தாய், தந்தையரின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நடந்துகொள்ள வேண்டுமென தொழில் அமைச்சர் அதாவுட செனவிரத்ன தெரிவித்துள்ளார். மாவனல்ல பகுதியில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் வேளையில் சந்திரிகாவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை குறித்து சர்வதேச மட்டத்தில் பாதகமான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் காணப்படும் தனிப்பட்ட கோபம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களாகப் போற்றப்படும் பண்டார நாயக்கா மற்றும் சிறிமாவோ அம்மையாரின் புதல்வி என்ற ரீதியில் சந்திரிகா பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்