உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மறுபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நேற்று முன்தினம் துருக்கியில் இரு நாடுகளின் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியானது.
தற்போதைய நிலை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடி ன் கூறும்போது, “உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சில நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக பின்னர் விரிவாக பேசுகிறேன். அது சாதகமானதாக இருக்கும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தாது. அதற்கு மாறாக வலுவானதாகவே மாற்றும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
உக்ரைனுடனான சமரச பேச்சு தினமும் தொடர்ந்து வருவதாகவும் புடின் தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த அடிப்படையிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அவர் கூறவில்லை.
அதேபோல் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறும்போது, “உக்ரைன் இராணுவம் முக்கியமான திருப்புமுனை மற்றும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.