சார்க் வலய நாடுகளின் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். தெற்காசிய உயர்கல்விக் கொள்கை மற்றும் நுட்பங்கள் என்ற தொனிப்பொருளிலான இந்த மாநாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடத்தவும் அதற்கென 20 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.