறதே என்று சொன்ன போது ஏக பிரதிநிதித்துவ பித்தம் தலைக்கேறி தலைகால் தெரியாமல் வென்ற யுத்தம் எல்லாம் வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரன் செய்தது. தோத்ததெல்லாம் பால்ராஜ் செய்தது என்று கொண்டாடிவிட்டு இன்று எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் உங்கள் குடையை.
முள்ளிக் குளத்தில் முகாம் இட்டிருந்த புளட் இயக்கப் போராளிகளை சுற்றிவளைத்து சுட்டு விட்டு அறிக்கை விட்டபோது சிவாஸ்றீகல் அடித்து விட்டு சந்தோசப்பட்ட புலத்து ‘மா’க்களுக்கு திடீரென குடைபிடிக்கும் எண்ணம் வருவதற்கு காரணம் என்ன?
காத்தான் குடியில் பள்ளிவாசலில் ”அல்லா எங்களைக் காப்பாற்று” என்று கதறக் கதற கர்ப்பிணிப் பெண்கள் என்று கூடப் பார்க்காமல் வெட்டித் தள்ளிய போது உங்கள் குடையின் இன்னொரு கம்பி முறிந்து போனது. பின் அனுராதபுரத்தில் அப்பாவி மக்களைச் சுட்டபோது, 24 மணி நேரத்தில் முஸ்லிம் மக்களை விரட்டியடித்தபோது, பாடசாலை அதிபர்கள், புத்திஜீவிகள், சகபோராளிகள், பக்கத்து நாட்டுத் தலைவன் என்று உங்கள் ஏகத்தலைவன் ஏகப்பட்ட மக்களின் அவலங்களுக்கு, அழிவுக்கு காரணமாக இருந்தபோது மேதகு என்று பட்டம் சூட்டி பச்சை குத்தித் திரிந்த இந்தச் சில புலத்து ‘மா’க்கள் அமைதியாக இருந்து விட்டு இப்போது கொக்கரிக்கிறீகளே கொழுத்தினவனுக்கு விழா எடுக்கிறீர்களே இப்போது எங்கிருந்து வந்தது இந்த ஞானம்.
ஊரில் சொலவார்கள் ‘அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது’ என்று. அரசியலால் வென்றிருக்க வேண்டிய போராட்டத்தை வெறும் ஆயுத்ததால் வெல்லப்போன தம்பிக்கு அடிவிழும் போது வந்திருக்கின்ற இந்த ஞானம் வேடிக்கையான ஞானம். அண்ணைக்கு மரணப்பயம் என்பது இப்போதுதான் புரிகிறதோ. பொட்டன் வைத்த பொட்டுக்கெல்லாம் இப்போதுதான் ஞானம் பிறக்கிறதோ. மாத்தையா என்ற போராளியை குறைந்த பட்ச கவுரவம் கூட கொடுக்காமல் சுட்டுத் தள்ளிய திமிரில் கருணா அம்மானுக்கு ஆப்பு வைக்க போன போது புரியாத தெரியாத சர்வதேச சமூகம் திடீரென தெரிந்திருக்கென்றால் அண்ணைக்கு அடி கொஞ்சம் பலமோ. அழுகை அழுகையா வருதோ?
சீமானுக்கு காசு கொடுத்து நெடுமாறனுக்கு ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்து தமிழக மக்களை தெருவுக்கு கொண்டுவந்து புதுக் குடியிருப்பையாவது காப்பாத்த வன்னி மக்கள் என்று முலாம் பூசி நீங்கள் காட்டும் பூச்சாண்டி புரியாமல் போக நாம் ஒன்றும் சாம் பிரதீபன் மாதிரி முகட்டைப் பார்த்துக் கொண்டு புலி வால்பிடிக்க தீபம் தொலைக்காட்சியில் கவிதை வாசிக்கும் நிஜத்தை மறந்த முட்டாள்கள் அல்ல.
ஏக பிரதிநிதித்துவம் என்றால் என்ன? ரெலோ தேவையில்லை. ஈபி தேவையில்லை. புளட் தேவையில்லை. முஸ்லிம்கள் தேவை இல்லை. இவ்வளவேன் எந்தப் புலத்து ‘மா’க்களும் தேவை இல்லை என்று புதுவை ரத்தின துரை எழுதின கவிதையில் வந்த நீங்கள் தேவையில்லை புலி மட்டும், புடுங்கும் என்பது தானே. அப்படி தனிச்சு நின்று புடுங்கப்போறம் என்று ஒரு லட்சம் மக்களைக் காவு கொடுத்த திட்டம் வகுப்பதில் கெட்டிக்காரன் வேலுப்பிள்ளையின் மகனிடம் போய் கேட்கலாமே ஏன் அண்ணை திட்டம் போட்டு சிங்கள ராணுவத்திற்கு பாடம் புகட்டாமல் புதுக் குடியிருப்பு வரை நீங்களே பாடம் கற்றுக் கொண்டு போறியள், இனி எப்பதான் அடிபடப் போறியள் என்று. முல்லைத்தீவு முகாம் விழுந்த போது தலைவர் நேரடி கண்காணிப்பு. ஜெயசிக்குறு ஓடியபோது தலைவர் தலைமையில் ஒப்பறேசன். இப்ப துண்டக் காணம் துணியக் காணம் என்று ஓடும் போது தலைவர் முதல்லேயே ஓடிவிட்டாரா. இல்லை என்றால் ஒரு திட்டத்தை போட்டிருக்கலாமே.
குழந்தை பிறக்கிறபோது குறிப்பு எழுதுவார்கள். அப்போ ஊர் சாத்திரி சொல்வார். இவருக்கு தரையிலை கண்டம். தண்ணியிலை கண்டம் என்று. அதுபோல மாவிலாறு தண்ணியிலை கை வைக்கும் போது தெரிந்திருக்க வேண்டும் அண்ணைக்கு கண்டம் ஸ்ராட் பண்ணுதெண்டு. பால மோட்டையிலை அடி விழும் போது தலைவர் பொறுமையா இருந்தார். மல்லாவியிலை மரண அடி விழுந்த போது தலைவர் பொறுiமாய் இருந்தார். கிளிநொச்சி வரைக்கும் எத்தினை கதை விட்டீர்கள். உள்ளுக்கை விட்டு அடிப்பார் என்று உள்ளுரக் கனவு கண்டுகொண்டு மன்னாரில் மக்கள் செத்தபோது மட்டக்களப்பில் மக்கள் செத்தபோது வவுனியா வடக்குப் பிரதேச சண்டையில் மக்கள் செத்தபோது மூதூரில் மக்கள் செத்தபோது தாசீசியஸின் பாசையில் மக்கள் எல்லாம் மாடுகள் என்று பேசாமல் இருந்து விட்டு தலைவர் புதுக்குடியிருப்புக் காட்டுக்கை சூடுதின்ற யானைபோல சுழரும்போது வந்திருக்கும் உங்கள் ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல் போகுமளவுக்கு தமிழ் பேரவையில் வேலை செய்பவர்கள் அல்ல மக்கள். எமக்கு நிஜமும் தெரியும். புலியினால் ஏற்பட்ட வலியும் தெரியும். அதனால் ஏற்பட்ட வடுவும் தெரியும்.
அதால இலங்கை அரசாங்கத்தின்ர ஜில்மால் கோல்மால் தெரியேல்லை என்று நினைக்க வேண்டாம். அதுவும் தெரியும். தம்பி எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறதும் தெரியும். அவைக்கு தனிவிருந்து இருக்கு. அது கிடக்கட்டு இப்ப.
ஜ.நா வுக்கு சொல்லச் சொல்லிறியள். சொல்கெயிமிட்ட சொல்லச் சொல்லிறியள். கருணாநிதியிட்டை சொல்லச் சொல்லிறியள். ஒபாமாவுக்கு கடிதம் போடச் சொல்லிறியள். (ஒபாமா என்ன ஆனந்தசங்கரி என்ற நினைப்பா) பிறவுணுக்கு மனு அனுப்பச் சொல்லிறியள். இது எல்லாத்திற்க்கும் காரணம் வன்னி மக்களைக் காப்பாற்றுவதுதான் என்றால் அண்ணைக்கு ஒரு கடிதம் போட்டிருந்தால் எல்லாம் முடிந்திருக்குமே. அடைச்சி வைச்சிருக்கிறது அண்ணை. அதுக்குள்ள உள்ள சனத்துக்கு நீங்களும் செல் அடிக்கிறியல். தப்பிப் போற சனத்தையும் சுடுறியல். பிறகு ஜ.நா வுக்கு மனுக்குடுக்கிறயல்? என்ன எங்களை வைச்சு நீங்கள் காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே?
முதல் வள்ளம் திம்புப் பேச்சு வார்த்தையில் வந்து நின்றது. பிரபாகரன் ஏறிக்கொள்ளவில்லை. வெள்ளமும் அவ்வளவாக இருக்கவில்லை. மன்னித்து விடலாம். பின்னர் வந்தது இலங்கை இந்திய ஒப்பந்த வள்ளம். இந்த வள்ளத்தைப் பிடிச்சு சாதுரியமாக அரசியல் செய்திருந்தால் ஒரு கரை சேருறதுக்கு வாய்ப்பு இருந்தது. இலங்கை வந்திருக்கும் இந்திய இராணுவத்தோடு ஒத்துழைத்திருந்தால் ஜேவிபி போன்ற இனவாத கட்சிகள் தெற்கில் தலையெடுத்து விரிவடையும் போது தவிர்க்க முடியாதபடி தமிழ் மக்களுக்கு உதவிசெய்து நிரந்தர தீர்வுக்கு இட்டுச் செல்லக் கூடிய அரசியல் சூழலை உருவாக்கியிருக்கலாம்.
அல்லது குமரப்பா புலேந்திரன் உட்பட 11 பேரையும் கொழும்பு கொண்டு செல்ல விட்டிருந்தால் இலங்கை அரசின் ஒப்பந்த முறிப்பைச் சாதகமாக்கி இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம். துப்பாக்கியையும், குண்டுகளையும், பொட்டனையும் நம்பும் ஒரு இராஜதந்திர தூரநோக்கற்ற பிரபாகரனிடம் முடிவுகளை ஒப்படைத்துவிட்டு; சோட வாங்கிக் கொடுப்பதிலும், மஞ்சள் சேலையை கட்டிக் கொண்டு, அவற்றை உருவப் படத்தையும் தூக்கிக் கொண்டு, ஊர்வலம் போனால் தமிழீழம் கிடைக்கும் என்று உந்த TNA காரரும், சில கேணைக் கூத்தர்களும் மேடையில் கத்த கடும் குளிரில் நின்று நீங்கள் விசிலடித்ததும் மேளம் அடித்து நடனம் ஆடியதும் வன்னி மக்கள் மீதான கருணையின் நிமித்தம் அல்ல என்பதை புரிந்து கொள்ள நாமும் முகட்டைப் பார்த்துக் கொண்டு கவிதை வாசிக்க வேண்டிய தேவை இல்லை.
