முல்லைத் தீவில் விடுதலைப்புலிகள் வசமிருக்கும் கடைசி நகரான புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு நகரை தற்போது படையினர் சுற்றிவளைத்து வருவதாகவும் அப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.
பரந்தன் முல்லைத்தீவு வீதிகளில் (ஏ35) பரந்தனுக்கு தென்கிழக்கே சுமார் 35 கிலோமீற்றர் தூரத்தில் புதுக்குடியிருப்பு உள்ளது. இந்த வீதியிலுள்ள புதுக்குடியிருப்பு நகர் மட்டுமே தற்போது புலிகள் வசமிருப்பதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக புதுக்குடியிருப்புக்கு மேற்கே படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் மூலம், புதுக்குடியிருப்புக்கு மேற்கே சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்த அம்பலவன் பொக்கணைப் பகுதியை நேற்று முன்தினம் வியாழக்கிழமை படையினர் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அம்பலவன் பொக்கணைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து மேலும் முன்னேறி புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைய முயற்சித்து வருவதாகவும் புதுக்குடியிருப்பு நகரை தற்போது படையினர் வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கு திசைகளில் சுற்றிவளைத்து வருவதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை இந்த மூன்று முனைகளிலும் 58 ஆவது படையணி புலிகளுடன் கடும் சமரில் ஈடுபட்டதாகவும் இதில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர். இப் பகுதிகளில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துறைப்பொறுப்பாளர்
வன்னியில் இருக்கும் சனத்தொகை தொடர்பான எந்தவித சரியான தகவலும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் புலிகள் கொடுக்கவில்லை. தற்போது எல்லா தாக்குதலிலும் கொல்லபடும் அப்பாவி மக்களும் புலிகளின் யுத்தத்தின் மீதான எதிர் தாக்குதலில் பங்குகொண்ட போதே கொல்லபட்டதாக இலங்கை அரசு அறிவிக்கபோகிறது.
புலிகள் வன்னியில் உள்ள அப்பாவி தமிழ் மக்களின் விபரத்தை ஜ.சி.ஆர்சி யிடம் ஆதல் கொடுத்தால் ஒரு காலத்தில் கொல்லபட்ட மக்களையாதல் ஜ.சி.ஆர்சி உலகிற்கு அம்பலபடுத்தும். இதனால் இலங்கை அரசு மீது பாரிய இன அளிப்பு குற்றசாட்டை உலக நாடுகள் கொண்டுவரும்.
புலி முட்டாள்தனமாக கொல்லபடும் தமிழ் மக்களின் தகவலையும் உயிருடன் இருக்கும் தமிழரின் தகவலையும் சரி எல்லாத்தையும் தானே வைத்திருந்து இறுதியில் தான் அளியும் பொது அனைத்து அப்பாவி பொதமக்களின் மிதான இலங்கை அரசின் கொலைகளையும் தன் தலையில் சுமக்க வேண்டி வரம். ஆகவே அத்தகய தகலை உலக அமைப்பிடம் கொடுத்து அவா;களை உலக அமைப்பு ஒண்றின் ஊடாக பாதுகாத்து தருமாறு கொரலாம்.
பார்த்திபன்
புலிகள் அவர்களின் பிடியில் இருக்கும் மக்களின் விபரங்களைக் கொடுக்கின்றதோ இல்லையோ அந்த மக்களைப் புலிகளே கொல்வதை நிறுத்தினாலே பாதிப்புகள் குறையும். மாறாக தங்களால் கொல்லப்படும் மக்களையும் அரசினால் கொல்லப்பட்ட மக்களாக்கவே புலிகள் முயலுகின்றார்கள். புலிகள் சுத்தமான வீரர்களாக இருந்திருந்தால் மக்களை வெளியேற அனுமதித்துவிட்டு இராணுவத்துடன் தாம் மட்டும் மோதலை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் நடப்பது மக்களைத் தான் அவர்கள் கேடயமாக்கி தங்களைப் பாதுகாக்கின்றார்கள். இதனை இன்று சர்வதேச அமைப்புகளே கண்டிக்கின்றார்களே. போதாக்குறைக்கு ஐ.நா முக்கிய பிரதிநதி ஒருவர் இலங்கையில் நிற்கும் போதே தமது விமானத் தாக்கதலை நடத்தி வீரம் காட்ட வெளிக்கிட்டு இன்று மண்ணைக் கவ்வி நிற்கின்றார்கள். இது இன்று அரசிற்கு சாதகமாகவே அமைந்துவிட்டது. ஐ.நா பிரதிநிதியும் அரசிற்கு பல மில்லியன் டாலர் உதவி வழங்குவதாக அறிவித்தும் விட்டார்.