புதுமாத்தளன் பகுதியில் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதில் புலிகள் திட்டமிட்ட செயற்பாடு

புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியில் புலிகளே திட்டமிட்டு உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இதனூடாக பட்டினிச் சாவை மக்கள் எதிர் கொள்வதாகக் கூறி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவும் புலிகள் முயற்சிக்கின்றனர் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

இதுவரை இப்பகுதிக்கு மிகவும் சிரமத்துக்கு மத்தியிலும் கப்பல் மூலமாக 250 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களை நாம் அனுப்பிவைத்துள்ளோம். இன்றும் சுமார் 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கடல்மார்க்கமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. திருமலை துறைமுகத்திலிருந்து இது புறப்படும்.

இவ்வாறு அனுப்பப்படுகின்ற உணவுப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் புலிகளேதான். நாம் அனுப்பும் உணவுப் பொருட்களில் 50 வீதத்தை புலிகளே எடுக்கின்றனர் என்பதும் அனைவருக்கும் தெரியும். புலிகளுக்கு எதிராக போர் புரிந்து கொண்டு புலிகளுக்கும் சேர்த்த உணவு அனுப்பும் ஒரே அரசாங்கம் எமது அரசுதான்.

புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பகுதிகளுக்கு தரைமார்க்கமாக முன்பு அனுப்பிய உணவுப் பொருட்கள் கூட இப்போதும் போதுமானதாக இருக்கக் கூடியவாறுதான் அனுப்பினோம். உணவு லொறிகள் மேல் தாக்குதல் நடத்தியதாலேயே தரை மார்க்கமாகவும் அனுப்ப இயலாமல் போனது.

மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையோடு சிரமங்களுக்கு மத்தியிலும் கடல்மார்க்கமாக உணவை அனுப்புகிறோம். இந்நிலையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்கிறார்களென சர்வதேசத்துக்குக் காட்டி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியில்தான் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

உணவின்றி மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்கிறார்கள் என்று கூறும் சில ஊடகங்கள் ஏன் மக்களுக்கு அனுப்பும் உணவை புலிகள் பறித்துக் கொள்கிறார்கள் என்பதை கூற முன்வருவதில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    இப்படியுமா சிந்திப்பார்கள்.

    Reply
  • santhanam
    santhanam

    அங்கோலவில் ஆரம்பித்த பட்டினி சாவு சோமாலிய வரை வந்து இப்ப புலிகளின் கையில் சர்வதேசம் ஒப்படைத்துள்ளது இவர்கள் இதை சர்தேசத்திற்கும் பேரினவாதத்திற்கும் சாதகமாக கொண்டு செல்வதற்கு உதவுவார்களே தவிர. தமிழ்மக்களிற்கு எள்ளவும் உதவாது.இதுதான் ஆபிரிக்ககண்டத்திலும் நடந்த நிஐம்.

    Reply
  • பகீ
    பகீ

    …சில ஊடகங்கள் ஏன் மக்களுக்கு அனுப்பும் உணவை புலிகள் பறித்துக் கொள்கிறார்கள் என்பதை கூற முன்வருவதில்லை?….

    உங்களின் கதைகளை யாரும் நம்புவதில்லை என எடுத்துக்கொள்லலாமா , இல்லை பத்திரிகையாளர்களை போட்டுத்தள்ளிவிட்டீர்கள், ஜெயிலுக்குள் போட்டுவிட்டிர்ர்கள் இல்லை ஓடித்தப்பிவிட்டார்கள் அவர்கள் என எடுத்துக்கொள்ளலாமா?

    Reply