கடைசியா மாவீரர் உரை வாசிக்கும் போது தெரியும். இனித் தலைவர் நாயோட்டமும் சில்லறைப் பாச்சலும் தான் என்று. தமிழ்நாட்டில் அணுவாயுத சாலையை வைத்திருக்கும் இந்தியாவுக்கு பக்கத்தில் இருந்து கொண்டு பத்து றாத்தல் குண்டு போடுற மருந்தடிக்கிற பிளேனைக் கொண்டு வந்து என்ன விளையாட்டு. இதுவரைக்கும் விமானம் வைத்து கெரிலா அமைப்புக்கள் போராடாது இருக்கும் போது நாம் செய்தால் உலக வல்லரசுகள் பயப்பிடுமே. இந்தியாவுக்கு கவலை வருமே. இதுக்காகவே பூண்டோடை ஒளிச்சு கைலாயம் அனுப்பிடுவாங்களே என்று கூட யோசிக்காமல் கொண்டைக்கிளாறன் குருவி சைசிலை இரண்டு பிளேன். பத்திறாத்தல் குண்டு. இப்ப படுத்து உறங்க பத்து ஏக்கர் காணி கூட இல்லாத நிலை. ரெண்டு பிளேனையும் ஆமிக்காறன் பிடிச்சிட்டாலும் என்று 14 வயசில இருந்து வளர்த்தெடுத்த பெடியளை குண்டைக் கட்டி அனுப்பிறரே வேலுப்பிள்ளையின் மகன் இதென்ன சூதாட்டமா விட்டுப் பார்க்க. தமிழ் மக்களின் தலைவிதியை தனித்துத் தீர்மானிக்கிறோம் என்று சொல்லிவிட்டு குருட்டுத்தனமா விளையாட்டுக் காட்டினால் என்ன நடக்கும் என்று சிந்தித்து இருக்க வேண்டாமா?
அடுத்து வந்த வள்ளம் சந்திரிகா கப்டன்யாய் இருந்து செலுத்தி வந்த வள்ளம். இயலாமல் போகும் போது யுத்த நிறுத்தம் அறிவிப்பதும் அதனை சாக்காக வைத்து புலத்து மக்களிடம் காலிறுதி அரையிறுதி இனி கடைசியிலும் கடைசி என்று ஏதோ கால்பந்து உலகக்கிண்ண விளையாட்டு மாதிரி திகதி குறித்து புரட்ச்சி செய்யப் புறப்பட்ட புலிகளுக்கு வக்காலத்து வாங்கிய பேரவை போன்ற ஏதிலிகள் அன்று தட்டிக் கேட்காமல் இன்று ஒப்பாரி வைத்தால் என்ன செய்வது.
காலம்சென்ற மதிகெட்ட உரைஞ்சர் என்ன சொன்னார் என்று உந்தப் புலத்து ‘மா’க்கள் எல்லாம் மாவீரர் நிகழ்வில் கைதட்டி விசிலடிச்சவை. சந்திரிகாவை தான் வைச்சிருக்கிறதோ தலைவர் வைச்சிருக்கிறதோ என்று சின்ன இழுபறியாம். அந்தாள் அறளைபேந்து ஏதோ உளற இங்க உள்ள விசலடிச்சான் குஞ்சுகள் பட்டபாடு. அது ஏதோ மிசன் ஸ்ரேட்மன் மாதிரியெல்லோ உந்த புலத்து ‘மா’க்கள் துள்ளினவை.
அன்றைக்கு கூட்டணிகாரர் உசுப்பேத்திவிட நீங்களும் தமிழீழம் கேட்டியல். சரி ஆர்வக்கோளாறு நாங்களும் உங்களுக்கு பின்னால வந்தம். ஆனால் கூட்டணிகாரர் எல்லாம் சுத்துறான்கள் என்று சொல்லி கதைக்க வாறம் என்று போட்டு போட்டும் தள்ளிப் போட்டியள்.
ஆனால் சந்திரிகா ஆட்சிக்கு வருகிற போது நிலைமைகள் மாறியிருந்தனவே. அதற்கு ஏற்றால் போல் ஒரு தீர்வை நோக்கி புலிகளும் மாறியிருக்க வேண்டும் அல்லவா? அரசியல் சாணக்கியம் என்பதும் அதுதானே. ஆனா என்ன செஞ்சியல். நீலனை போட்டத் தள்ளினியல். சர்வதேசமே அறிஞ்ச ஒரு ஒரு அரசியல் சட்ட வல்லுனர். அந்தாள் வைச்ச தீர்வு உங்களுக்கு விளங்கேல்லை எண்டா என்ன போட்டுத் தள்ளுறதே.
அது என்ன இயக்கத்தில் ஒருத்தரும் பொம்பிளையளை பார்க்கக் கூடாது. தொட்டும் பாக்கக் கூடாது என்று சட்டம் போடுறியள். தொட்டதுக்காக சுட்டும் போடுறியள். ஆனா உண்ணாவிரதம் இருந்த பெட்டையளைத் தூக்கிக்கொண்டு போறியள். மதியை வாட்டசாட்டமா கண்டவுடனை மெதுவா தொட்டும் பாக்கிறியள். மஞ்சள் தண்ணி வேறை ஊத்துறியளாம். பிள்ளையும் பெறுறியள். அதை பிழையென்று நான் சொல்ல வரேல்ல. ஆனா ஒழுக்க விதி என்ற பெயரிலேயே உமாவையும் சுட்டியள். கூட இருந்தவனை சுட்டியள். பிறகு மாற்றத்தின் தேவையை தலைவருக்கு சதி வரும் போது உணர்ந்தீர்கள் தானே. கால மாற்றத்தைக் கண்டு ஒழுக்க விதியையும் மாத்தினீர்கள் தானே. அதுதானே ஒரு போராட்ட அமைப்புக்கு தேவையான கொள்கையும் கூட. அதே போல சந்திரிகா தலைமையில் வந்த வள்ளத்தில் ஏறியிருந்திருக்க அல்லவா வேண்டும். இது என்ன உங்கள் குடும்பச் சொத்தா? 60000 மக்கள் பலியாகியிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த வள்ளம் வன்னிக் கடலில் நின்றபோது ஏறமறுத்து தமிழ் மக்களின் தலைவிதியை நாசமறுத்து போட்டு ஜ.நா வுக்கு கடிதம் போட்டால் உது என்ன விளையாட்டு.
ரெலோ எதிரி. ஈபி எதிரி. மகிந்த எதிரி. இந்தியா எதிரி. அமெரிக்கா எதிரி. ஜரோப்பா எதிரி. முஸ்லிம்கள் எதிரி. கருணா, பிள்ளையான் எதிரி. புளட் எதிரி. புளியம் பொக்கணை பொன்னம்மாக்கா மகளை அனுப்ப மறுத்ததாலை அவவும் எதிரி. சரி அதை விடுவம். தமிழ் பேரவையையும் தீபம் தொலைக்காட்சி சாமும் மனிசியும் தவிர புலிகளுக்கு யார் நண்பர்கள். யாராவது ஒரு நாடு. ஒரு கட்சி (TNA) ஜோக் அடிக்கக் கூடாது நான் சீரியசா கேக்கிறன். ஒரு சங்கம். ஏன் நீர் மாடுகள் மாதிரி சாய்த்துக் கொண்டுபோய் சுத்திவர விட்டு விட்டு நடுவிலே நின்று உயிர்ப்பிச்சை கேட்கும் வன்னி மக்களில் குறைந்தது 3 பேராவது ஆதரவளித்தால் தமிழீழம் சாத்தியம் என்று நம்பலாம். அதில் எதுவுமே சாத்தியமில்லாமல் பொட்டனையும் நடேசனையும் தவிர இயக்கத்தில் இருந்த அத்தனை திறமை சாலிகளையும் எதிரியாக்கி போட்டு 40 கி.மீ.பரப்பளவுக்குள் ஓடி ஒழிந்து கொண்டு சர்வதேச சமூகம் கண்ணைத் திறக்க வேண்டும் என்று அறிக்கை விட்டால் இது என்னப்பா விளையாட்டு. அரசியல் ஒரு விளையாட்டு அரங்கு என்று இதற்க்குத்தான் சொன்னார்களோ?
ஜயா சர்வதேசத்துக்குள் தான் இந்தியா இருக்கு. இந்தியாவிலை வைச்சு ராஜீவை போட்டியள். சர்வதேசத்துக்குள் தான் பிரான்ஸ் இருக்கு. அங்கு வைத்துத்தான் சபாலிங்கத்தைப் போட்டியள். ஏன் உங்கட நாதனை கஜனைப் போட்டியள். சர்வதேசத்துக்குள் தான் இங்கிலாந்து இருக்கு. இந்த நாட்டுப் பிரசை அதுவும் உங்களுக்கு வாலாட்டிக் கொண்டிருந்த ஒரு அபிமானி பார் என்றால் பளார் என்று அறைந்துவிடும் அளவுக்கு அபிமானி. இந்த பிரித்தானிய பிரைசையைக் கூப்பிட்டு வெளிநாட்டுக் கோவணத்தையும் அவிட்டுப் போட்டு எலியை விட்டா? (இந்த ‘கோவணம்’ அண்ணன் ‘ராசாகரனின்ட மார்க்ஸிச டிக்சனரியில’ இருந்து சுட்டது. அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.) இது என்ன அம்மண விளையாட்டு. இது ஏதும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய தமிழர்களின் வீர விளையாட்டுகளில் இதுவும் ஒன்றோ?
சர்வதேசத்திற்குள் தான் கனடா இருக்கு. அங்கை பத்திரிகை ஆசிரியர்களை அடிச்சியள். இப்படி சர்வதேசம் முழுக்க நாசம் பண்ணிப்போட்டு. இப்ப உங்கட கோவணத்தையும் மகிந்த பிறதேர்ஸ் புடுங்கப் போறாங்கள் என்ற உடன ஒபாமாவுக்கு கடிதம் போடுங்கோ. இன்ரநஷனல் கொம்மியூனிற்றை சொல்லுங்கோ எண்டா. எங்கை நீங்கள் அநியாயம் பண்ணாது விட்டீர்கள் நாம் அங்கு சென்று முறையிட. அதென்ன ஜெயதேவனின்ர கோவணத்தைக் கழற்றும் போது ஒருவருக்கும் நீங்கள் கடிதம் போடச் சொல்லேலை. பிரபாகரன்ரை கோவணம் பறிபோகும் போது மட்டும் துள்ளினா இது என்னப்பா நியாயம். வேணும் என்றால் சாம் பிரதீபனிடம் சொல்லி அண்ணையின் கோவணம் என்ற தலைப்பில் ஒரு போன் இன் (Phone in) புறோக்கிறாம் வைக்கச் சொல்லுங்கோ. சந்தா கட்டின ஆக்களை பைத்தியக்காரர் என்று நினைக்கும் தீபம் நிருவாகம் நிச்சயம் அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். என்னடா GTV, IBC பற்றி வாயே திறக்கிறான் இல்லை என்று யோசிக்க வேண்டாம். அதுதான் திறந்தாலே தெரியுமே.
