ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி. திஸாநாயக்க எதிர்வரும் 3 மாதங்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொள்வார் என ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன மற்றும் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா ஆகியோர் பாராளுமன்றத்தில் எழுப்பிய வாய்மொழிமூலக் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.