இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமைகளின் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என அவர் இறுதி நேரத்தில் முகர்ஜீ அறிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜீக்கு பதிலாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஈ.அஹமட் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
palli
பல்லி ஏற்க்கனவே சொல்லிவிட்டதே சோனியா அம்மையாரின் மனம் தற்ப்போது தடுமாற தொடங்கி விட்டது. தமிழகம் சோனியாவின் கனவுக்கு(ராகுல்காந்தி பிரதமர் ஆவது) மிகமிக அவசியம். எல்லா மானிலத்திலும் காங்கிறஸ் கோட்டை சரிகிறது. ஆகவே தமிழகத்தையாவது காப்பாற திடீர் அரசியல் மாற்றங்கள் டெல்லியில் கொடியேறுகிறது. ஈழ பிரச்சனைக்காக தொடங்கிய தமிழக பிரச்சனை (போராட்டம்) இன்று தமிழக கெளவுரவ பிரச்சனையாகி விட்டது. ஜெயலலிதாவை விட காங்கிறஸ் உடபட தமிழகம் டெல்லி அரசியலுக்கு எதிராக செயல்பட தொடங்கிவிட்டதை பார்க்க முடிகிறது. தேர்தலுக்கு முன் டெல்லி ஆட்ச்சி கவிழ்வதையும் சோனியா விரும்ப மாட்டார். எது எப்படியோ டெல்லி மாறினால் ஈழ தமிழருக்கு (புலிக்கல்ல) ஒரு விடியல் பிறக்கலாம்.