நாம் யூதர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளாது யூதர்களை எமக்கு உதாரணமாக எடுத்துக் கொள்வதால் மிகபெரும் வரலாற்றுத் தவறைப் புரிகின்றோம். வரலாறு பற்றிய பிரச்சனைகளுக்கு சில கருத்துக்கள் கூறவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக யூதர்களை உதாரணம் காட்டுவதையும், ஆரிய திராவிட மோதல்கள் பற்றிய கருத்துக்கள் பல வரலாற்றுத் தவறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றுது. இவற்றை வரலாறு பற்றி தவறான புரிதலை போக்க வேண்டியதும் அவசியமான தேவையாக இருக்கின்றது. இறுதிக் கட்டம் என்று புலம்பெயர் புலிகளால் பிரச்சாரம் செய்யப்படுகின்ற வேளையில் ஆரிய திராவிட முரண்பாடு என்பது 3500 வருட வரலாறு கொண்டதாக பிரச்சாரப்படுத்தப் படுகின்றது. இதுபற்றி புரிதல் சமூகத்தில் இல்லை. இவ்வாறான வேளையில் வரலாற்று திரிபுகள் சமூகத்தில் பல வேண்டாத பிரச்சனைகளைக் கொண்டு வந்துவிடும்.
திராவிட ஆரிய சிந்தனையை தற்பொழுது முதலில் கிளறிவிட்டது சிறிலங்கா இராணுவ அதிகாரியாகும். இவரே தற்பொழுது இலங்கை சிங்களவருக்கே சொந்தம் எனக் கூறினார். இவரின் வரலாற்றுக் கூறு கண்டிக்கப்பட வேண்டியதே. இத்துடன் இவர்களின் ஆரிய திராவிட இனக்கூறு பற்றிய மிகைப்படுத்தல் பற்றிய வெளிப்பாடு என்பது சிங்கள மக்கள் மத்தியில் ஊறியிருப்பதும் இனப்பிரச்சனை தீர்ப்பதற்கு பாதக இருக்கின்றது. ஆயுதங்களை விட ஆபத்தானது விசமத்தனமாக கருத்துக்களாகும். இவ்வகையாக விசக் கருத்துக்களை பல்முனைச் செயற்பாடுகள் மூலமே எதிர்த்துப் போராட முடியும்.
இன்று எம்மக்கள் மத்தில் இருக்கின்ற ஆரியச் சிந்தனை அல்லது ஆரியவகை உலகக் கண்ணோட்டம், சமஸ்கிருத மயமாதல் இவைகளை எமது சமூத்தில் இருந்து எதிர்கொள்வதும், இலங்கையில் இருக்கின்ற சிங்களவர்கள் எல்லோருமே ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்ற கருத்தியலையும் எதிர்க் கொள்வதானது போராடும் சமூகமாகிய எமக்கு அவசியமானதாகும். இவை மாத்திரம் அல்ல யூதச் சிந்தனை எமது மக்கள் மத்தியில் மதம் மூலமாக எம்மிடையே ஆழ வேர் ஊண்றியுள்ளது.
யூதர்களே தமிழர்களின் உதாரணம்?
யூதர்கள் எவ்வாறு ஒரு தேசத்தை உருவாக்கினார்கள் என்பது பற்றிய வரலாற்றுப் பார்வையை இங்கு முழுமையாக கொடுக்கவில்லை எனினும் சில சாரம்சத்தை இங்கு தருகின்றறேன். யூதர்கள் சர்வதேசத்தின் உதவியுடன் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்ட உண்மையைத் தான் நாம் தெரிந்து வைத்திருக்கின்றேம். அதற்கு பின்னால் இருக்கும் வரலாற்றை எம்மவர் தெரிந்து வைத்திருப்பதில்லை.
யூதர்களின் இஸ்ரேல் -பலஸ்தீன வரலாறு
யூதர்களின் உலகக் கண்ணோட்டும் எவ்வகையானது
அவர்களின் வாழ்க்கை முறை
யூதர்கள் புலம்பெயர்ந்த நாடுகளின் வரலாறு
சமகால அரசியல் (எவ்வாறு கிறிஸ்தவ நெறியை பின்பற்றும் ஏகாதிபத்திய உலகத்தின் பாதுகாப்பு அரணின் கீழ் யூததேசம் இருக்கின்றது என்பதையும், யூததேசம் எவ்வாறு மத்தியகிழக்கில் ஏகாதிபத்திய நலனைப் பாதுகாக்கின்றது என்பதை தெரிந்திருத்தல் வேண்டும்) இவைகளை அறிவதன் மூலமே யூதர்களின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.
