உக்ரைன் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி – ஐரோப்பிய பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாடு மீது போர் தொடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கோரிக்கை! - உக்ரைன் ஜனாதிபதி கையெழுத்து (Photo) - தமிழ்வின்
இதையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பியயூனியன்  நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில்,  ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமையன்று உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்சி கையெழுத்திட்டார். தொடர்ந்து  ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் பேசியதாவது:
உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
அவரது உரை முடிந்தவுடன் அங்கிருந்த உறுப்பினர்கள் கைதட்டி பலத்த கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக உக்ரைனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *