ஈக்வடோரில் உள்ள சிறையில் நடந்த கலவரத்தில் 100 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். ஈக்வேடார் சிறைச் சாலைகளில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு தாக்குதல் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் மீண்டும் நாட்டின் முக்கிய சிறைச் சாலையில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,
“ ஈக்வடோரில் உள்ள குயாகுவிலில் அளவுக்கு அதிகமான சிறைக் கைதிகள் உள்ளனர். இதில் சிறை கைதிகளிடம் ஏற்பட்ட மோதலில் 100 பேர் பலியாகினர். 52 பேர் காயமடைந்தனர். சிறையிலுள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் துப்பாக்கிகளை வைத்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.