விவிலியத்தில் யூதரின் வரலாறு பற்றி பல ஆகமங்களாக பிரிக்கப்பட்டும், பல ஆசிரியர்களை எழுத்தாளர்களாக் கொண்டும் உள்ளது. வரலாற்றினை தொகுத்த போது முன்னுக்குப் பின்னாக வரலாறு கூறப்படுவதினால், அதன் காலமும் மாற்றம் கொண்டுள்ளது.
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்
கடவுள் வாக்களித்த தேசம் என தமது மேலான்மைக் கருத்தை முன்வைக்கின்றனர்.
காயின் ஆபேல் ஆகிய சகோதரர்களுக்கிடையேயான முரண்பாடு கூட இரண்டு வகை சமூகத்தின் உலகக் கண்ணோட்டத்திற்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடுகளை பிரதிபலிக்கின்றது. மக்கள் பொருளாதார வளர்ச்சியடைந்த பிற்பாடு ஏற்பட்ட மாற்றாத்தினால் ஏற்படும் வர்க்க வர்க்க வளர்ச்சியினால் கீழ் நிலைக்கு வருகின்றனர்.
இவற்றிற்கு எகிப்து தேசத்தில் உருவாகிய நிலப்பிரபுத்துவச் சமூதாயத்தின் அரசியல் பொருளாதார அமைப்பானது யூதர்களின் இருப்பை கேள்விக் குறியாக்கியது.
‘எந்த நாட்டில் நீ புகுவாயோ, அந்த நாட்டுக் குடிகளை எல்லாம் கலங்கடித்து, நீ வரக் கண்டவுடன் உன் பகைவர் எல்லோரும் புறமுதுகுகாட்டியோடச் செய்வோம். நீ அவர்களுடைய நாட்டில் புகுவதற்கு முன்னர், நாம் பெரிய குளவிகளை அனுப்பி ஏனையரையும் கானானையரையும் ஏத்தையரையும் துரத்தி விடுவோம். அந்த நாடுகள் பாழாய்ப் போகாதபடியும், காட்டு விலங்குகள் பல்கி உன்னைத் துன்புறுத்தாதபடிக்கும், நாம் ஒராண்டிற்குள்ளே உன் முன்னின்று அவர்களைத் துரத்திவிடமாட்டோம். நீ பெருகி அந் நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும் வரை, அவர்களைச் சிறிது சிறிதாய் உன் முன்னிலையினின்று துரத்தி விடுவோம்.
(மேலும்) செங்கடல் தொடங்கிப் பிலித்தியரின் கடல் வரையிலும், பாலைநிலம் தொடங்கி ஆறு வரையிலும், உன் எல்லைகளை உங்கள் கைகளில் ஒப்படைப்போம். அவர்களோடும் அவர்களின் தெய்வங்களோடும் நீ உடன்பட வேண்டாம். அவர்கள் உன்னை எமக்கு எதிராகப் பழிசெய்யும்படி து}ண்டாவண்ணம், அவர்கள் உன் நாட்டிலேயே குடியிருக்க வேண்டாம்” (யாத்தியர் ஆகமம் 23-27-33)
பொருளாதார வளர்ச்சியினால் உயர் வர்க்கத்தின் (ஆழுமை கொண்ட இனத்தின்) தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தினால் போராட தொடங்குகின்றனர். மக்களை ஒன்றுதிரட்டிப் போராடுவதற்கு உண்மை எனக் கொள்ளக் கூடிய கருத்துருவத்தை உருவாக்க வேண்டியது அன்றைய காலத்தில் தேவையாக இருந்திருக்கலாம். இவ்வாறாக உருவாக்கப்பட்டதாக இவ்விரண்டு சின்னங்கள் இருந்திருக்கலாம். இந்த இரண்டு கருத்துக் கொண்ட சின்னங்கள் யூத, கிறிஸ்தவத்திலும் முக்கிய இடம் பெறுகின்றது. இந்த இரண்டு முக்கிய கருத்துக்கள் தமிழ் மக்களை மாத்திரம் அல்ல மற்றைய இனங்கள் எதனையும் சமத்துவமான இனவகை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
புறவினத்தாரிடம் சென்று நற்செய்தியைப் போதியுங்கள் என்ற கோட்பாட்டுக்கமைய தமது கருத்துருவாக்கத்தை பரப்பி மற்றைய மக்களின் உலகக் கண்ணோட்டத்தை அழித்து தமது உலகக் கண்ணோட்டத்தை பரப்பு வதன் மூலம் தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இதனை தமிழ் தேசிய வாதிகள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றார் என தெரியவில்லை. யூதர்களின் இனவெறி மிருகத்தனமானதாக உருவெடுத்துள்ளது.
