இலங்கை யின் வடக்கே போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கு உதவ தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள், தம் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்கள் இந்தியாவிடமும், சர்வதேச சமூகத்திடமும் போர் நிறுத்தத்தையே கோருவதாக தெரிவித்தார்.
பிபிசி தமிழோசைக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியில் விடுதலைப்புலிகள் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களை தடுப்பதாகவும், சிலரை சுட்டுக் கொல்வதாகவும் ஐநா மன்றம் கூறியிருந்ததை மறுத்ததுடன், இது குறித்து சர்வதேச நிறுவனங்கள் நேரில் வந்து பார்த்தால் உண்மை நிலைமை அவர்களுக்கு விளங்கும் என்றும் கூறினார்.
”எமது மக்கள் எங்களோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இராணுவ தாக்குதல்கள் நடந்த சமயத்தில் மக்கள், விடுதலை புலிகளின் இன்ப துன்பங்களில் மட்டுமல்லாது போராட்டத்திலும் பங்குபெற்று வருகிறார்கள். அரசு பொய்யான பிரச்சாரத்தை செய்கிறது. சர்வதேச நிறுவனங்களோ ஒரு தலைப்பட்சமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன”, என்றார் நடேசன்.
ஐநா மன்ற ஊழியரை விடுதலைப்புலிகள் கட்டாயமாக ஆள்சேர்த்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, தமது அமைப்பு யாரையும் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பதில்லை என்றும், அதேசமயம் அரச படைகளின் அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது பொதுமக்களின் சகலதரப்பாரும் தமது இயக்கத்தில் தாமாக முன்வந்து இணைவதாகவும், அப்படி அந்த ஊழியரும் இணைந்திருந்தால் தமது இயக்கம் அவரை இணைத்துக்கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
tamialn
Very good diplomacy Mr Nadesan
murugan
”எமது மக்கள் எங்களோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இராணுவ தாக்குதல்கள் நடந்த சமயத்தில் மக்கள் விடுதலை புலிகளின் இன்ப துன்பங்களில் மட்டுமல்லாது போராட்டத்திலும் பங்குபெற்று வருகிறார்கள்.”
ஆக எல்லோரும் புலிகள்தான். புலிகள் தான் யுத்த நிறுத்தம் கோருகிறார்கள்.அரசாங்கம் புலிகளைத்தான் கொன்று குவிக்கிறது.
மக்களை கைவிட்டதுமல்லாமல் காட்டியும் கொடுக்கிறீரே நடேசன்!
palli
நடேசன் உமக்கும் மக்களுக்கும் என்ன சம்பந்தம். பல்லி உம்மால் பாதிக்கபட்ட தழும்பு இன்றுவரை உண்டு. ஆனால் அதுக்கு பழிதீர்க்க உமக்கு பல்லி பின்னோடம் விட விடவில்லை. சமதான பேச்சு வார்த்தைக்கு தாங்கள் வந்தபோது (பலர் மறந்திருக்ககூடும்) ஜெர்மனில் பத்திரிகயாளர் கூட்டத்தில் தமிழ்செல்வனிடம் ஒரு ஜெர்மனிய பத்திரிகயாளர் கேட்டார் புலிஅமைப்பு பல கல்விமான்களை கொலை செய்திருக்கிறது. அந்த வரிசையில் இப்போது(அன்று) தலமை ஆசிரியர் இரத்தினதுரையையும் கொலை செய்துள்ளது. ஆகவே அதுக்கான விளக்கம் தரமுடியுமாவென. அதுக்கு தமிழ் செல்வனோ நிலமையை புரிந்து கொண்டு தான் அரசியல் பொறுப்பாளர்தான் ஆகவே அங்கு(ஈழத்தில்) நடக்கும் புலிராணுவ விடயங்கள் பற்றி பதில்சொல்ல முடியாது. ஆகவே ஈழத்தின் பாதுகாப்பு கெடுப்பாளரிடம் இது பற்றி கேக்கவும் என சொல்லவும். கேள்வி நடேசர் பக்கம் திரும்பியது(ஏற்க்கனவே நடேசரும் செல்வனுக்கும் ஆகாது.செல்வனுக்கு சிரிப்பதை தவிர எதுவும் தெரியாது. நடேசருக்கு சிரிக்கவே தெரியாது.) உடன் நடேசன் தான் தலமையுடன் கலந்து உரையாடிவிட்டு நளைக்கு சொல்வதாக கூறிவிட்டு அந்த கூட்டத்தை விட்டே போய்விட்டார். பின்பு செல்வனுடன் அவரது பொலிஸ் பாணியில் வாய் சண்டையிட்டு விட்டு அங்கு வா என சொல்லிவிட்டு மறுநாள் தேசியத்திடம் போய் ஓதிவிட்டார். அந்தளவுக்கு இவரது சமூக பற்று. அன்று பிடித்ததுதான் செல்வனுக்கு சனி. ஆகவே ஏலாத ஒரு துறையை நடேசர் ஏற்றுகொண்டு தடம் புரள்வது அவரது பேச்சில் தெரிகிறது.
santhanam
இந்தியா புலியை இன்று அழிப்பதற்கு மட்டுமல்ல, அன்று உதவியின் பெயரால் வளர்த்து அழிப்பதற்கும் தான் உதவியது. இன்றைய ‘ஈழத் தமிழர் ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடும் இந்திய தமிழர்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் நாமும் கரம் கோர்க்கின்றோம்” என்ற போராட்டங்கள், இந்தியாவையும் ஏகாதிபத்தியத்தையும் தமக்கு உதவக் கோருகின்றது. அதை நிராகரித்தல்ல. இந்தியா இலங்கை அரசின் ஊடாக மட்டும் அழிக்கவில்லை, புலியை ஆதரித்து வளர்த்த தன் சொந்த அரசியல் ஊடாகவும் அழிக்கின்றது.
பார்த்திபன்
இரு தினங்களுக்கு முன் பிபிசி பேட்டியில் நடேசன் தாம் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைப்பதாக ஐ நா பொய் சொல்கின்றது என்றார். ஆனால் நேற்று மனித உரிமை ஆணையம் அதே குற்றச் சாட்டை மீண்டும் வலியுறுத்த தாம் மக்களின் பாதுகாப்பிற்காகத் தான் அவர்களை வெளியேற விடாமல் தடுக்கின்றோம் என்றார். என்னா தத்துவம் என்னா தத்துவம். அப்படியே கண்ணைக் கட்டுது.
அப்போ அவர்கள் உங்களை மீறி வெளியேறும் போது ஏன் போட்டுத் தள்ளுகின்றீர் என்று கேட்டால் அவர்கள் நிம்மதியடைய பரலோகம் அனுப்புகின்றோம் என்று சொன்னாலும் சொல்லுவார்.