ஈராக்கின் தலைநகர் பக்தாத் நகரில் இலங்கைத் தூதரகத்தைத் மீண்டும் திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
இலங்கைக்கும் ஈராக்குக்கும் இடையிலான இராஜதந்திர உறவு 1962 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுடன் 2003 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக ஈராக்குக்கான இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது.மீண்டும் தூதரகத்தைத் திறப்பதற்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் டொலரை ஒதுக்கவும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.