வாக்களிக்கப்பட்ட தேசம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற கருத்தியலின் காரணமாக இஸ்ரேல் நாட்டவருக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலே ஒரு (வல்லரசுகளால் திணிக்கப்பட்ட) சமாதான தீர்வை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது. இஸ்ரேலிய நாட்டவரின் எதேர்ச்சாதிகாரத்தை நிலைகொள்ள வைப்பது அமெரிக்க, ஐரோப்பிய தேசத்தவர்களுடன், கிறிஸ்தவ உலகத்தவர்களின் உதவிகளேயாகும். ஒரு இனத்தினை தாழ்த்தி, தம்மை உயர்த்திக் கொள்ளும் தேசிய உணர்வுகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையா என்பதை நவீன உலகில் உழைக்கும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுப்புகின்றது. கிறஸ்தவ இறையியலைக் கொண்டு ஏன் பல நூற்றாண்டுகளாக தொடரும் யூத -பலஸ்தீனப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை?
யூதரின் வரலாற்றை மாத்திரமே உண்மை எனக் கொண்டு அதனை ஏற்றுக் கொள்வதுடன், மற்றவர்களிடத்தில் வலியுறுத்துவதை இன்னும் சாதாரண மக்கள் மத்தியில் மாத்திரம் அல்ல, படித்த மக்களிடத்திலும் ஆழமாக ஊன்றியிருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தாம் வாழ்ந்த பூமியைத் தவிர மற்றைய தேசங்கள், இடங்கள் பற்றி அறிவு இருந்திருக்க நியாயம் இல்லை.
உலகின் ஒவ்வொரு முனைகளிலும் இருந்த மக்கள் தமக்கேயுரித்தான வரலாற்றைக் கொண்டு தான் இருந்திருக்கின்றனர். நாம் ஒவ்வொரு கண்டத்தை எடுத்துக் கொண்டாலும் பழமையான வரலாற்றைக் கொண்டிருப்பதை அறியலாம்.
யூதர்கள் தங்கள் முன்னோர்கள் பற்றி கூறும் போது ”இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாமிற்கு தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் முதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.” (பக்கம் 1.மத்தேயு 1. அதிகாரம். 17 வசனம்)
நாம் யூதர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளாது யூதர்களை எமக்கு உதாரணமாக எடுத்துக் கொள்வது மிகபெரும் வரலாற்றுத் தவறை நாம் புரிகின்றோம்.
சியோனிசச் சிந்தனை இவ்வாறே வாக்களிக்கப்பட்ட தேசம் என்ற கருத்தமைவில் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ளும் சிந்தனை உருவாகியது. யூத உலகக் கண்ணோட்டம், இனப்பாதுகாப்பு, வாக்களிக்கப்பட்ட தேசத்தை உருவாக்கிக் கொள்வது, தேர்த்தெடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் இவைகள் உள்ளடக்கியதே சியோனிச சிந்தனையாகும். இந்த சியோனிசச் சிந்தனையாது இஸ்ரேலிய தேசத்தை பலஸ்தீனத்தில் உருவாக்கிக் கொள்வதாக சியோனிச கொங்கிரஸ் தீர்மானம் கொள்ளவில்லை. ஆனால் இன்று உருவாகியிருக்கும் இஸ்ரேல் தேசம் என்பது மேற்கு உலகினால் கருத்திக்கப்பட்ட ஒரு சிசுவாகும்.
உலக மக்கள் யூதர்கள் மீது கொண்ட அனுதாபம் நாசிச அழிவின் எதிர்வினையாக உருவாகியது. இதனால் யூதர்களை தமது தேசங்களில் வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு அன்று பிரித்தானியாவசம் இருந்த பலஸ்தீனத்தை துண்டாக்கி இஸ்ரேல் தேசத்தை உருவாக்கிக் கொண்டனர். இவர்கள் இன்று பலஸ்தீனர்களை உலகின் பலபாகங்களுக்கும் அகதிகளாக செல்ல காரணமாகி இருக்கின்றது.
திராவிடத்தின் வரலாறு 5500 வருடங்கள் பழமையானது சிந்து வெளி நாகரீகத்தினை உருவாக்கி பெருமையுடன் வாழ்ந்த இனம். தமிழினம் தன்னை கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்தகுடி என பெருமைப்பட்டுக் கொள்கின்றது. லெமூரியா கண்டத்தில் பிறந்த மனித இனம் என்று பெருமை கொள்கின்றது. விவிலியம் பரவுவதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இனங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. அவர்கள் தமக்கென தனியான கலாச்சாரத்தைக் கொண்டு இருந்திருக்கின்றனர்.
