பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க தைரியமான இலங்கைத் தமிழர்களின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள சிவசேனா கட்சி, விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்திய அரசுக்கு எதிராக அல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிவசேனா கட்சியின் பத்திரிகையான “சாம்னா’ வில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இந்தியாவை சுற்றி பல்வேறு தரப்பிலிருந்து ஆபத்து உருவாகிக்கொண்டிருக்கின்றது. அதனை தடுக்க மத்திய அரசு எதனையாவது செய்யவேண்டியது அவசியம்.
இந்தியாவின் தென்பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தலாமென இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்துகொண்டு வருகின்றது. புலிகளை பெருமளவு வெற்றி கொண்டு விட்டதாக இலங்கை இராணுவத்தினர் அறிவித்தாலும் கொழும்பில் புலிகளின் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கைத்தமிழர் பிரச்சினை அந்நாட்டின் உள்நாட்டுப்பிரச்சினை. இலங்கைத்தமிழர் விடயத்தில் நாம் அனுதாபம் காட்டினாலும் இந்தப் பிரச்சினையில் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றவேண்டியது அவசியம்.
காஷ்மீரில் பிரிவினைவாதிகளை எதிர்க்கும் நாம் புலிகளை மட்டும் ஆதரிக்கமுடியாது. புலிகளுடன் போரிட இந்திய இராணுவத்தை அனுப்பியதால்தான் ராஜீவ்காந்தி உயிரிழக்க நேரிட்டது. தற்போதைய அரசும் அதேபோன்ற தவறைசெய்யக்கூடாது. இலங்கை அரசு அங்குள்ள தமிழ்மக்களை அழிக்க நினைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் நலனில் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அக்கறை காட்டும் போது மற்றைய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் நலனில் நாம் ஏன் அக்கறை காட்டக்கூடாது?
விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகக்தான் போராடி வருகின்றார்கள். இந்திய அரசுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை.இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்தியாவுக்கு எதிராக அவர்கள் போராட நினைத்தால் 100 கோடி இந்தியர்களின் ஆதரவைப் அனுதாபத்தை இழந்துவிடுவார்கள்.
இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும் எமது நாட்டின் முதல் எதிரியான பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய அரசு தயாரில்லை. அதேபோலத்தான் மத்தியிலுள்ள தற்போதைய அரசு இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காது. இந்தியாவில் பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்க தைரியமான இலங்கைத் தமிழரின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.
அந்நியநாட்டு பயங்கரவாதிகள், நேபாள மாவோயிஸ்டுகள்,சீன அரசு, வங்கதேச கலகம், இலங்கை நிலைவரம் என பலதரப்பிலிருந்தும் இந்திய நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுக்க மத்திய அரசு உடனடியாக செயலில் இறங்கவேண்டும்.
palli
ஆளாளுக்கு வடிவேலு லெவலுக்கு ஈழ தமிழர் அடிவாங்க திட்டம் போட்டு கொடுக்கிறாங்க. அந்த வகையில் சிவசேனாவும் தனது பங்கை செய்துள்ளார்.
santhanam
அது சரி பொற்கோயிலுக்கும் இப்படி தான் எங்களை பாவித்து விட்டு புலியை கொண்டு அழித்தவர்கள் அப்பவும் கிட்டன் தலைமைக்கு ரெலிபோன் இந்தியாவிற்கு அடித்து கேட்டவன் ரெலோவை அச்சுறுத்தி போட்டுவிடுவம் என்று ஆலோசகர் உடன் பதில் சொன்னாரம் எல்லோரையும் போட்டு தள்ளவும் என்று இதை சொன்னவர் கிட்டனுடன் இருந்தவர்.
பகீ
ஓ அப்ப ரெலோக்காரரும் இந்தியாவின்ர ‘இறையாண்மை’க்குள்ள பூந்து விளையாடினவையோ? அப்ப ஏன் புலியை மட்டும் கிண்டுறியள்?
palli
சந்தானம் சொல்லும் விடயம் பல்லிக்கு புதிதாக உள்ளது. இருப்பினும் மறுக்கவில்லை. அந்த காலத்தில் டெல்லியில் இருந்தவர்கள் புளொட்டும், ரெலோவும்தான். ஆனால் இந்த விடயத்தில் இந்தியா இவர்களை சேர்த்ததா என தெரியவில்லை. அப்படிநடந்து இருந்தால் கழகத்தினர்க்கோ அல்லது பழய ரெலோ உறுப்பினர்க்கு தெரிந்திருக்க வேண்டும். பார்ப்போம்.
பார்த்திபன்
சந்தானமும் சந்தர்ப்பம் பார்த்து புகுந்து விளையாடுறாரோ தெரியவில்லை. காரணம் இந்தியா இப்படி தமது இறையாண்மைக்கு பங்கம் வரக்கூடிய ஒரு செயலை மேற்கொண்டிருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் அப்போது பொற்கோவில் தாக்குலில் பாவிக்கப்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களின் ரெஜிமண்ட் தான். பல்லி சொன்னது போல் பழைய ரெலோக்காரர்களிடம் கேட்டால் உண்மை தெரியவரும்.
santhanam
சில விடயம் உங்களிற்கு புதிதாகதான் தெரியும் ஏன் என்றால் நீங்கள் சமாதானத்திற்கு பிறகுதான் விளங்கு உடைத்தனீர் நாங்கள் 1979ல் இருந்து மிகவும் அவதானமாக ஆய்வு செய்கிறோம் நிறைய சொல்லாத விடயம் உண்டு.
SUDA
//இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் நலனில் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அக்கறை காட்டும் போது மற்றைய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் நலனில் நாம் ஏன் அக்கறை காட்டக்கூடாது?// சிவசேனா
ஆக இலங்கை விவகாரத்தில் ஏன் அதீத ஈடுபாடு காட்டக்கூடாது என்பதற்கான காரணத்தை இந்திய மத்திய அரசுக்கு சிவசேனா எடுத்துக் கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் இந்தியாவில் ஈழப்பிரச்சினையை அங்குள்ள அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் விதம் அவர்களின் கட்சி அரசியலுக்கு நன்மை சேர்க்கின்றதே தவிர ஈழத்தமிழருக்கு எவ்வித நன்மையையும் தரவில்லை.
VADIVELU
ஏன் சிவசேனா தொண்டர்கள் மீது சிவசேனாவுக்கு நம்பிக்கையில்லையோ??
palli
சந்தானம் நாம் எப்போது விலங்கு உடைத்தோம் என்பதல்ல இங்கு பிரச்சனை. தேசத்தில் எந்த ஒரு விடயம் வந்தாலும் அதை விமர்சனம் செய்து அதை சரியானதானதுதானா என்பது நல்லதுதானே. எமது பின்னோட்டத்தையும் கவனிக்கவும் நாமும் தாங்கள் சொன்ன கலத்தில் இருட்டில் தடக்குபட்டு விழுந்தவர்கள்தான் என்பது புரியும்.
santhanam
பல்லி உங்களது கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு ஆனால் அது காலம் தாழ்த்தி வருவதாக நான் நினைக்கிறேன் சரித்திரத்திற்கு சமாதி கட்டும் போது வந்து என்ன பிரயோசனம்.
palli
உன்மைதான் என்ன செய்வது அன்று இந்த தேசம் இல்லையே இருந்திருந்தால் ஜனனாயகவாதிகள் போல் இயக்கத்தையும் சந்திக்கு கொண்டு வந்திருப்போமல்ல.