தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை கழைந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனை சார்ந்தவர்கள் தமது ஆயுதங்களை தற்போதைக்கு கழைய மாட்டார்கள் என தெரிய வருகின்றது.
“தங்களைச் சார்ந்த சுமார் 3000 பேர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் ,அவர்கள் உறுப்பினர்களாக அங்கத்துவம் பெறும் வரை ஆயுதங்களை வைத்திருப்போம்” என்றும் அவர்களைச் சார்ந்த பேச்சாளரான தட்சணாமூர்த்தி கமலநாதன் தெரிவிக்கின்றார்.
“அச்சுறுத்தல்கள் இருக்கும் போது ஆயுதங்களை கையளிக்க முடியாதுள்ளது.கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் செயல்படும் சில குழுக்களினால் இன்னும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.இதன் காரணமாகவே தற்போதைக்கு ஆயுதங்களை கழையக் கூடிய சூழ்நிலை இல்லை “என்றும் அவர் குறிப்பிட்டார்.
Kusumpan
பாத்தியளோ நான் அப்பவே சொன்னான். கருணாவையும் பிள்ளையானையும் அரசாங்கமே போடும் என்று. அதுக்கான வழிகள் தானே இப்ப நடக்குது. புலியளுக்கும் அரசுக்கும் ஒரு எழுதப்படாத உடன்படிக்கை உண்டு. வடக்கை மாதக்கணக்கிலை பிடிக்க விருமாமல் அரசு நிற்பது புரியவில்லையா? அரசைப் பதவியில் அமர்த்தியது புலிகள் இல்லை என்று கொல்லப்போறியளோ? ஆயுதங்கைகளை வாங்கிப்போட்டு அரசு புலிகளைக் கொண்டு பிள்ளையானையும் கரணாவையும் பொட்டுத்தள்ளுவார்கள் இருந்து பாருங்கள்
palli
அப்புறம் அதை வச்சு என்ன பண்ண போறியள்.
santhanam
ராஐபக்ச அன்கோவை இவர்தான் பாதுகாப்பார் ஏன் என்றால் இவரின் பிளவுக்கு பிறகு கொழும்பில் என்ன செய்யமுடிந்தது. நிலாம் .நியுட்டன்??
palli
அப்ப அடுத ஜனாதிபதி ஒரு தமிழன் என சொல்லுங்கோ.
thanam
உண்மையில் தம்பி சிவனேசதுரையின் இந்த முயற்சி பாரட்டுக்குரியது இவரை போன்று என்னுடன் கூட்டணியில் உள்ள தம்பி சித்தாத்தனிடமும் கேட்டுள்ளேன் எமக்கும் இந்த ஆயுதங்கள் வேண்டாம் என்று அப்படியே தம்பி சித்தரும் எற்றூக்கொண்டுவிட்டார் பெரிய சந்தோசம் எனக்கு புலியில் அந்த தம்பி ஆயுததை குடுக்கும் போது நாம் ஏன் குடுக்ககுடாது அதே தம்பி கருணாவும் குடுத்தார் என்றால் நல்லம் தானே எல்லாம் நடக்கும் என்றார் ஆனந்தசங்கரி ஜயா. நன்றி ஜயா உங்கள் முயற்சி வெற்றி அடையும். நன்றி ஜயா