மேல் மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியினை மறுபரிசீலணை செய்யுமாறு பிரதான இரு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஏப்பிரல் மாதம் 25ம் திகதி தேர்தலினை நடாத்துவது என கடந்த 26ம் திகதி தேர்தல்கள் செயலகம் அறிவித்திருந்தது. இந்த திகதியினை மாற்ற வேண்டும் என இரண்டு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தேர்தலுக்கான காலம் நீடித்துள்ளதன் காரணமாக இந்த திகதியை மாற்ற வேண்டும் என தாம் தேர்தல்கள் செயலகத்திடம் கோரியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த திகதியில் தேர்தலினை நடாத்துவதில் தமக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த திகதியினை மாற்றுவது தொடர்பில் ஐ.தே.க பொதுச் செயலாளர் தம்முடன் கலந்துரையாடினார் எனவும் ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியினை ஒருபோதும் மாற்ற முடியாது எனத் தாம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் காலங்களில் தேர்தலுக்கான திகதியினை அறிவிக்கும்போது தேர்தல்கள் ஆணையாளர் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடும் முறைமையொன்றினை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.