இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை ஏற்க மாட்டேன் என இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது இலங்கை அதிபருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ராஜபக்சே அறிவித்தார்.
இந்த அறிவிப்பு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும், உலகத் தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. நாராயணமூர்த்தி பதவியேற்கக் கூடாது என்று கோரிக்கை எழுந்தது. குறிப்பாக கர்நாடக வன்னியர் சங்கம் இந்தக் கோரிக்கையை சற்று பலமாக விடுத்தது. மேலும், சென்னையில் உள்ள இன்போசிஸ் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு தமிழக கட்சிகளும் அறிவிப்பு வெளியிட்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆலோசகர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று நாராயணமூர்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சொந்தக் காரணங்களுக்காக இப்பதவியை நான் ஏற்க முடியாது. இதை முறைப்படி இலங்கை அரசுக்குத் தெரிவிப்பேன் என்றார்.
பார்த்திபன்
நாராயணமூர்த்தி பதவியேற்பதற்கு முதலிலேயே யோசித்து ஒரு முடிவை எடுத்திருக்கலாம். முதலில் பதவியேற்றுவிட்டு தற்போது எதிர்ப்புக்கள் கிளம்பியதால் கைவிட்டாலும், அவரில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளி மறையாது. ஆனாலும் இவர் ஐடி துறையில் இலங்கை அரசிற்கு மறைமுகமாக உதவிகள் செய்வாரென்றே நம்புகின்றேன். காரணம் இலங்கை அரசு இவருக்குக் கொட்டிக் கொடுக்கும் பணம்.
palli
ஜயா எல்லோரையும் தோழர்; கருனா; சங்கரி ;கூட்டு பின்னனி; பிள்ளையான்; கொள்ளையான்; கிழக்கு ; இப்படி பல பலவீனமானவர்கள் போல் எடை போடுவது நல்லாவா இருக்கு. இதனால் தம்மை விட்டால் அரசிடம் தமிழரின் உரிமையை கேக்க நாதி இல்லை என்னும் புலியின் வேதவாக்கை உறுதிபடுத்தலாமா?? மறந்து விட்டேன் அரசு நாராயனனுக்கு மட்டுமா படி அளக்கிறது?? நாராயண நாராயண.
Kullan
வெள்ளைக்காரனிடம் இருந்து மகிந்த நன்றாகப் படித்துள்ளார். எம்மை வைத்தே எம்மை அழிப்பது.
chandran.raja
பதவியை ஏற்காதற்கு மறைமுகபயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் இது வேறு என்னவாம்?