சரி எல்லா வள்ளத்தயும் விடுவோம். கடைசியாக வந்தது நோர்வேயிலிருந்து ஹெலி. தமிழர்களின் போராட்ட வரலாறில் கவுரவமாக ஒரு தீர்வை அடைவதற்கான கடைசி வழி. இரணைமடுக் குளத்திலை ஏறுறியள். மாலை தீவிலை இறங்கிறியள். தாய்லாந்து போறியள். சரக்கு வேறை பாக்கிறியள். சமஜ்டி முறையிலான ஒரு தீர்வுக்கு கையொப்பம் இட்டு விட்டு நாடு திரும்பின கருணாவை நாட்டை விற்று விட்டு வந்துவிட்டான் என்று நையாண்டி பண்ணிவிட்டு கவுரவமான ஒரு தீர்வுக்கு கிடைத்த ஹெலியை தவறவிட்ட வரலாற்றில் தமிழினம் என்றும் மன்னிக்க முடியாத தவறை இழைத்திருக்கிறார் பிரபாகரன்.
நீங்கள் காலில் விழுந்து கதறியழுது, செஞ்சிக் கூத்தாடி, பிச்கைச கேட்டு கடிதப் போட்டு, மண்டியிட்டு, தமிழினம் வரலாற்றில் காணாதா அவமானங்களையும், இழிவுகளையும் சந்திக்க வைத்து, இன்று புதுக்குடியிருப்பு காட்டுக்குள் புடையன் பாம்புகள் போல வெடிபட்ட கரடிகள் போல வெந்து துடிக்கிறீர்களே ஒரு வேளை பிரபாகரனும் பொட்டனும் சக பாடிகளும் இந்த இறுதி அழிவிலருந்து தப்பித்துக் கொண்டாலும் தமிழினத்தின் மரியாதை கௌரவம் நியாயமான தீர்வு என்று அத்தனையையும் குழி தோண்டிப் புதைத்ததற்காக வரலாறு உங்கள் மீது காறி உமிழும் என்பதை மறந்து விடவேண்டாம்.
எத்தனை வள்ளம் வந்தது. எத்தனை ஹெலி வந்தது. எத்தனை தடவை எங்கள் மக்கள் கவுரவமாக வாழக் கூடிய சந்தர்ப்பம் வந்தது. அத்தனையையும் போட்டு நொருக்கி விட்டு ‘உள்ளே விட்டு அடிப்பார்’ என்ற கனவில் இருந்த புலத்து ‘மா’க்களிடம் கேட்பது இதுதான். காப்பாற்றப்பட வேண்டியது வன்னி மக்களும் அவர்களது வாழ்வும். அது உங்கள் உள்ளங்களை உறுத்தினால் ஊர்வலம் செல்லுங்கள். வன்னி மக்களை விடுவிக்கும்படி. உண்ணாவிரதம் இருங்கள். உயிர்களைக் காப்பாற்றும் படி. எண்ணை ஊற்றி உங்களை நீங்களே கொழுத்துங்கள். பிரபாகரனே உனது முட்டாள் தனத்திற்கு ஒரு எல்லை இருக்கு. போதும் பிளளைகளைக் கூட்டிக்கொண்டு எங்காவது தொலைந்து விடும்படி. தமிழர்கள் இனி தங்கள் தலைவிதியை ஏகப்பட்ட பிரதிநிதிகளிடம் கொடுத்து நிர்ணயித்துக் கொள்ளட்டும்.
rajai
ஈழமாறன்! நலலா சொன்னீர் அப்பா… இந்த ஆக்கத்தை பல தடவை வாசித்திட்டேன்…. சூப்பற் ஐயா…
Suresh M.M.A
இதற்கு மேலும் ஏதாவது விளக்கம் தேவையோ அல்லது கடையைக் கட்டுறதோ புலிபாடி நண்பர்களே?! இத்துடனேயே ஓடி விடுங்கள்… இல்ல.. எமது தாத்தா பாட்டி கொள்ளுப்பாட்டன் என்று இன்னும் இரண்டு நாட்களுக்குள் இங்கு வந்து பின்னூட்டம் விட்டே உங்கள் தலைகளை உருட்டி விடுவார்கள்.
சுரேஸ் டபுள் எம்.ஏ
thanam
சும்மா பகுடி விளையாட்டு வேண்டாம் பாருங்கோ! தலைவரை பற்றி என்னா நிணைத்தீர்கள் தலைவர் விளிகள் சிவக்கின்றன வன்னியில் இருக்கும் அத்தனை இராணுவமும் மண்டியிடத்தான் போகிறார்கள் இதை தலைவன் நடத்திக்காட்டுவார் பொறுத்திருங்கள் தலைவன் திட்டம் எப்படி என்று உலகம் அதிர்ச்சி அடையத்தான் போகிறது. தமிழ் ஈழம் வெகு துரத்தில் இல்லை அதோ அங்கு பாருங்கள் தமிழ் ஈழம் பார்த்தீர்களா! வெறு என்னா தலைவன் வாழ்க !தலைவன் குடும்பம் வாழக
Tamil
புலிகள் சந்தர்ப்பங்களைவிட்டு பிழையான முடிவுகளை எடுத்தார்க்ள் என்பதைவிட புலிகள் இப்படித்தான் முடிவெடுப்பார்கள் என்பதுதான் அடிப்படை நியதி இதனை 25 வருடமுன்பே எம்மைப்போன்ற பலர் கூறியதுதான்; என்றாலும் நல்லதொரு ஆக்கம் – நன்றி
Sinna Siththar
Sri Lanka will save V Prabaharan in order to completely finish off Tamil Speaking People’s Struggle.
lamba
Sinna Siththar, Mr prapakaran helps the sri lanka to completly vanish the tamils from Sri Lanka but the Persident have better understanding than him : he is from tamil genaration.
BC
ஈழமாறன் இந்த முக்கியமான பதிவுக்கு நன்றி.
சந்ததியார்
/வென்ற யுத்தம் எல்லாம் வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரன் செய்தது. தோத்ததெல்லாம் பால்ராஜ் செய்தது என்று கொண்டாடிவிட்டு இன்று எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் உங்கள் குடையை./—-
இதுதானப்பா திருமதி ரஜனி திரனகமாவின் முறிந்தபனையிலும் நியாயப்படுத்தப் படுகிறது. ஆங்கிலத்திலுள்ள “இன்டிவிஜுவல் பிரஸ்பெக்டிவ்” என்ற பதத்தை பார்க்கவும், இதனால் இலாபம் இருக்கும் வரை இதிலிருந்து வெளியே வரமாட்டார்கள், இதிலிருந்து வெளியே வராதவரை, குழப்பங்களில் இருந்து வெளிவர இயலாது!. கொழும்பிலுள்ள “கெசல்வத்தை-வாழைத்தோட்டத்திலிருந்துதான்” (பிரேமதாசாவின் கோட்டை)அந்தகாலத்தில், டிவி, டெக், போன்ற கடத்தல் சாமான்கள், வரி இல்லாமல், இறக்கப்பட்டு, வல்வெட்டித்துறை வழியாக இந்தியாவை சென்றடையும், இந்த “இன்டிவிஜுவல் பிரஸ்பெக்டிவ்” அடிப்படையிலேயே 1989 ல் உறவு மலர்ந்ததென்றால் மற்றவற்றை பார்த்துக் கொள்ளுங்கள். “தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் கூறியது”,”ஒரு அரசியல் அஜண்டாவின் அடிப்படையில், சிங்களவர்களுடன் உறவு மலர வேண்டும் என்பது”.
சந்ததியார்
/சீமானுக்கு காசு கொடுத்து நெடுமாறனுக்கு ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்து தமிழக மக்களை தெருவுக்கு கொண்டுவந்து புதுக் குடியிருப்பையாவது காப்பாத்த வன்னி மக்கள் என்று முலாம் பூசி நீங்கள் காட்டும் பூச்சாண்டி புரியாமல் போக நாம் ஒன்றும் சாம் பிரதீபன் மாதிரி முகட்டைப் பார்த்துக் கொண்டு புலி வால்பிடிக்க தீபம் தொலைக்காட்சியில் கவிதை வாசிக்கும் நிஜத்தை மறந்த முட்டாள்கள் அல்ல./—அட்ரா சக்கை!!. நான் “பிளாட்டின்” உறுப்பினர் இல்லை, என்னுடைய குருநாதர், பட்டுக்கொட்டையில் பிறந்த, அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியலாளரான, மறைந்த, முன்னாள் அமைச்சர் திரு.எஸ்.டி.சோமசுந்தம் (அவர் துவங்கிய நமது கழகம் கட்சிக் கொடியை நான்தான் தீர்மானித்தேன்) அவர்கள்,” இலங்கைப் பிரச்சனை இலங்கையருடையது”, அதில், இனத்தில் முரண்பாடில்லை, கிரிமினாலிட்டி உள்ளது, அதில் இறுதி உறவுக்கான “பாசிட்டிவ்” “பிளாட்டில்” உள்ளது போல் இருக்கிறது என்றார்.
ashroffali
ஈழமாறன்
மிக அற்புதமான கட்டுரை. பார்த்து கவனமாக நடந்து கொள்ளவும். அரச ஆதரவாளன் என்று கண்டபடி பாயப் போகின்றார்கள். ஏனென்றால் நீங்களே குறிப்பிட்டுள்ளது போல புலிக்கு மட்டுமல்ல புலியின் ஆதரவாளார்களுக்கும் கூட எதிர்க்கருத்து மட்டுமல்ல யதார்த்தமும் புரியாது. பொருத்தமான தருணத்தில் வரையப்பட்ட அற்புதமான கட்டுரை. பாராட்டுக்கள் ஈழமாறன்.
chandran.raja
இனியொரு விதி செய்வோமா? என்னாலும் காப்போமா? நாம் பேரினவாதத்தில்லிருந்து சுயநிர்ணய உரிமையைப்பெறுவதற்கு முன் எம்மிலும் சிறுமான்மையாக இருப்பவர்களுக்கு நாம் சுயநிர்ணயஉரிமையை முதல் வழங்குவோமா? எவர் துரோகிப்பட்டம் சூட்டுகிறார்களோ அவர்களுக்கே துரோகிப்பட்டம் உரியது என புதுமொழி எழுதுவோமா? ஆயுதங்களை முழுமையாக நிராகரித்து விவாதம் தர்க்கத்தின் மூலம் உண்மையை கண்டறிவோமா? பொதுசொத்து எல்லாம் எம்சொத்து என அக்கறை கொள்வோமா? வாள் எடுத்தவன் வாளாலையே மாள்வது போல நீதியில் வாழ்தவனுக்கு நீதியாலேயே தீர்ப்பு எழுதப்படுமென நம்புவோமா? எல்லா இனமத மக்களும் எம்நாட்டு மன்னர்களே! எனகொள்வோமா? ஐக்கியப்பட்டு வாழ்வதே ஒன்றிணைந்த இலங்கையென ஐக்கியபடுவோமா? இனமத ஐக்கியமே நாம்காணும் கனாக்காணும் இலங்கையென உறுதி எடுப்போமா?
anpu
அஸ்ரப் அவர்களே ஈழமாறன் முதல் கட்டுரயில சொல்லியிருக்கிறார் தான் இலங்கையில்தான் சீவிப்பதாக. ஆனபடியால நீங்கதான் அவரை கவனமாய் பார்க்க வேண்டும். பாதுகாப்பு விசயத்தில் இலங்கையில்தான் ஒன்றுக்கு பத்துத்தரம் எவரும் யோசிக்க வேண்டும். எந்தப் புத்துக்குள்ளை எந்தப் பாம்போ? கொல்லுறவன் எல்லாரும்தான் தன்தன் கொலை சரியென நியாயப்படுத்தும் நாடு அது.
chandran.raja
ஈழமாறன் மறந்துபோன ஒன்று. தமிழ் சினிமாவில் வருகிறமாதிரி வில்லன் இறுதியில் காதலியிடமோ உறவுகாரர் பிள்ளைகளிடமோ கத்தியை துப்பாக்கியை கழுத்திலையோ மண்டையிலையோ வைத்து மிரட்டுகிறமாதிரி வன்னிமக்களை சித்தரித்திருந்தால் இந்த ஆண்டின் சிறந்த கட்டுரை என்ற இடத்தைப் பெற்றிருக்கும்.
kala
சிலம் டோக் மில்லியனர் போல புதுக்குடியிருப்பு ஜங்கிள் டோக் கில்லர் என்ற படம் வரும் போது சந்திரன் நிச்சயமாக நீங்கள் சொன்ன முடிவுதான் வரும். பட முடிவில் “வேங்கைகளின் தாகம் வேண்டாம் சாமி விடுங்கோ கோவணத்தை” என்று சொல்லிக்கொண்டு அண்ணை ஓட பின்னாலை “நீ முழுசி முழுசி திரியும் போதே தெரியும் என்னையும் ஒருநாள் பலிக்கடா ஆக்குவாய் என்று ” மதியக்கா முனக இளையராஜா வின் இசையில் “ஆமி செல்லாலை அடிக்கிறாங்கள் நாக்க மூக்க- மக்கள் பொல்லாலை அடிக்கிறாங்கள் நாக்க மூக்க நாக்க மூக்க” என்று பிரபாகரன் ஆட” இடையிலை நடேசனும் பொட்டனும் வள்ளத்தில் நின்று கைகாட்டும் போது றோளிங் ரைற்றில் போட்டால் நல்லா இருக்கும்.
bala
ஈழமாறன் அவர்களுக்கு
காத்திரமான ஒரு கட்டுரையை எழுதி வழங்கியமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்தும் மேலும் ஆரோக்கியமான கட்டுரைகளை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.தெளிவும் உறுதியும் உண்மையும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.
பாலா
Raj
(நாம் ஒன்றும் சாம் பிரதீபன் மாதிரி முகட்டைப் பார்த்துக் கொண்டு புலி வால்பிடிக்க தீபம் தொலைக்காட்சியில் கவிதை வாசிக்கும் நிஜத்தை மறந்த முட்டாள்கள் அல்ல.)
இந்த கருத்தை வைப்பதன் நோக்கம் திரு.சாம் அவர்களது திறமையை நான் குறைத்துப் பார்க்கவில்லை. ஆனால் சில சமயம் படித்தவர்களிடம் திறமை உள்ளவர்களிடம் நியாயத்தன்மை இருப்பதில்லை. இவ்வாறோரது நடுநிலமையற்ற போக்கினாலேயே இந்தப்போராட்டம் இந்த இழிநிலைக்கு வந்தமையை எல்லோருமே ஒப்புக்கொள்வர்(கண்கெட்ட தனமான ஊக்குவிப்பு எனலாம்)உங்களைப் போன்றோரின் உழைப்பை சமாதானத்தை நிறுத்தி செலுத்தியிருந்தால் எத்தனையோ உயிர்களைக் காத்திருக்கலாம். புலம்பல் போதும்.
damilan
சில பழமொழிகள் இத்தாள் உறுதி செய்யப்படுகின்றது.
1. பிச்சை வேண்டாம் நாயைப் ( ஆமியை) பிடி
2. துள்ளின மாடு (புலி) பொதி சுமக்கும்
3. அரசன் அன்று கொல்வான் தெய்வம் (ஆமி) நின்று கொல்லும்
4. தன்வினை தன்னைச் சுடும்
சில பாடல்கள் பிரபாகரனுக்கு படிப்பதற்கு ஏற்றது
1. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.
2. வாழ்வே மாயம் இந்த வாழ்வே …
3. சட்டி சுட்டதடா கையை விட்டதடா ….
4. வாழ்வா சாவா விடை சொல்ல நீ வா …
5. சொந்த சுமையை துர்க்கி தூக்கி சேர்ந்து ….
6. இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேட்காதோ…
7. ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டன் …
8. பாதை எங்கே பயணம் அங்கே..
9. மனமே மயங்காதே விழியே கலங்காதே விதி செய்த ….
10.என்ன கதை சொல்லச் சொன்னா எந்தக்கதை சொல்லுறது …
thevan
அண்மையில் ஒரு நண்பர் சொன்னார் “தலைவரின் விளையாட்டு மிக விரைவிலை தெரியும்” என்று. இன்னும் தலைவர் ஏதாவது செய்வார். இராணுவம் தலைதெறிக்க ஓடும். என்ற கனவில் வாழுகின்ற சிலரை எண்ணும் போது வேதனையாக இருக்கிறது. புலிகள் இன்னும் பலம் இளக்கவில்லை என்றால் பொதுமக்களை அடைத்து வைத்து புதுக் குடியிருப்பை தக்க வைக்கவேண்டிய தேவை என்ன இருக்கிறது. மாவிலாறில் சண்டை தொடங்கியபோது இறந்த புலிகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டது. மன்னாருக்கு யுத்தம் நெருங்கியபோது புலிகளின் எண்ணிக்கைக்குப் பதிலாக இராணுவத்தின் எண்ணிக்கை வெளியிடப்பட்டது. தற்போது தனிய மக்களின் தொகை வெளியிடப் படுகின்றது. அதுவும் ஏதோ வீர சாகசச் செயல்போல 100 பொது மக்கள் பலி. 200 குழந்தைகள் பலி. 500 பேர் காயம் என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இவ்வளவு அளிவும் தம்மால் தான் வந்தது என்ற குற்ற உணர்வு கூட இல்லாமல் அறிக்கை விடும் நடேசன் அன்ட் கோ வுக்கு வக்காலத்து வாங்க தமிழ்பேரவை அன் கோ கிளம்பியிருப்பது ஆச்சரியம் இல்லாத அருவருப்பான செயல்.
sapi
இந்த கட்டுரையில் இருந்து புலி எதிர்ப்பாளரின் கையாலகத செயப்பாட்டை ஈழமாறன் கட்டுரையாக தந்துள்ளார்.
murugan
லண்டன் கவிஞர் இராஜ மனோகரன் ஒரு எஞ்சினியர். அதாவது படித்தவர். அவர் சொல்கிறார் மக்களை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. மக்கள் தான் (எந்த மக்கள் புலம் பெயர்ந்தவர்களா நாட்டிலுள்ளவர்களா) புலிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். நாம் சொல்வதைத்தான் புலிகள் செய்கின்றனர். நாமே புலிகளை வழிநடத்துகின்றோம்.
ஆதாரம்- லண்டன் பிபிசி தமிழ்சேவை.
படித்தவர்களுக்கும் நியாய தர்மங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
sapi
//வென்ற யுத்தம் எல்லாம் பிரபாகரன் செய்தது தோத்த யுத்தம் எல்லாம் பால்ராஜ் செய்தது என்று கொண்டாடிவிட்டு//
தயவு செய்து ஈழமாறன் இதற்கு ஒரு உதாரணம் காட்டுங்கள் பார்ப்போம்.
eelamaran
sapi, ஆக்கத்தின் அடிப்படையை விளங்காது வெறுமனே உதாரணங்களுக்குள் பிரச்சனையைக் குறுக்க வேண்டாம். ஜயசிக் குறு ஒப்பறேசனில் கிடைத்த வெற்றி எல்லாம் தலைவர் வழிநடத்தலில் நடந்ததாகவே அத்தனை புலிசார் ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. படிக்கவில்லை என்றால்………..
Suresh M.M.A
இராஜ மனோகரனை தனியாகக் கூப்பிட்டுக் கேட்டுப் பாருங்கள். அவர் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் கதைப்பார். அவர் மீடியாவில் கதைத்தால் காசு உங்களோடு கதைத்தால் வேஸ்டு.
சுரேஸ் டபுள் எம்.ஏ
ramu
மன்னாரில் செத்துப்போன புலிப் போரளிகளின் கணக்கை இராணுவம் செத்தாக கணக்குவிட்ட தலை பிறகு புதக்குடியிருப்பில் சாகிற புலிகளின் கணக்க்ககு மக்ள சாகினம் எண்டு கணக்கு விடும் ஜெகன் அண்ணை விடுரார் ஒட்டு மொத்தக் கணக்கை சித்திர புத்திரனார் மகிந்தா சொல்லத்ததான் போகிறார்.
lio
தமிழ் மக்களுக்கு பிரபாகரன் தலைமையில் தமிழீழம் கிடைத்தாலும்சரி; அல்லது பிரபாகரன் பொட்டு இல்லாத புலிகளின் தலைமையில் தமிழீழம் கிடைத்தாலும்சரி; அல்லது பிரபாகரனோ புலிகளோ ஏதாவதொரு தீர்வுக்கு இசைந்தாலும்சரி; அல்லது புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்படும் நிலை உருவானாலும்சரி; தமிழர்க்கென சுயநிர்ணய உரிமையொன்று யார் தலைமையில் கிடைத்தாலும்சரி; இல்லை எதுவுமே இல்லை தமிழர்கள் நாங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு பேசாதிருங்கள் என்று அரசாங்கம் சொல்லும் நிலை வந்தாலும்சரி; மேலுள்ள கட்டுரையில் உள்ள, மற்றும் விடுபட்ட அத்தனை கொலைகள், தவறுகள், தமிழரின் அழிவை தடுக்க கிடைத்த தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் அனைத்திற்கும் பிரபாகரனோ அவர் வழித்தோன்றல்களோ இன்னும் எத்தனை தசாப்தங்கள் போனாலும் பதில் சொல்லியேயாக வேண்டும்.
palli
டமிலன் பிரபாகரன் கேக்குறாரோ இல்லையோ, அத்தைனை பாடல்களும் அருமை அருமை.
