அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டாவும், ஒமிக்ரோனும் வேகமாக பரவி வருகின்றன.
அமெரிக்காவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்திருந்தது நேற்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதேபோல், டென்மார்க், போர்த்துக்கல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 71 சதவீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 27-ம் திகதி முதல் ஜனவரி 2-ம் திகதி வரையிலான ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 71 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே, ஒமிக்ரோன் வைரசும், டெல்டா வைரசும் சேர்ந்து சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.