யூதர்களின் சிந்தனையே மதமாற்றுத்திற்கு உட்பட்ட சமூகத்தில் புரையோடிப் போய் உள்ளது. எம்மவர்கள் தமது சொந்த சரித்திரத்தை தெரிந்து வைத்திருப்பதிலும் பார்க்க யூதர்களின் வரலாற்றை பக்கம் பக்கமாக தெரிந்து வைத்துள்ளனர். கிறிஸ்தவ உலகத்தின் சிந்தனை மேலேhடி இருப்பதினால் பலஸ்தீனர்களின் அலவத்திற்கான காரணம் விவிலியத்தில் இருந்து பெறப்பட்டது என்பதை அறிய முயற்சிக்காது இருக்கின்றனர். பலஸ்தீனத்தின் அவலம் இன்னும் தொடர்ந்த வண்ணமாக இருக்கின்றது. ஏன் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நோட்டே நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும், அவர்களின் செயற்பாட்டிற்கும் ஆதரவைத் தெரிவுத்துக் கொண்டது கிறிஸ்தவநாடுகளைக் கொண்ட நோட்டே அமைப்பு. இதேவேளை கமாஸ் தனது ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.
புலிகளின் ஆதரவாளர், ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் பிரேம் என்பவர் ஜிரிவியில் மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றார். அதாவது கடந்த காலத்தில் தனியே இராணுவ வெற்றிகளை இட்டு சந்தோசமடைந்தவர்கள். (இதற்கு யூதர்களைப் போல மூலதனத்தைப் பெருக்கி பெரும் பணக்காரர்கள் ஆகி, மேற்கு அரச யத்திரத்தை அசைக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளரும் படி தீர்வை முன்வைத்தார்.)
யூதர்கள் பொருளாதாரத்தில் வலிமையாக இருந்தார்கள், இருக்கின்றார்கள். இவர்கள் போல தமிழர்களின் மூலதனம் வளர முடியுமா? இதற்கு பொருளாதார அமைப்பு இடம் கொடுக்குமா? சரி இன்றைக்கு தமிழ் முதலாளிகள் இருக்கின்றார்கள். இவர்கள் கொடுக்கும் சம்பளம் எவ்வாறு கணிக்கப்படுகின்றது. தமிழ் முதலாளிகளே தமிழ் தொழிலாளிகளை சுரண்டுவதை அனுமதிகக் கோருகின்றனர்.
தமிழ் மக்களிடையேயும், சிங்கள மக்களிடையேயும் இருக்கும் வரலாற்று உண்மைகள் பற்றி மயக்கம் என்பது ஆழ வேர் ஊன்றி இருக்கின்றது. இவற்றினை போக்குவது என்பது ஆழமாக சிந்தித்து உருவாக்கப்படும் வேலை முறைகளின் மூலமே இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை உருவாக்க முடியும்.
இதேவேளை அன்னிய வரலாறே மனித குலத்தின் வரலாறாக கற்பிக்கும் கிறிஸ்தவ, யூத வரலாற்றை தமிழ்தேசியம் எவ்வித கேள்வியும் முன்வைக்கவில்லை.இதேபோல ஆரியக் கடவுள்கள் திராவிடக் கடவுகள்களை அகற்றிவிட்டு முன்வருவதையும் தமிழ் தேசியத்தைப் போற்றுபவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
ஆரியச் சிந்தனையாகிய வண்ணாசிரமச் சிந்தனை எம்மீது ஆழவேர் ஊண்றியுள்ளது. இன்று இராம வழிபாட்டின் மூலமாக ஆரியச் சிந்தனை மென்மேலும் ஆழமாக வேர் ஊன்றுகின்றது. இவ்வாறு எம்மிடம் எமது வரலாற்றைத் தவிர மற்றைய சிந்தனைகளை உள்வாங்கி இருக்கின்றோம். இந்த சிந்தனையில் எதுவும் முற்போக்கானதாக இருக்கின்றதா?
Nackeera
இக்கட்டுரை எனக்கு மிக மகிழ்ச்சியைத்தருகிறது. தமிழ்பெளத்தர் எனும் ஒரு ஆய்வுத்தர்க்க கட்டுரையை தேசத்தில் 3.3.2009 எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து இக்கட்டுரை வருவது இன்றைய தேவையாகிறது. நம்பிக்கை என்பது மனிதனின் ஆணிவேர். இதை மதங்கள் இறுகப் பற்றிக் கொள்கின்றன. இப்படியான மதத்தை அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்துவது மனிதனினது மட்டுமல்ல ஒர் இனத்தில் ஆணிவேரை அறுப்பது போலாகிவிடுகிறது. இலங்கையிலும் மத்திய கிழக்கிலும் நடைபெறுவது இதுதான். உண்மையில் ஆரியம் என்பது வரையறுக்கப்படாத ஒன்றாகத்தான் இன்றும் உள்ளது.
