அண்மையில் ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டின் மீதான தாக்குதல் இடம்பெற்றபோது, அங்கு வந்து தாக்குதலை நடத்தியவர்கள் வெள்ளைவானில் வந்திருந்தார்கள் இந்தநிலையில் எதிர்க்கட்சியினர் இது தொடர்பான தங்களுடைய அனுதாபத்தையும் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல் குறித்து சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
குறித்த கேள்விக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,
ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் பேதிலளித்த அவர்,
ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே எதிர்க்கட்சி காய் நகர்த்துகின்றது என்பது புலனாகின்றது. கடந்த அரசாங்கமே யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நாட்டை காட்டி கொடுத்தது. இனிமேலும் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.