நெஞ்சம் மறப்பதில்லை
“இன்டிவியுஜுவல் பிரஸ்பெக்டிவ்” என்ற பதத்திற்கு இன்னொரு உதாரணம்,”முஸ்லீம்களுடனான உறவு”.தமிழக கடற்கரையோர பிரதேசங்களில்,அனைத்து சமூகங்களின் ஒற்றுமையை பிரதிபலிப்பது,”நாகூர் தர்கா”,ஆப்பிரிக்கர்களுக்கு ஆயுத கடத்தல்கள் செய்து கடலில் மிதக்கும் தீவுகளை உருவாக்கி வைத்திருக்கும் “பாய்ஸ்ஸுகளுக்கு” ஆதரவு தரும்,”பாய்” ஆதரவில்,முளைத்திருக்கும் அடிப்படைவாத பள்ளிவாசல்கள் நாகூர் தர்காவை “சமாதி” என்று நக்கல்செய்து,பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த சகோதரத்துவத்தை,தொப்பியுடன் தனி அடையாளம் காட்டி சிதைக்கிறார்கள்.ஆனால் இவர்கள் ஆதரிக்கும் அக்கரை,தொழில் போட்டி காரணமாக தன்னுடைய முஸ்லீம் சமூகத்துடன் வன்முறையாக முரண்பட்டது 1993 ல் வரலாறு.அக்கரைக்கு,இக்கரைப் பச்சை சரி!!,ஆனால் அக்கரைக்கும்,இக்கரைக்கும் இவ்வளவு முரண்பாடா?.எனக்கு இந்த பாடல்தான் ஞாபகம் வருகிறது,”நெஞ்சம் மறப்பதில்லை…அதன் நினைவை இழப்பதில்லை..நான் பார்த்திருப்பேன்,எதிர்ப் பார்த்திருப்பேன்…கண்களும் மூடவில்லை…என் கண்களும் மூடவில்லை….”.
akilan
நல்ல கட்டுரை. காலம் அறிந்து எழுதப்பட்டிருக்கிறது. இது போல நிறைய ஆக்கங்களை தருவது மிக மிக அவசியம்.
vithusha
புலி பலமாக இருக்கும் போது அடுப்படிப் பூனை போல படுத்துக் கிடந்து விட்டு இப்போ கொக்கரிக்கும் கூட்டத்திற்கு தலைவர் விரைவில் பதில தருவார். அப்ப சந்திக்கிறன் உங்ளிட்ட நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க.
murugan
விதுசா எந்த உலகத்தில் இருந்து எழும்பி வாறீர். யாரும் அடுப்படிப் பூனை போல படுத்துக் கிடந்து விடவில்லை. கன்றை பறிகொடுத்த பசுவைப் போல் எல்லாம் போகுது எல்லாம் போகுது என கதறிக் கொண்டிருந்தது உங்கள் காதில் விழுந்து மூளைக்கு போகாததற்கு என்ன செய்ய?
Suresh M.M.A
விதுசா…! வாங்கோ! உட்காருங்கோ!! களைச்சுப்போய் வந்திருக்கிறியள் கொஞ்சம் ரீ குடியுங்கோ. என்னெண்டாலும் பிறகு ஆறுதலாகக் கதைப்பம். நீங்க நாக்கப் புடுங்குறீங்களோ……………. கொஞ்சம் அம்மாளாச்சி மாதிரி ஆறுங்கோ. இப்போ எங்களுக்கு நிறைய வேலைகள் கிடக்கு. ஏனைய இயக்கங்களப் பலிக் அழிக்கிறபோது சில பெரிய மனுசர் கிட்டனட்டப் போய்க் கேட்டவை கொஞ்சம் நிப்பாட்டு தம்பி பேசித் தீர்ப்பம் எண்டு. அதுக்கு கிட்டன் சொன்னது “நாங்க இப்ப பீல்டில நிக்கிறம் குழப்பாதேங்கோ” எண்டு. அதுமாதிரி விதுசா உங்களுக்கும் நாங்க கிட்டன் சொன்னதையே சொல்லுறம். உடன நீங்க கேட்கப்படாது “நீங்களென்ன ராணுவமோ?” எண்டு. நான் சொல்லுறது ஆயுத பீல்டை இல்லை. புலிகளிட்டை இருந்து தப்பி வாற சனத்துக்கு குறைஞ்ச பட்சம் நம்பிக்கை தாறமாதிரியான நாலு வார்த்தைகளையாவது சொல்ல வேண்டாமோ…?! அதைத்தான் சொல்லுறன்.
//தலைவர் விரைவில் பதில தருவார்.//விதுசா
பளுக்காத்துறை குதிரைமலைக் குகையில் ஓடிப்போய் முடங்கியுள்ள உங்கள் தலைவர் இனித் தலையெடுக்கவே இன்னொரு முப்பது வருடங்கள் வேண்டும். அதற்குள் எதிரி அவரின் தலையை எடுக்காமலிருக்க வேண்டும். தவிரவும் தலைவர் உயிரோடு பிடிபட்டால்க்கூட எமது மக்கள் அவருக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்ப மாட்டார்கள். அவரைக் கொல்வதில் எங்களுக்கு உடன்பாடும் கிடையாது. முடிந்தால் நீங்கள் வதியும் நாட்டில் அவரை அழைத்து அகதி அந்தஸ்த்து வாங்கிக் கொடுங்கள் விதுசா. இந்த அகதி வாழ்வையும் அனுபவித்துத்தான் பார்க்கட்டுமன். நாங்கள் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டோம்.
சுரேஸ் டபுள் எம்.ஏ
damilan
இந்தாங்க இபபவே கேள்வி
யார் உங்கட தலைவர்?
எந்த ஊருக்கு/பகுதிக்கு இப்ப தலைவர்
அடி(வெடி) பட்ட புலி போல என்று உவமையை கூறுலாமே?
என்ன கொக்கரிச்சாலும் பங்கருக்குள்ள கேட்காதாம்
santhanam
(புலி பலமாக இருக்கும் போது அடுப்படிப் பூனை போல படுத்துக் கிடந்து விட்டு இப்போ கொக்கரிக்கும் கூட்டத்திற்கு தலைவர் விரைவில் பதில தருவார்.)இப்படி தான் எனது நன்பர்கள் பலர் ஊர்வலம்-கொடி-சத்தியபிரமாணம் மகஐர் என்று புலம் பெயர்தேசத்தில் திரிகிறார்கள் ஆனால் படங்கள் தமிழ்நாதத்தில் வடிவாக தெரியவேண்டும் மற்றது அவர்களில் தெரிவுசெய்யபட்டவர்களின் படம்மட்டுதான் போட வேண்டும் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு நாட்டிலும் ஓரு குறிப்பிட்ட வர்க்கம் தான் இருப்பார்கள் எல்லா காலத்திலும் இவர்களிற்கு தானாம் நாட்டுபற்றாளர்.
palli
என்ன கொடுமை இது. பரதேசிபயலுவ 1981 இளையோர் படை என தொடங்கி அது கோவில் மாடு மாதிரி வளர்ந்து, மதம் பிடிச்சு எல்லார்மீதும் முட்டிமோதி இப்பாது அடங்கி போய் செய்வது அறியாமல் இருக்கும் போது, இந்த புலம் பெயர் தறுதலைகள் இங்கு உள்ள இளயோர் அமைப்பு என ஒன்றை தொடக்கி எதோ ஆகாயத்தில் பூராடம் காட்ட தொடங்கியது தமிழர்க்கு மங்கு சனி மரணசனியாக வாய்ப்புகள் அதிகம்.
இந்த இளயோர் அமைப்புக்கு தமிழ் சரியாக வராதாம். அன்றய இளயோர் அமைப்பு சொல்கிறது. இருப்பினும் தேசியத்தை நேசிப்பார்களாம். இது சரியாக வரும் போல் பல்லிக்கு படவில்லை.
அதுகள்(புலம் பெயர் இளயோர்கள்) புலிகொடியை படுத்துற பாடு இருக்கே. நேற்று ஒரு சிறுசை பார்த்தேன் (அது தேசம் படிக்கும் நிலையில் இல்லை) இடுப்பு பெலிட்டுக்கு பதிலாய் புலி கொடியை முறுக்கி கட்டியுள்ளது. இதுக்கு பல்லி எப்படி விளக்கம் கொடுப்பது. ஆக தற்போது மலிவு விலையில் கிடைப்பது புலி கொடியே. கால போக்கில் இதுதான் (வேண்டாமே தேசம் தணிக்கை செய்து விடும்)….
palli
விதுசா தலவர் எதை சொன்னாலும் வருடத்துக்கு ஒரு முறைதானே சொலவார். அதுவரை நாம் பேசிக்கலாமே. அதை விட தேசத்தில் வரும்
கட்டுரைக்கோ அல்லது பின்னோட்டத்துக்கோ உங்க தலைவர் பதில் சொல்லும் அறிவு படைத்த மிருகமல்ல.
vithusha
எந்த இயக்கம் தவறு செய்யவில்லை நீங்கள் பலிகளை குற்றம் சொல்வதற்கு. புலிகள் மட்டுமே நேர்மை தவறாது போராட்டத்தை விற்காது இன்றுவரை உறுதியுடன் போராடுகிறார்கள். தலைவர் இதைவிட மோசமான தோல்விகளை எல்லம் சந்தித்திருக்கிறர்ர். ஆனால் இந்தியன் ஆமிக்கு என்ன நடந்தது என்பதை மறந்து விட வேண்டாம். அதே போல் பொறுத்திருங்கள்…….. எல்லோருக்கும் தக்க பதில் தலைவர் விரைவில் கொடுப்பார்.
Gajan
அதால இலங்கை அரசாங்கத்தின்ர ஜில்மால் கோல்மால் தெரியேல்லை என்று நினைக்க வேண்டாம். அதுவும் தெரியும். தம்பி எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறதும் தெரியும். அவைக்கு தனிவிருந்து இருக்கு. அது கிடக்கட்டு இப்ப.//
Eelamaran, when you going to do this. I’m starving.
murugan
விதுசா தலைவர் எம்ஜிஆரிடம் போராட்டத்தை விற்கவில்லையா? பிரேமதாசவுடன் கூட்டு சேர்ந்து போராட்டத்தை விற்கவில்லையா? சந்திரிகாவுடன் சேர்ந்து கருணாவோடு இருந்த போராளிகளை என்ன செய்தார். பெண்புலிப் போராளிகளை கற்பழிக்கவில்லையா? கப்பம் வரி பிள்ளை பிடிப்பு மிரட்டல் கொலை என்று தமிழ் சமூகத்தை உண்டு இல்லை என ஆக்கியது வேற்றுக்கிரகத்து ஆட்களா? இனி போராட்டத்தில் விற்கிறதுக்கென்று என்னதான் இருக்கு?
இலங்கை ஆமியையே சமாளிக்க முடியவில்லை. இந்தியன் ஆமியோடு போட்ட சண்டையை எத்தனை காலம் தான் சொல்லுவீர்கள்.
இனியும் தலைவர் ஏதாவது சாதிப்பார் என்றால் மறுபடியும் யாரிடமாவது வழமைபோல் சதிக் கூட்டு சேர்ந்தால்தால் உண்டு.