கிட்லரின் வரைவிலக்கணப்படி ஆரியர் என்பவர்கள் உயரமானவர்கள்; நீலக்கண்கொண்டவர்கள்; பலசாலிகள்; மஞ்சள் முடிகொண்டவர்கள் உலகின் உயர்ந்த சாதியினர் என்றான். இப்படியான மக்கள் நோர்வேயில் அதிகம் உள்ளார்கள் என்றான். இவனது உயர்சாதி இனப்பட்டியலில் ஜேமானியனான ஆரியன் தான் முதன்மையானவன் என்றும் சர்பர்களுக்கு அடுத்து நாய்கள் என்றும் அதன் பின்பே யூதர்களும் மற்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளான். இங்கே இந்திய ஆரியர்கள் எங்கே? இந்த இனச்சாதிப்படியலில் கிட்லர் அடங்குகிறானா? இவனோ குள்ளமான, கறுப்பு தலைமுடியைக் கொண்ட ஒரு ஒஸ்றியன் என்பது யாருவரும் அறிந்ததே. இவனது பரம்பரை யூதரூடாகவே தொடர்கிறது. ஏன் நோர்வேயியகள் ஏன் உயர்குல ஆரியரானார்கள்? அரசியல் தேவை.. அணுக்குண்டுக்குப் பயன்படும் பாரநீர் நோர்வேயிலேயே கிடைக்கிறது. இரஸ்சியாவை மேற்பக்கமாக பிடிப்பதற்கு நோர்வே அவசியமாகிறது. இங்கே இனப்பிரிவுகள் ஆட்சியாளர்களாலும் ஆதிக்கவாதிகளாலும் எப்படி வரையறுக்கப்படுகின்றன என்பதைக் காண்க.
இதேபோன்றதே இலங்கையில் ஆரிய திராவிட வகுப்புவாதங்கள். முக்கிற குறிப்பு: லெமூரியா கண்டம் என்பது மட்டும் தனியாக இழுத்துச் செல்லப்படவில்லை. இந்தியாவும் அதனுள்தான் இருந்தது. தமிழர்கள் அல்லது திராவிடர்கள் கடற்கோள்களால் இழுத்துச் செல்லப்பட்ட பகுதியில்தான் வாழ்ந்தார்கள் என்றில்லை. திராவிடர்கள் பரந்து விரிந்து வாழ்ந்திருக்கிறார்கள். சிந்துவெளி நாகரீகம் உண்மையில் திராவிட நாகரீகமே. என்றும் நாகரீகம் அடைந்த இடங்களைப் பார்த்தீர்கள் என்றால் ஆற்றங்ரைகளை அண்டியே இருக்கும் காரணம் பயிற்செய்கை, ரான்ஸ்போட் போன்றவற்றுக்காக மக்கள் செறிந்த வாழ்ந்தார்கள். இதைப்பற்றி அதிகம் எழுதப்புறப்பட்டால் ஒருகட்டுரையாக மட்டுமல்ல புத்தகமாகவே விரியலாம் இத்துடன் நிறுத்துகிறேன். இதுபோன்ற கட்டுரைகள் இன்றைய தேவைகள் என்பதை கூறி முடிக்கிறேன்- அன்புடன் நோர்வே நக்கீரன்
palli
நக்கீரன் தாங்கள் பின்னோடத்த்குடன் நின்று விடாது தேசம்நெற்ருடன் தொடர்பு கொண்டு ஆக்கங்களையும் கொடுக்கலாமே. கிட்லர் ஆரியானா? அதேபோல் பிரபா தமிழனா?? மகிந்தா மனிதனா? இப்படி தொடரலாமோ என பல்லி சிந்திப்பதில் தவறா??
santhanam
நான் பிறந்த இணுவையுரில் பத்துக்கும் அதிகமான சாதியம் உண்டு நக்கீரன் அதை முதலில் ஆய்வு செய்யவும்.
Suresh M.M.A
கிழிஞ்சுது போ… நக்கீரரே! இனி ஒவ்வொருவரும் சாதகக்கட்டை கையில் எடுத்துக்கொண்டு தாங்கள் தாங்கள் என்ன குலகோத்திரம் என்று குறிப்புக் கேட்க வரப் போகிறார்கள் போலிருக்கிறதே என்ன செய்யப் போகிறீர்கள். கம்பளி மூட்டை என்று கரடியைப் பிடித்த கதைபோல் உங்கள் கதை கந்தலாகப் போகிறது. தொப்புளுக்குக் கீழ கோடிருந்தால்த்தான் கோடா போட்ட ஒறிஜினல் என்ற மந்திரத்தை சொல்லிக் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகுங்கள். அவரவர் பாட்டுக்கு தங்களைச் சரி பார்த்துக் கொள்ளட்டும்.
சுரேஸ் டபுள் எம்.ஏ
Nackeeran
சந்தானம்! இனம் வேறு சாதி வேறு. இனத்தில் பல சாதிகள் உண்டு. இக்கட்டுரையும் சரி நான் எழுதிய தமிழ்பெளத்தர்களும் சரி இனத்தைப் பற்றியதே தவிர சாதியத்தைப்பற்றியது அல்ல.
