தாய்வானை சீனா தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் சிஎன்என் நிகழ்ச்சியில் பேசும்போது, “ நாங்கள் இதில் பொறுப்புடன் இருக்கிறோம். தைவானுடனான எங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை. சீனா தாய்வானை தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம்” என்று தெரிவித்தார்.
தாய்வான் -சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இரு நாடுகளும் மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சியில் சீன ஜனாதிபதி ஜி-ஜின்-பிங் தீவிரமாக இருக்கிறார். சீனா அமைதியான முறையில் தாவானுடன் ஒன்றிணைய விரும்புகிறது என்று கடந்த வாரம் சீன அதிபர் தெரிவித்தார்.
”தாவான் சீனப் பிரதேசத்தின் ஒரு பகுதி. சமீபத்தில் தாய்வான் ஜலசந்திக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளன. இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளன என்று சீனா தெரிவித்தது.
முன்னதாக ,சீனா கனவு காண்கிறது. தலிபான்கள் வழியைப் பின்பற்ற நினைக்கிறது. ஆனால், நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம் என்று தாய்வான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் தாய்வான் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பானது, அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.