பிரணாப் முகர்ஜி இலங்கை வருகிறார்

pranaf.jpgஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை மீண்டும் இலங்கை வரவிருக்கிறார். கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களது கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டே பிரணாப் முகர்ஜி இலங்கை வருவதாக வெளி நாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்திருக்கிறார். சார்க் நாடுகளது வெளிவிவகார அமைச்சர்களது கூட்டம் எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

பிரணாப் முகர்ஜியின் இந்த இலங்கை விஜயத்தின்போது அவருடன் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் பற்றி கலந்துரையாட விருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்திருக்கிறார்.

ஒரு மாத காலப் பகுதிக்குள் பிரணாப் முகர்ஜியின் இலங்கைக்கான இரண்டாவது விஜயம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முகர்ஜி அவசர பயணமாக இலங்கை வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து திரும்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    நாழுக்கு நாள் பவுண் விலை போல் இந்திய அரசியல் (இலங்கை பற்றியது) மாறுகிறது. ஆகவே தாங்கள் இந்தியாவை விட்டு வெளியேரிய போது இருந்த நிலை தாங்கள் திரும்பி போகும்போது இருக்க வாய்ப்பில்லை. எதுக்கும் சோனியா அம்மையாருடன் அடிக்கடி பேசி கொள்ழுங்கோ. அம்மையார் தேர்தல் பற்றி யோசிக்க தொடங்கி விட்டார் போல்உள்ளது.

    Reply
  • santhanam
    santhanam

    இன்று நடக்கும் போராட்டத்தை எடுங்கள். சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து, அவர்கள் உள்ளடங்கிய ஒரு பொதுக் கோசத்தை ஏன் உருவாக்க முடியவில்லை இப்படி மனித அவலத்துக்கு எதிரான போராட்டம் பொதுவில் தனிமைப்பட்டது. ஏகாதிபத்திய தலைவர்களின் அருமை பெருமைகளை கூறி, கருணையை வேண்டி நின்றனர். அதுவே புலிக்கு எதிரான, எம் மக்களுக்கு எதிரான தலையீடாக இன்று மாறுகின்றது எமக்குள் நாமே மக்களுக்கு எதிரான துரோகிகளாகியதே எம் போராட்ட வரலாறு. கொள்கை, கோட்பாடு, நடைமுறை என்று எங்கும், எம் மக்களுக்கு துரோகமிழைத்தவர்கள் தான் மனித அவலத்தையும் காட்டி துரோகமிழைத்துள்ளன மனிதன் தன் விடுதலையை, தான் போராடிப் பெறுவதை, இவர்கள் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. மக்கள் தம் விடுதலைக்காக தாம் போராடுவதை முன்னிறுத்தி, மனிதஅவலத்தை முன்மொழிபவர்களல்லர்.

    Reply