ஓமான், துபாய், கலிபோர்னியாவில் ஆயிரம் தாதியர்களுக்கு தொழில் வாய்ப்பு

sri-lanka-nurses.jpgஓமான்,  கலிபோர்னியா, டுபாய் உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளுக்கும் ஆயிரம் தாதியர்களை இவ்வருடத்தில் அனுப்புவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவர்கள் அந்நாடுகளில் நான்கு இலட்சம் ரூபாவை சம்பளமாகப் பெறுவதுடன் தமது குடும்பங்களையும் அங்கு தங்க வைத்துப் பராமரிக்க முடியுமெனவும் சம்பளத்துடன் இதர சகல சலுகைகளையும் அந்தந்த நாடுகள் வழங்குமெனவும் சுகாதார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இத்திட்டத்த்தின் கீழ் ஏற்கனவே 19 தாதியர் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் இதன் இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் மேலும் 30 தாதியர் ஓமானுக்கு அனுப்பப்படவுள்ள னர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் உட்பட்ட ஆவணங்கள் நேற்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் கொழும்பில் வைத்துக் கையளிக்கப்பட்டன. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அடுத்த மாதத்தில் மேலும் 60 பேர் ஓமானுக்கு அனுப்பப்படவுள்ளதுடன் இவ்வருடத்தில் மொத்தமாக ஆயிரம் தாதியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே சுகாதார அமைச்சின் நோக்கமெனவும் தெரிவித்தார்.இவ்வாறு அனுப்பப்படுபவர்கள் இரண்டு வருட காலத்திற்கு அந்நாடுகளில் கடமை புரிவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    இது கூட ஒருவிதமான நாடு கடத்தல்தான். இருப்பினும் உயிர்வாழ இப்படி ஒரு சந்தர்பமாவது கிடைக்குதே என சந்தோசபட பல தமிழ்மக்கள் ஏங்குவதை எம்மால் நிகாகரிக்க முடியாது.

    Reply
  • பகீ
    பகீ

    கலிஃபோனியாவில எங்க தாதியரை எடுக்கிறான்? கலிஃபோனியா மத்திய அரசு காசு தராட்டி மாநிலமே வங்குரோத்து ஆகப்போகுது எண்டு சொல்லுது. இதில ஸ்ரீலங்காவுக்கு வேலை குடுக்கப்போகுதோ!

    Reply