புலிகளுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்த கீத் வாஸ் எம்.பி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். புலிகளின் உண்மையான சுயரூபம் தெரிந்துவிட்டதாக அவர் கூறியிருப்பதை வரவேற்கிறோம் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கூறினார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், புலிகளுக்கு ஆதரவாக இவர் நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்தார். இதனால் இலங்கை மீது சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகலாம் என எமது பாராளுமன்றத்தில் கூட பல தடவைகள் கலந்துரையாடப்பட்டது.
ஆனால் புலிகளின் உண்மையான சுயரூபத்தை அவர் உணர்ந்து அது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஆரம்ப முதலே நாம் ஒரே நிலைப்பாட்டிலே இருந்தோம். இன்று எமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.