புலிகள் ஆயுதங்களை கீழே போடலாம்: யுத்தநிறுத்தம் என்பது கிடையாது – அமைச்சர் கெஹெலிய

rambukwela.jpgவிடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்ல வேண்டிய எத்தகைய தேவையும் அரசாங்கத்துக்குக் கிடையாதென தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளைக் கைவிட்டு ஆயுதங்களைக் கீழே வைப்பார்களானால் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தமொன்றுக்குத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபைக்கும் இணைத் தலைமை நாடுகளுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளனர். நாம் யுத்த நிறுத்தமொன்றுக்குத் தயாரென அதில் குறிப்பிட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தருணத்திலேயே புலிகளின் இக்கோரிக்கைக்குப் பதிலளிப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று வெளியிட்ட தகவல் அமைந்துள்ளது.

அமைச்சர் இது தொடர்பில் தெரிவிக்கையில், கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக விடு தலைப் புலிகளுடனான அனுபவம் அரசாங்கத்துக்கு உண்டு. இத்தகையதொரு நிலையில் விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்தத்தை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் 98 சதவீதத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் யுத்த நிறுத்தமொன்றுக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    ஜயா அப்படியே இறந்த ரணுவத்தின் கணக்கையும் சொன்னால் சிங்களமக்களும் தங்களுடன் இனைந்து மகிழ்ச்சி அடைவார்களே…. என்ன வில்லதனம். நடேசருக்கு மட்டுமல்ல உமக்கும் வாய்சவால் ஓவராய்தான் இருக்கு. உமக்கு பின்னால் காண்டாமிருகங்கள் புலியையும் சிங்கத்தையும் சேர்த்து(நாட்டை) விழுங்க எட்டி பார்ப்பது தெரியாமல் லுங்கியை மடித்து கட்டுவது வேடிக்கைதான்.

    Reply