சுகாதார அமைச்சின் உயர் மட்டக் குழுவொன்று திடீர் விஜயமொன்றை மேற்கொ ண்டு நேற்று திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தது.இங்கு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்தக்குழு முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கான மருந்து வசதிகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டது.
இதேநேரம் முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களுக்கென இரண்டு லொறிகளில் கொண்டு வரப்பட்ட மருந்து வகைகளையும் மேற்படி குழு கையளித்தது. மேலும் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுமெனவும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.
நேற்றுக்காலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜித் மென்டிஸ், பாலிக்க மஹிபால, நிமல் ஜெயந்த, கி.மா. சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி என்.ஆர். ராஜின், சுகாதாரப் பணிப்பாளர் ளி. ஞாணகுணாளன், வைத்திய அதிகாரி திருமதி குணாளன் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.