இங்கே சந்தானம் கேட்கும் கேள்வி சாதியம் பற்றியது. சந்தானம் இனம்பற்றி வினாவுவாரானால் இணுவிலில் வாழும் 70 விகிதத்துக்கு மேற்பட்டவர்கள் 13ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து யாழ் மன்னர்களால் அடிமையும் குடிமையுமாகக் குடிறேற்றப் பட்டவர்களாவன். யாழ்மன்னர்களான பரசாசசேகரன் செகராசேகன் கட்டிய அல்லது ஆரம்பித்து வைத்து ஆலயங்கள் இன்றும் இணுவில் இருப்பதைக் காணலாம். தயவு செய்து சாதியம் பற்றி கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். இனரீதியான கேள்விக்கு முடிந்தவரை பதில் அழிக்கிறேன்.
பல்லி: கிட்லரின் இனவரைவு இலக்கணப்படி தோற்றதில் இவன் ஆரியனாக இருக்கவே முடியாது. பிரபாகரனை ஆய்வு செய்து பிரச்சனைப்பட நான் விரும்பவில்லை. மகிந்த மனிதனா இல்லையா என்பது பார்க்கவே தெரிகிறதே.
santhanam
திராவிட இனத்தை மங்கோலியரிற்கும் கறுப்பினத்தின் கலகை என்று விஞ்ஞான பகுப்பாய்வு சொல்கிறது நக்கீரன் அதனால் எமது கலவை வீரியம் குறைந்தது நக்கீரன். உதாரணம் வெள்ளையும் திராவிடமும் திருமணம் செய்தால் வெள்ளை பிள்ளைதான் பிறக்கிறது.
BC
//Palli-பிரபா தமிழனா?? மகிந்தா மனிதனா?//
பல்லி பிரபாகரனை மனிதனாக ஏற்று கொண்டுள்ளார்.தலைவராக ஏற்று கொள்ளாத அளவில் சந்தோசம்.
thurai
ஈழத்தமிழரைப்பொறுத்தவரை ஆரியருமில்லை திராவிடருமில்லை. மூன்று முக்கிய மேலாதிக்கம் கொண்டவர்கள் மட்டுமே.
1) கள்ளக்கடத்தற்காரர்
2) வர்த்தகர்கள்
3) அரசசேவகம் செய்பவர்கள்.
இவர்களின் செயற்பாடுகள் இலங்கையின் சரித்திரத்தில் தமிழ்மொழிப்பற்ரையோ, அல்லது நாட்டுப்பற்ரையோ வெளிக்காட்டவில்லை. இவர்களின் பெருமையையும் செயல்களையும் தமிழீழப்போராட்டம் உலகறியச் செய்துவிட்டது.
துரை
george
i dont think none of the articals are wright and its have no evidents and all this are illusioon.and whenever srilanka play cricket against other nations we all in one, last world cup for a example. we all one. even if srilanka have war with other nation we all become one there no divison. we love srilanka.all story are been made up. we all one. we can be one…….
Nackeera
சந்தானம்! கறுப்பர்களின் கண்கீழ் எலும்பும், தாடையும் மங்கோலியரை ஒத்தது. எந்தப்பகுதி ஆபிரிக்கர் என்பது முக்கியம். ஆனால் ஒரு இனத்தை 100விகிதம் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுக்க இயாலாது. விஞ்ஞானப் பகுப்பாய்வு எதை வைத்துச் சொல்கிறது என்று தான் எனக்குப் புரியவில்லை. சிறிய தாடையுடைய தந்தையும் அகன்ற தாடையுடைய தாயுமாக இருந்தால் பிள்ளைகளுக்கு பல்லுமிதப்பதற்குச் சாத்தியம் உண்டு. காரணம் தந்தையின் தாடையும் தாயின் பல்பருமனும் இருக்குமாயின் பிள்ளையின் பல் மிதக்கும் இது மருந்துவ உண்மை.ஏன் இதைக் குறிப்பிட்டேன் என்றால் தாடைஎலும்புகள் முக்கியமாக இனவாய்வுக்கு உதவியிருக்கிறது.