அந்த நம்பிக்கையில் தான் நீங்களும் இன்னும் உசாராக கதைக்கறீர்கள். எதிரிகளோடு கூடிக்குலவி நடத்துவதற்கு பெயர் போராட்டம் அல்ல.
Suresh M.M.A
//புலிகள் மட்டுமே நேர்மை தவறாது போராட்டத்தை விற்காது இன்றுவரை உறுதியுடன் போராடுகிறார்கள்./ விதுசா
முதன்முதலில் கூறுபோட்டு விற்றதே புலிகள்தான் தெரியுமோ? பிரேமதாசாவோடு கொஞ்சிக்குலவி பிரேமதாசா அரசாங்கத்தில் பணமும் இந்தியராணுவத்தோடு போராட ஆயுதமும் வாங்கி விட்டு முல்லைத்தீவு நாயாறு புதுக்குடியிருப்பு என்று சிங்களக் கடியேற்றங்களைப் புலிகள் செய்த வரலாறு ஏதாவது தெரியுமோ? கிட்டுவின் கலியாணம் பிரேமதாசா தலைமையில் கொழும்பில் 5நட்சத்திர விடுதியில் நடந்தது தெரியுமோ? ரணிலோடு கூட்டு வைத்து வாங்கித் திண்டதுதான் தெரியுமோ? ராஜபக்க்ஷயோட உலங்கு வானூர்தியில ஊர்வலம் வந்தீங்களே… சரி அதுதான் ஒண்டும் வேணாம்: இப்பகூட எதிரிதானே புலிகளுக்கு சாப்பாடு போடுகிறான். அதுகும் காணாது காணாது எண்டு கேட்டு வாங்கித் தின்னுறியள். சும்மா விசரக் கிளப்பாதேங்கோ விதுசா.
சுரேஸ் டபுள் எம்.ஏ
palli
விதுசா எனக்கு ஒரு சந்தேகம்.
நேர்மை என்றால் என்ன.?
அதுக்குரிய தகமைகள் என்ன?
அது யாரிடம் இருந்து யாருக்கு தர பட வேண்டும்?
இதனைக்கும் தாங்கள் பதில் சொல்லுங்கள். உங்கள் பதிலில் புலிநேர்மையானதா அயோக்கியமானதா என்பதுக்குரிய விடை கிடைக்கலாம். மாற்று இயக்கம் விடாததவறா? என்பது உங்கள் ஆதங்கம். ஆமா என்பது பல்லியின் ஆணிதரமான பதில்? மேல் கொண்டும் வாதம் தேவையாயின் பல்லி தொடரும்.
palli
புலி எப்போது பலமாக இருந்தது என்பதை விதுசா சொல்ல வேண்டும்?அரசு அக்கறையில்லாமல்((புலியை அடக்குவதில் இருந்தது உன்மைதான்) தலைவரும் பதில் சொல்லும். அப்படியா? இப்படி சொல்லி பாருங்கோ. தலை வரலாம் எதாவது யாரையாவது கேட்டோ அல்லது எழுதியோ தரசொல்லி அதை மறு ஒலிபரப்பு செய்யலாம்.அதை விடுத்து தலை வரும் தலைவலியும் கூடவே வரும் என்பது அரசை அஸ்ரப் தாங்குவது மாதிரி உள்ளது.
மக்கள் இயக்கம் என்பதுக்கு ஒரு சின்ன உதாரனம்.1984;1985ல் புளொட் அமைப்பினர் கோட்டைக்கு அருகாமையில் கோட்டை ராணுவத்தின் தாக்குதல் தடுப்பதுக்காக பல போராளிகள் மண்மூடை சுமந்து அரங்குகள் அமைத்தனர். இது விடயமல்ல. அந்த காலத்தில் யாழ் வையித்திய சாலைக்கு உறவினரை வருத்தம் பார்க்க வரும் பல அந்த போராளிகளுக்கு உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டு போவார்கள். இதுதான் ஒரு அமைப்புக்கும் மக்களுக்கும் உள்ள உறவாக இருக்க வேண்டும்.(அந்த அமைப்பு காணாமல் போனது ஏனோதெரியவில்லை) இதனால் அவர்களை சோத்து பாசல் என கேலி செய்தவர்களும் உண்டு. அன்று மக்களுக்கான போராட்டத்துக்கான உதாரனம் அது. இன்று இயக்கத்துக்கான (புலி) போராட்டம்தான் மக்களுக்காக அல்ல என்பது வன்னியில் அடைத்து வைத்திருக்கும் மக்கள்நிலை சொல்கிறது.
vithusha
தேவை கருதி கூட்டுச் சேருவது போராட்டத்தை காட்டிக் கொடுக்க அல்ல. மற்ற இயக்கங்கள் செய்ததெல்லாம் பாட்டிக் கொடுத்ததே. யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் விடுதலைப் போராட்டத்தை அவர்கள் விற்கவில்லை. நேர்மை என்பது கொண்ட இலட்சியம் தவறாது போராடுவது. அதனைப் புலிகள் இந்த நிமிசம் வரைக்கும் சரியாகவே செய்திருக்கிறார்கள்.
Tamil
சுருக்கமாக…
புலிகள் அடிப்படையில் பிற்போக்கானவார்கள் அவர்கள் நேர்மையாக இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன!!!
santhanam
விதூசா தலைவர் பிறேமதாசா தொடக்கம் ராஐபக்சேவரை விலை போனவர் மக்களைபற்றி சிந்தியாத தன்நலம் சாரந்து சிந்திப்புவர் அவர் எப்போதும் சர்வதேசத்தின் மீதும் பேரினவாதிகள் மீதும் பழியைபோட்டு காலத்தை ஒட்டியவர்.மாத்தையாவை அதிகாரவெறியில் கொளைசெய்துவிட்டு இந்தியாமீது பழிபோட்ட தலைவன்தான்.சுழ்ச்சிநிறைந்த மாபெரும் இயக்கம்.
murugan
தேவை கருதி கூட்டுச் சேர்வது என்பது யாருடைய தேவை கருதி? இது வரைகாலமும் தமிழ் மக்களின் எந்தத் தேவையை புலிகள் நிறைவேற்றினார்கள்? என்றைக்கு எம்ஜிஆரின் பணம் கிடைத்தவுடன் ரெலோவைக் கொளுத்தினீர்களோ அன்றே போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஒஸ்லோ வரை போராட்டத்தை விற்றதல்லாமல் தமிழ் மக்களுக்காக புலிகள் என்ன செய்தார்கள்?
கையாலாகாத் தனத்தின் உச்சமாக சாப்பாடு கொண்டு போன கப்பலுக்கும் சொறிகிறீர்கள். மக்கள் சாப்பிடக் கூட விடமாட்டோம் என தடுக்கும் உங்கள் போராட்டம் தான் என்ன? இலட்சியம் தான் என்ன?
Suresh M.M.A
என்ர ஐயோ… விதுசா என்ன விட்டிடுங்கோ. கொல்லாதேங்கோ. உங்க தலைவர் கொல்வதே போதும்டா சாமீ!
சுரேஸ் டபுள் எம்.ஏ
palli
கொலை செயவதெல்லாம் போராட்டமாகாது விதுசா. அந்த வகையில் இதுவரை புலிகள் கொலை செய்கின்றனர் என்பதை விதுசா சொல்ல கேக்கிற போது காதில் குண்டு பாயுது.
ramanathan
ஈழமாறன்
காத்திரமான ஒரு கட்டுரையை எழுதியமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்தும் மேலும் ஆரோக்கியமான கட்டுரைகளை எழுதுங்கள்
murugan
யுத்த சூழ்நிலைகளை மனதில் கொண்டும் சில விடயங்களை நாம் பேச வேண்டும். இன்று கொத்து கொத்தாக மக்கள் மடிகிறார்கள். ஆயிரக்கணக்கில் காயமடைந்து கப்பல்களில் போகிறார்கள். அரசைப் பார்த்து கத்தும் நாம் இதை புலிகள் நினைத்தால் நிரந்தர அரசியல் தீர்வுக்கு உடன்படுவதன் மூலம் நிறுத்தமுடியும் என ஏன் யோசிக்கிறோமில்லை. அல்லது புலிகள் தமது அடாவடிகளை கைவிட்டு மாற்றுக் கருத்தாளர்களுடன் இணைந்து அரசை வெல்ல முடியாதா? அரசாங்கமா எம்மிடம் பவுண் கொடு வரி கொடு கப்பம் கொடு என தொல்லைப்படுத்தியது. எங்கள் சம்மதமின்றி எங்கள் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போய் பயிற்சி கொடுத்து சாகவிட்டது? போராட என போன பெண்பிள்ளைகளை கற்பழித்து கொலை செய்தது? ஒரு தொழில்துறையை உருப்பட விட்டதா புலி? படிக்க விட்டதா? அரசு செய்த கொடுமைகளை விட புலிகள் நடத்திக் காட்டிய கொடூரங்களே அதிகம். இவற்றில் இருந்து மீளாமல் மேற் கொண்டு போராட முடியுமா? எங்களுடைய உடனடி எதிரி புலியா அரசா?
இன்னும் நீங்கள் யாராவது சொல்லக் கூடும் அரசு தீர்வை வைத்தால் புலி ஏன் இருக்கப் போகுது என. தொடர்ந்து வந்த அரசுகள் சரியில்லை னெ;பதனால் தான் அரசுகளுக்கெதிராக போராட்டம் தொடங்கியது. அதில் வெற்றியடையாமல் போனது புலிகளாலன்றி வேறெவராலுமல்ல. அரசு ஜனநாயகம் காக்க வேணும் தமிழர்களை சொந்தப் பிரஜைகளாக நடத்தவேணும் என்றெல்லாம் கோழைத்தனமா கோரிக்கை வைக்காதீர்கள். அப்படி நினைத்தால் அரசியல் உங்களுக்கு புரியவில்லை என்றே அர்த்தப்படும். ……………….
Kullan
பல்லி பகிடி பகிடியாகச் சொன்னாலும் சரியாகத்தான் சொல்லும் என்பதை அனைவரும் புரியவும். பல்லி சொன்னதுபோல் வருடத்துக்கு ஒரு முறைதான் தலைவர் வருவார். சரி புதிதாக எதையாவது சொல்வார் என்று வருடம் வருடமாகக் காத்திருந்தாலும் சொன்னதையே திருப்பித்திருப்பிச் சொல்லுவார். தயவு செய்து இவரது ஆண்டுரைகளை எடுத்து நோக்கவும். இப்படி இருக்கலாம் இவர் 100 தடவை சொன்னால் ஒருதடவை சொன்ன மாதிரி. எழுதிக்கொடுப்பவரை மாத்தினாலாவது ஏதாவது புதிதாக வரும் என்று எதிர்பார்க்கலாம். அவர்கள் கோசம் போல்தான் இவரின் பேச்சும். சொல்வதற்கு ஏதாவது இருந்தால்தானே. புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம். என்ன தமிழீழம் குடிக்கிற சாமானா? முடிந்தால் யாராவது எங்காவது கிள்ளிக்கொடுங்கோ குடிச்சுவிட்டுச்சாகட்டும். பொதுமக்களாவது சாகாமல் இருப்பார்கள். ……………………. விதுசாவுக்கே விளங்கேல்லை தலைபோன தலைவருக்கு எப்படி? அறிவைப்பற்றிக் கதைக்கிறீர்களே மக்கள் பற்றிய அறிவு தம்பிக்கு எப்ப இருந்தது? அறிவிலும் தம்பிதான்.