சந்தானம் அவர்கள் யாரைக் குறிப்பிடுகிறாரோ தெரியவில்லை அந்த வெள்ளைத்திராவிடரை. இருப்பினும் வெள்ளைத் திராவிடக்கலப்பில் கறுப்புத்தான் ஆதிக்க நிறம் என்பதுதான் விஞ்ஞானத்தின் விளக்கமும் அனுபவமும் கூட. காலநிலை, தட்பவெப்பம், வளி அடர்த்தி போன்றவற்றில்தான் உருவமாற்றம் தங்கியிருந்தது. குளிர் கூடிய நாடுகளில் பலதலைமுறைகள் வாழ்ந்தவர்களின் மூக்கு கூரியதாகவும்(சுவாசத்தை சூடேற்றி அனுப்புவதற்கு உயரானதும் நெருக்கமானதுமாக மூக்குத்துவாரம் உதவும்); ஆபிரிக்க மங்கோலிய மக்களது மூக்கு உயரம் குறைந்ததாகவும் விரிவானதாகவும் இருக்கும். சீதோஸ்ண நிலையும் வளியடர்த்தியும் இதனது முக்கிய காரணிகள். முக்கியமாக இரண்டு இனம் கலப்புறும் போது மூன்றாம் இனம் உருவாகும். ஆனால் இம்மூன்றும் ஒரே இடத்தில் இருக்குமே அன்றி கலப்புகள் ஒருபக்கமாகவும், கலப்பற்றவை தனித்தனியாகவும் போகாது. கறுப்பு இனத்தவரும் மங்கோலியரும் கலந்து திராவிடர் உருவாகியிருந்தால் கலந்த இருவினமும் கூடி கலப்பினமான திராவிடருடன் இருந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லையே. மங்கோலிய இனப்பரம்பல் மேல் கீழாகவும் கிழக்குப்புறமாகவம் பரவியதற்கான சான்றுகளை நீங்களே காணலாம். நோவேயின் மேற்பகுதியில் வாழும் சாமர் எனும் நோர்வேயின் ஆதிகுடி மங்கோலிய இனவடியாகும். முகத்தின் கண்ணாமண்டை எலும்பு மங்கோலியரை ஒத்தது. இதன்காணமாகவே அவர்கள் சரித்திரங்களையும் ஆய்வுகளையும் படித்த ஒரு கட்டுரை முன்பு எழுதியிருந்தோன்.
இப்படியான முகவமைப்பைக் கொண்டவர்கள் எப்படி நோர்வேயின் துருவப்பகுதிக்கு வந்தார்கள்? கிறீன்லாண்டிண்டின் மக்கள் கட்டையான மங்கல் நிறம் கொண்ட மங்கோலியவடிவம் கொண்டார்கள் ஏன்? எப்படி? அந்த இனப்பரம்பல் புவியின் மேற்பகுதியால் நடந்திருக்கிறது. துருவப்பகுதியில் நிலவெண்ணையாய்வு நடத்தியபோது உலர்வலய மரங்களும் கரிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. காரணம் பல. 1) துருவப்பகுதி உலர்வலயமாக இருந்திருக்க வேண்டும். 2) நிலக்கீழ் புளம்புகளின் அசைவால் உலர்வலயமரம் கரிகள் இழுத்து வரப்பட்டிருக்க வேண்டும். இவற்றைப்பற்றி விபரித்தால் தொடர்ந்து போய் கொண்டே இருக்கும்.
Kullan
நக்கீரரே! சுரேசின் அறிவுரையைக் கேட்டு எஸ்கேப் ஆகிவிடும். இல்லையேல் உம்மை விழுங்கி விடுவார்கள். தப்பிப்போம்
santhanam
மானிடவியல் மனித இனம் பற்றிய கல்வித்துறை ஆகும். “இது மனித குலத்தைச் சமூக-பண்பாட்டு நிலையிலும் உயிரியல் நிலையிலும் கடந்த கால மக்களையும் சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக உள்ளது மானிடவியல் பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது. சார்லஸ் ராபர்ட் டார்வின் (பிப்ரவரி 12 1809 – ஏப்ரல் 19 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும் கொள்கைகளையும் 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே என்னும் கப்பலில் உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள் அன்று இவரை பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.
மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன் உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர். நக்கீரன் இதைவிட விளக்கம் இருக்கா?
santhanam
நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது;மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும். இதற்கு மூலமான ஆரிய உயர்வுக் கொள்கை(Aryan Supremacy Theory) பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பெரும்பாலான ஐரோப்பிய அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. இக்கொள்கை, அன்பு, அருள், இரக்கம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நெறியை அடிமைகளின் நெறிகள் என்றும் வெள்ளை நிறமும், நீலக் கண்களும் கொண்ட ஆரியர்கள் இவற்றையும் இவற்றிற்கு அடிப்படையான யூத மறையையும், யூதர்களையும் உலகிலிருந்து ஒழிக்கும் மூலமே ஆரியர்களின் பழங்காலப் பெருமையை மீண்டும் நிலைநாட்ட முடியும் என பரப்புரை(propaganda) செய்தது.
Nackeera
தியறிகள் எல்லாம் சரியாக இருப்பதில்லை. டாவினின் தத்துவவியலை நான் வாசித்திருக்கிறேன். எனக்கு அவருடன் உடன்பாடு உண்டு. இவருடைய தத்துவமும் கண்டு பிடிப்புக்கள்பல மதங்களுடன் முரண்படுகிறது. அதற்காக அவர் சொன்னத பிழை என்றாகாது.
என் அறிவுக்கு எட்டியவரை ஆரியச்சமன்பாடு என்பது வெறும் எடுகோள் தான். அரசியல் இலாபங்களுக்காக இது பயன்படுத்துப்பட்டு வந்திருக்கிறது. துவேசத்துக்கும் மனித அழிவுகளுக்கும் வழிகோலியிருக்கிறது. டாவினின் தத்துவப்படி உயிரான கடலில் இருந்தே உருவானது என்றிந்ததும். இந்துக்கள் தம் மூளைகளைக்கிளறி சொன்னார்கள். டாவினின் தத்துவத்தை இந்துமதம் முன்பே சொல்லிவிட்டது. கிருஸ்ணருடைய அவதாரங்களை எடுத்துப்பாருங்கள் கடலில் இருந்துதானே ஆரம்பிக்கிறது. பலஆய்வாளர்களும் மதஆய்வாளர்களும் செய்யும் பிழை என்ன வெனில் ஒரு தத்துவித்தை ஏற்றுக்கொண்டு அதற்கான சான்றுகளைத் தேடுவது. கிடைக்கும் சான்றுகளை தமக்குச்சாதகமாகப்பாவிப்பது. உலகம் உருண்டை என்று கூறுவதற்கு முன்னே பல ஆய்வுகள் நடந்தனதான். ஆனால் இல்லை அது உருண்டை என்றதும் சொன்னவர் தூக்கிலிடப்பட்டார். என்றும் ஆய்வு செய்பவர்கள் பலவருடங்கள் படித்து ஏதோ ஒன்றை தலைக்குள் புகுத்தி ஏற்றுக்கொண்ட பின் தான் ஆய்வாளராகிறார்கள். இதை விட வேறு வழியில்லை. உ+ம்- 1+1->2 இது ஒரு எடுகோள். இதை வைத்தே விஞ்ஞானம் செவ்வாய்க்குப் போயுள்ளது. ஆனால் இந்த 1+1->2 எப்பவும் எங்கும் பொருந்தாது. எதை ஏற்பது விடுவது என்ற குழப்பம் என்று இருந்து கொண்டுதான் இருக்கிறது. மனித இனம் ஆதாம் ஏவாளில் இருந்து வந்ததோ அன்றி பலவடிவக் குரங்களில் இருந்து வந்ததோ அடிப்படை ஒன்றுதான் என்பது உண்மை. குரங்கள் மட்டுமல்ல உலகின் உயிர்வாழவனவின் உருவங்கள் எல்லாம் சீதோஸ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளதை காணலாம். என்கருத்துப்படி திராவிட ஆரிய சாதி சமய கருத்துக்களுக்கு அப்பால் எல்லோரும் காலநிலை காரணமாக பல உருவ அமைப்புக்களைக் கொண்ட மனிதர்கள் என்பது தான் உண்மை.
Nackeera
சந்தானம் அவர்கள் என்னைத்தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது நான் மானிடவியல் தத்துவாசிரியன் அல்லன். மானிடம் புவியியல் கலாச்சாரம் சமூகவியல் பற்றிய ஆர்வலன் என்பது தான் உண்மை. என்ஆர்வக்கோளாறு நிமிர்த்தமே இங்கே கட்டுரையையும் பின்னோட்டங்களையும் எழுதி வந்தேன். ஒரு ஆரோக்கியமான கருத்துக்களத்தை அமைத்துத்தந்த தேசத்துக்கு நன்றிகள்
santhanam
குழப்பங்கள் கருத்துக்களை உருவாக்கும் அந்த அடிப்படையில் தான் எனது பின்னோட்டத்தை நான் எழுதினேன். நன்றி நக்கீரன்.
palli
மனிதன் குரங்கில் இருந்து வந்தானா.? அல்லது குரங்கு மனிதன் மீது இருந்து தாவியதா.,? எதுவும் பல்லிக்கு தெரிய வாய்ப்பில்லை. இருப்பினும்
தமிழன் குரங்கில் இருந்து தான் வந்தான் என்பது இயக்க செயல்பாடுகளால் உறுதி ஆகிவிட்டது.
santhanam
பல்லி என்னை குழப்பவேண்டாம் உங்களை இதிலிருந்து ஒடபன்னிடுவன். எல்லாம் சேர்ந்தகலவை நான்.
palli
சந்தானம் பல்லியை ஓடவைப்பது சுலபம். நேரம் வரும் போது பல்லியாயே ஓடி விடும். ஆனால் இன்று சந்தானம் பல்லியை ஓவடெக் பண்ண வேண்டும். அதுதான் தேசத்துக்கும் தமிழர்க்கும் தேவையானது .இது எப்படியிருக்கு.