ஒன்றை தேசம்வாசகர்களுக்கு கூற விரும்புகிறேன். வெற்றியடைந்த எந்தப்புரட்சியும்: அது ஆயுதப்புரட்சியானாலும் சரி: இடதுசாரிப்புரட்சியானாலும் சரி
padamman
தமிழ்ஈழ நிதிஅமைச்சர் இன்று பிரபாகரனின் பிடியில் இருந்து பிரிந்து விட்டதாக செய்தி இப்படி பல அமைச்சர்கள் விரைவில் பிரிந்து போவதர்க்கு தயார் நிலையி உள்ளதக அறியமுடிகின்றது.
santhanam
LTTE Finance Div. Head killed
LTTE’s Financial Division head Ranjith Appa alias Tamilendi was reportedly killed in the latest fighting in Puthukuduirrippu east area, the military said.
ramesh
அற்புதம் அற்புதம்!!! உங்கள் கட்டுரை அற்புதம். விவரிக்க வார்த்தைகள் இல்லை!! அதைவிட வாசகர்களின் பின்னூட்டம்!! அருமை!! உள்ளங்கை நெல்லிக்கனி!!! அருமையான தூர நோக்கு கொள்கையுடைய அறிவுஜீவிகளின் கருத்துகள். அத்தனையும் முத்துக்கள். வாழ்க ஜனநாயகம். வழர்க மாற்றுகருத்துகள்!!!
BC
என்ன ramesh இது வரை தலைவரின் புகழ்பாடுதல்களை மட்டும் தான் படித்து வந்தீர்களோ! தேசத்தை படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறதாக்கும். நேற்று ஒரு புலி ஆதரவாளரின் பதிவு படித்தேன். ஒபாமாவுக்கு நம்ம தலைவர் பிரபாகரனின் அறிவுரை தேவை. நம்ம தலைவர் பிரபாகரனின் சொல் கேட்டு ஒபாமா நடப்பாரானால் அது தான் உலக விடிவு. இது எப்படி?
palli
ஆரோ ஒரு அரசியல்வாதி அன்று சொன்னார்.
மாடு செத்தா இறைச்சி.
மனிதன் செத்தா புரட்ச்சி.
இப்படி சொன்னதாலோ என்னவோ.
இன்று .
ஈழ தமிழர் புரட்ச்சியை அனுபவிக்கிறார்கள்.
புலம் பெயர் தமிழர் இறைச்சியை அனுபவிக்கிறார்கள்.
ஆனாலும்.
அவர்களுக்கு புரட்ச்சியால் அழிவு.(குண்டால்)
இவர்களுக்கு இறைச்சியால் அழிவு (கொழுப்பால்)
ஆகவே
அன்று புண்ணாக்குதனமான பேச்சால் .
இன்று மொத்தமாய் தமிழர் அழிகின்றனர்.
இதை ஏன் பல்லி இப்போது சொல்லுகிறதெனில். விதுசா போன்றோரின் நாக்கு முக்கா நாக்கு முக்கா பேச்சால் வருங்கால சந்ததியும் முகவரி தேடி அலைய போகிறார்கள்.
murugan
ஏதோ “வணங்கா மண் “என்று வன்னிக்கு அனுப்பப் போகிறார்களாம். புது யுத்தியில் புலன் பெயர்ந்தவர்களிடம் பணம் பொருள் கறக்க ஜிரிவி யில் திட்டம் போடுகிறார்கள். புலன் பெயர்ந்தவர்கள் மிக உணர்ச்சிவசப்பட’டு ரெலிபோனில் நீட்டி முழக்க தினேஸ் அவர்களின் முட்டாள் தனத்தை கொடுப்புக்குள் சிரிப்போடு ஏற்றி இறக்க வன்னி மக்களுக்கு வாய்க்கரிசிதான். இவை கப்பல் அனுப்புவினமாம். அதை இலங்கை அரசு ஒரு தடையுமில்லாமல் விட்டு விடுமா என்று யோசிக்க புலன் பெயர்ந்தோரால் முடியவில்லை. பிரிட்டிஸ் தமிழ் போறம் புலியின் அமைப்பு. புலியை பயங்கரவாதமென தடைசெய்து விட்டு அதன் பினாமிகளுக்கு ஊடாக வன்னிக்கு கப்பல் அனுப்புவதை பிரித்தானியா கண் மூடி பார்த்திருக்குமா? இலங்கை தான் சும்மா இருக்குமா?
வந்த வள்ளங்கள் கெலிகளை துரத்திவிட்டு புலன்பெயர்ந்தவர்கள் இப்ப கப்பல் அனுப்பப் போகிறார்களாம். நல்ல வேடிக்கைதான்.
vithusha
………………………….. புலியின் வீரத்தைப் பொறுக்க முடியாத சில முன்னாள் அராஜக வாதிகள் கொக்ரிக்கிறர்கள். தலைவரின் பதிலடி உங்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும். ஆட்லறித் தளத்திற்கு கொடுத்த அடியில் ஆடிப்போயிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
murugan
பதிலடி கொடுக்க வேண்டிய தலைவர் ஏன் பதுங்கி இருக்கிறார்? வணங்கா மண் ஆயுதங்கள் கொண்டு வரட்டும் என வெயிட் பண்ணுகிறாரோ?
உலகம் முழுதும் கெஞ்சீ கூத்தாடி விழுந்து புரண்டு தான் பதிலடி கொடுக்கிறாரே. இதற்கு மேல் என்ன இருக்கு? முப்பது வருடம் வராத பதிலடி இனித்தான் தரப்போறாராக்கும்.
padamman
விதூசா தலைவர் இன்னும் நல்லா உள்ளுக்கு ஆமி வரவிட்டு அதுக்கு பிறகு தான் அடிப்பார் மாவிலாரில் விடதொடங்கி விடுகின்றர். …திருப்பி அடிக்கதொடங்குவர். அப்பதெரியும் தலையென்றல் தலைதான் …தலைதான்.
Suresh M.M.A
//ஆட்லறித் தளத்திற்கு கொடுத்த அடியில் ஆடிப்போயிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்// விதுசா.
ஆமாம் விதுசா. அந்த மூணு ஆட்லறிக்குள்ளதான் தமிழீழத்தை மூணு துண்டாப் பிச்சு ஒழிச்சு வச்சிருந்ததாம் ராணுவம். தலைவற்றை கெட்டித்தனத்தால கண்டுபிடிச்சு அவற்றை வழிநடத்தலாலை வெண்டுபோட்டினமெல்லே… தலைவரா கொக்கா பின்ன?! ஒருத்தராலும் தலைவரை ஆட்டவும் ஏலாது அசைக்கவும் ஏலாது.
சுரேஸ் டபுள் எம்.ஏ
Suresh M.M.A
“விளங்கா மண்” எண்டு நாங்களும் கொஞ்சப்பேர் கப்பலோட்டப் போறமாக்கும். சுணங்காமல் தாறதைத் தந்து அனுப்புங்கோ. தலைவரைச் சுத்தி அரணா இருந்து காப்பாத்திற மக்களட்டை அப்படியே பொத்தினாப்போல கொண்டுபோய்ச் சேர்ப்பம். கப்பல் மதுரைக் கடற்கரையில கட்டிக்கிடக்குது. சந்தேகமெண்டால் வந்து விசாரியுங்கோ.
சுரேஸ் டபுள் எம்.ஏ
murugan
விதுசா கேட்க மறந்து போனேன். ஆனானப்பட்ட ஆனையிறவு முகாமை அடித்து நொருக்கி அடைந்த வெற்றியை விடவா ஆட்டிலறி அடி பெரிசாப் போச்சு. ஆனையிறவை வைத்தே தலைவரால் ஒன்றும் பிடுங்க முடியவில்லை. இனித்தானா உங்களுக்கெல்லாம் விளையாட்டு காட்டப் போறார்? (எல்லாளனை காட்டியதையும் நினைத்து பாருங்கோ)
ajini
ஏன் கெட்ட நிகழ்வுகளையே எழுதுகிறீர்கள் புலிகள் செய்த நல்ல விடயங்கள் எழுத கசக்கிறதா? களைகளை புடுங்கும்போது சில பயிர்களும் அழியும் இதை தவிர்க்க முடியாது. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு விடுதலை போராட்டம் பல எதிர்ப்புக்களை எதிர்நோக்க வேண்டும் அதிலும் கூட இருக்கும் துரோகிகளை சமாளிப்பது கடினம் அதை விடுதலை புலிகள் எதிர் நோக்கும் போது ஏற்பட்ட விளைவுகளை தவிர்க்க முடியாது. சாவு எப்போதும் வரும். 30 வருட காலமாக ஒரு விடுதலை போராட்டத்துக்கு தலைமை தாங்குவதே போதுமே. மற்ற இயக்கங்கள் மாதிரி எதிரிக்கு துணை போயிருக்கலாம் என்று சொல்கிறீர்களா? விடுதலை புலிகள் இருப்பதால் தான் தமிழுக்கும் தமிழனுக்கும் இத்தனை மதிப்பு அதை ஒருதரும் மறந்து விட கூடாது. இன்று மட்டும் நின்மதி இருந்தால் உமக்கு போதும். என்றும் நின்மதி வேண்டும் அதுவே எல்லோருக்கும் வேண்டும். “ஹெலி வந்தது உமக்காக” “போராடுவது தமிழருக்காக” வைக்கோலில் படுத்திருந்த நாயின் கதை தெரிந்திருக்கும் அப்படி இருக்கு உம் அறிக்கை.
vithusha
கஜனி சரியாகச் கொன்னீர்கள். தமிழர்களின் மானம் இருக்கின்றதென்றால் அது தலைவரால் என்பது தெரியாது புலம்பும் இவர்களை என்ன சொல்வது.
murugan
மற்றவர்களை துரோகிகள் என சொல்ல புலிகளுக்கு எந்த மக்கள் அனுமதி தந்தார்கள். புலிகள் துவக்கு முனையிலேயே ஏகப்பிரதி நிதியானார்கள். மக்களுடைய பரி பூரண ஆதரவு இருந்திருந்தால் வன்னி இப்படி அவலப்படுமா? மக்களிடம் மிரடடிப் பறித்ததல்லாமல் அவர்களுக்கென்று ஒரு குண்டூசியாவது கொடுத்ததென சரித்திரம் உண்டா?
முதலில் மற்றைய அமைப்புக்களை துரோகிகள் என்றார்கள். பிறகு முஸ்லிம்களை துரோகிகள் என்றார்கள். அதன் பின்னால் சிங்கள மக்களை துரோகிகள் என்றார்கள் . இந்தியாவை துரோகி என்றார்கள். இப்ப உலகத்தையே துரோகம் செய்வதாக கூப்பாடு போடுகிறார்கள். இவ்வளவு துரோகிகளையும் சம்பாதிதத இந்த இனம் வாழத் தகுதியானதுதானா?
/மற்ற இயக்கங்கள் மாதிரி எதிரிக்கு துணை போயிருக்கலாம் என்று சொல்கிறீர்களா? விடுதலை புலிகள் இருப்பதால் தான் தமிழுக்கும் தமிழனுக்கும் இத்தனை மதிப்பு அதை ஒருதரும் மறந்து விட கூடாது”/
அப்ப என்னத்திற்கு ஐநாவே வா ,இந்தியாவே வா, அமெரிக்காவே காப்பாற்று, ஐரோப்பாவே வந்து காப்பாற்று என ஓலமிடுகிறீர்கள். போராட்டம் என தொடங்கி விட்டு இப்படி கத்திக் குளறுவதுதானா தமிழனுக்கு மதிப்பும் மரியாதையும்?
/“ஹெலி வந்தது உமக்காக” “போராடுவது தமிழருக்காக” /இல்லையென்றால் என்னத்திற்கு அதில் ஏறி படம்காட்டினீர்கள். எங்களுக்கு உதெல்லாம் தெரியும் என சொல்லி கலைத்திருக்க வேண்டியதுதானே? தந்திரேபாய அடிப்படையில் பாவித்துக் கொண்டோம் என ஒரு பதில் வைத்திருப்பீர்கள். இப்ப என்னாயிற்று உந்த தந்திரோபாயங்கள் எல்லாம்?
/“சாவு எப்போதும் வரும்.”/
தமிழ் மக்களின் சாவு உமக்கு சர்வ சாதாரணமாக தெரிகிறதா?
BC
//Ajin-விடுதலை புலிகள் இருப்பதால் தான் தமிழுக்கும் தமிழனுக்கும் இத்தனை மதிப்பு அதை ஒருதரும் மறந்து விட கூடாது. //
தாங்க முடியவில்லையே.புலிகளை எதிர்தால் களை.புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்தால் பயிர்.தமிழ் ரத்தம் உடலில் ஓடுகிறது.
chandran.raja
அஜினி
கெட்டநினைவுகளை திரும்பதிரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மட்டுமே நல்தொரு எதிர்காலத்தை நினைவில் வைத்து செயல் படுத்தமுடியும். அது போக புலிகள் செய்த நல்ல காரியம் என்று சொல்லுகிறீகளே! அது என்ன? அதை ஒருமுறை நினைவுபடுத்த முடியுமா? இறுதியாக….. மன்னார் மல்லாவி தண்ணிமுறிப்பு நாச்சிக்குடா பூநகரி அப்பாவி மக்களை கூட்டியள்ளி குறிகிய இடத்தில் துப்பாக்கி முனையில் வைத்து தமக்கு பாதுகாப்பு தேடுகிறார்களே! அதை சொல்லுகிறீர்களா?
இப்படியான செயல்பாடுகள் மக்களில் பற்றில்லாமையாலும் எதேசயதிகாரப்போக்காலும் அரசியல் வறுமையாலும் ஏற்பட்டது என புரிந்து கொள்ள இனியும் கஷ்ரமாக இருக்கிறதா உங்களுக்கு ?
padamman
“தமிழர்களின் மானம் இருக்கின்றதென்றால் அது தலைவரால்” மானம் இல்லை ….. தலைவரல் இப்போது மிச்சியிருக்கின்றது.
murugan
விதுசா மானம் என்றால் என்ன? அடுத்த வேளை சோற்றுக்கு என்ஜிஒ வை கையேந்தி நிற்பதா? ஐநா வராதோ அமெரிக்கா வராதோ என ஏங்கிக் கிடப்பதா தமிழனின் மானம்? எங்கள் பெண்களை கற்பழிக்கப்படுவதை தடுக்கமுடியாமல் அரற்றிப் புலமபுவதும் கொல்லுறாங்கள் கொல்லுறாங்கள் என ஓலமிட்டு அதில் நாலு காசு உழைக்க பார்ப்பதா தமிழனின் மானம்?
BC
ஒபாமாவாலேயே எம்மை காப்பாற்ற முடியும், தமிழ்நாடே எம்மை காப்பாற்று, ஐரோப்பாவே காப்பாற்று, ஐநாவே காப்பாற்று என்று கெஞ்சுவதில் இருந்தே தெளிவாக தெரிகிறதே தமிழுக்கும் தமிழனுக்கும் தலைவரால் இத்தனை மதிப்பு ஏற்பட்டது என்று.
Tamil
//விடுதலை புலிகள் இருப்பதால் தான் தமிழுக்கும் தமிழனுக்கும் இத்தனை மதிப்பு அதை ஒருதரும் மறந்து விட கூடாது – அஜினி//
வெளி நாட்டில் வாழ்ந்துகொண்டு நீங்களேன் கூறமாட்டீர்கள் அப்படி! நிச்சயமாக நீங்கள் வெளிநாட்டில்தான் இருக்கவேண்டும் ஏனெனில் புலம்பெயர் தமிழனால்தான் இப்படியான முட்டாள்தனமான பொறுப்பற்ற கருத்தை! வைக்கமுடியும்.
இன்று வடக்கு/கிழக்கு வாழ் தமிழ் மக்களைக் கேளுங்கள் உங்களுக்கு வேண்டியது மானமா அல்லது உயிரா என்று…
இது ஒன்றும் இதிகாச கதையல்ல ……உயிரை இழப்பதற்கு, நிஜ மக்களின் நிஜமான வாழ்விற்கும் சாவிற்கும் இடையேயான போராட்டம்
Nagulan
தலைவர் மீண்டும் வருவதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியிருக்கிறதே. ஈழமாறன் போன்றவர்களுக்கு கிலி பிடிக்குமே
BC
அவருடன் மைக்கல் யக்சனும் வருவாராம்.
மாயா
// தலைவர் மீண்டும் வருவதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியிருக்கிறதே. ஈழமாறன் போன்றவர்களுக்கு கிலி பிடிக்குமே//
பேய்கள் வருவதாக சொன்னால் , யாருக்குத்தான் கிலி பிடிக்காது. உயிரோடு இருக்கும் போது கொலைகாரன். இறந்த பின் டிரெகியுலாவாக வர தயாராவதாக கதை. உலக நாட்டில் கொள்ளையடித்த எலிகள் கவனம்.
tharmu
ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரைக்கும் காத்ததுபோல் வள்ளத்தையும் கெலியையும் விட்டுட்டு ஒபாமாவின் கப்பலையல்லோ தலைவர் பார்த்துக் கொண்டிருந்தவர்.
பார்த்திபன்
//கஜனி சரியாகச் கொன்னீர்கள். தமிழர்களின் மானம் இருக்கின்றதென்றால் அது தலைவரால் என்பது தெரியாது புலம்பும் இவர்களை என்ன சொல்வது. – விதூசா //
பின்ன சும்மாவா?? சோ சொன்னது போல சாதாரண புலிகளுக்குச் சயனைட்டும், விசேட புலிகளுக்கு சரணுமென்ற ஒப்பற்ற கொள்ளைப்பற்றுக் கொண்ட தன்மானப் புளி(லி)யல்லவா உங்கள் தலைவர்??
vithusha
தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று உத்தியோக பூர்வ புலிகளின் தளம் அறிக்கை விட்டிருப்பதi வாசிக்கவில்லைப் போலும். உங்களுடைய நப்பாசை நிறைவேறாது என்பதை தலைவர் வெளியே வரும்போது அறிந்து கொள்வீர்கள்
palli
தலைவர் இருந்தால் என்ன இருக்காவிட்டால் என்ன அவரை பொறுத்த மட்டில் குடும்பத்தில் கூட சத்தம்போட்டு பேசமுடியாது; அமைதியாய் வாழ்ந்து (இருந்தால்) அடங்க வேண்டியதுதான், இல்லாவிட்டால் காணவில்லை இருந்தாலும் வருவார் என்பதுபோல் பல விதுசாக்கள் கதைக்ககூடும்; எது எப்படியோ ஈழதமிழர் வாழ்வில் தலைவரும் புலிகளும் தள்ளி வைக்கபட்டு விட்டனர் என்பது போல்தான் நடப்பவை நடக்கிறது, புலம் பெயர் தேசத்தில் இன்னும் சிலகாலம் ஏமாறலாம் என்பதால் தேர்தல் தேர்வு என ஒரு கூட்டம் அலைகிறது. யார் ஆட்ச்சிக்கு வந்தாலும் புலிக்கு இலங்கயில் சிறைதான் என்பது உறுதியாகி விட்டது;
chandran.raja
வந்து விட்டார். என்று தான் தமிழ்செல்வனும் சொன்னார். அங்கு தமிழீழம் எடுப்பது சுலபமானதாம். ஏனெனில் மகிந்தாராஜ பக்சா அங்கில்லையாம் விதுஷா!.
santhanam
காந்தி உயிர்வாழ்கிறார்
கோட்சே உயிர்வாழ்கிறார்
பாரதி வாழ்கிறார்
நேரு வாழ்கிறார்
யே ஆர் வாழ்கிறார்
பிராபாவும் வாழ்கிறார்–
palli
சந்தானம் தலக்கு பிடிக்காத எண் ஆறு; அதனால் தான் ஆறு இயக்கத்தை இரண்டாய் கூட்டணி அமைத்தார்; (டெலொ; ஈபிஆர்எல்எவ்; ஈரோஸ், எல்ரிரிஈ; ஒரு முகமாகவும் மறு முகமாக புளொட்; ரெலா என)ஆனால் நீங்கள் இங்கு தலைக்கு உயிர்வாழ்வதாய் கொடுத்திருக்கும் இலக்கமும் ஆறுதான்; தலையால் இன்னும் சிலர் வாழ்கிறார்கள் என இதை மாற்றலாமோ என பல்லி நினைக்கிறேன்;
palli
இப்போதெல்லாம் சினிமாவில் பளயபட பெயரைதான் விரும்புகிறார்கள்; அதுபோல் நம்ம தேசத்திலும் அன்றய கட்டுரைகளை புதிப்பித்து அதுக்கு பின்னோட்டம் அதுகூட நல்லாய்தான் இருந்தது;
santhanam
பல்லி என்னும் மிஞ்சினால் ஆறுமாதம் இவர்கள் இதை சொல்லி உயிர்வாழ்வார்கள் போய்வந்த நண்பர்களுடன் கதைத்தேன் மக்கள் புலியை காறிதுப்புவதாக பாப்பா கட்டுநாயக்காவிலும் இளம் பருதி யாழிலும் ஆமிக்கு கிளியறஞ் செய்கிறார்களாம் ஆனால் பெரும் சோகமான நிலைதான் வன்னிமக்களின்.